காளிமுத்து - வாழ்க்கை குறிப்பு


1942-ம் ஆண்டுபபசிவகாசி அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் காளிமுத்து பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள். எம்.ஏ. பி.எச்.டி. வரை படித்து உள்ளார். தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும் பொன்முத்துராமலிங்க தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி' என்றும் பாராட்டி உள்ளார்.தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக் கிய-அரசியல் பேச்சாளர்களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்த தால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ. ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அதி.மு.க.வில்பபசேர்ந்தார்.1977, 1980 ஆகிய ஆண்டு களில் நடந்த தேர்தலில் திருப் பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.அமைச்சர்1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை விவசாய துறை அமைச்சராகவும், 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.இதையடுத்து அவர் சபா நயாகராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாள ராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரண மாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவ ராக காளிமுத்து இருந்து வந்தார்.காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள்ளனர்.

_

6 comments:

  1. தேவர் முக்குலத்தோர் தளம்March 17, 2010 at 2:52 AM

    @Srinivasan

    உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி.உங்களுக்கு தெரிந்த தேவர் பற்றிய தகவல்களை thevar.mukkulathor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.மேலும் உங்களது மேலான கருத்துகளையும்,விமர்சனங்களையும் தெரிவியுங்கள்...அது எங்களுக்கு உதவிகரமாய் இருக்கும்.நன்றி

    ReplyDelete
  2. இவரைப்போல் தமிழ் பேசுபவர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
  3. இந்த தலைவர் எந்த சமுதாயம் சார்ந்தவர்.......

    ReplyDelete
  4. அவர் தேவர் என்று ஏற்க்க முடியாது அவருக்கு சாதியே இல்லை

    ReplyDelete