பசும்பொன் தேவர் வரலாறு
உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.
இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார்.
வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர். மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.
திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர.. தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக அழைத்திருக்கிறார். பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.
தவசிக்குறிஞ்சி, பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக் குறிக்கும்.தவசிக்குறிச்சி என்னும் ஊர் இராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் யாரும் நுழையமுடியாத அளவிற்கு விளங்குகிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்.
குடும்ப பரம்பரை :
அதிசிறை மீட்டத்தேவர் -கருப்பாயி என்கிற தம்பதியினர்க்கு நான்கு மகன்கள். வெள்ளைச்சாமி என்ற சிறைமீட்டத்தேவர்
நாகலிங்கத்தேவர், முத்துராமலிங்கத்தேவர், நவநீதக் கிருஷ்ணத்தேவர் இதில் முத்துராமலிங்கத்தேவரை ஆதிமுத்துராமலிகத் தேவர் என வைத்துக்கொள்வோம். இவர் தான் வீட்டை பெரும் உழைப்பால் பெருங்குடியாக்கினார். இருந்தாலும் மிகவும் நேர்மையாளராகத் திகழ்ந்தார்.
ஆதி முத்துராமலிங்கத்தேவரின் நேர்மையும் நெறிவழுவாத தன்மையும் கண் இராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி ராஜா நெருங்கிய தொடர்பு கொண்டார். அதன்பிறகு அரண்மணைக்கு சாதாரணமாகப் போகக் கூடிய உரிமை அவருக்கு மட்டும் இருந்து வந்தது. இதனால் பெரும் ஜமீன்தார் ஆகும் அளவிற்கு ஆதிமுத்துராமலிங்க சேதுபதிராஜா அவர்கள் நிலபுலன்கள் கொடுத்து ஜமீன்தார் ஆக்கினார்.
தேவர்த்திருமகனுக்கு பெரும் உதவியாக இருந்தவர் பிறந்ததும் இக்கால கட்டத்தில்தான் இவர் வேளாளர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் பிறவியிலேயே அனாதையான அவரை ஆதிமுத்துராமலிங்கத்தேவரே வளர்த்து வந்தார். இவரது பெயர் குழந்தைச்சாமி என்ற வைத்திய பிள்ளையாகும். இவர்கள் நான்கு பேர்களில் வெள்ளைச்சாமி என்ற சிறை மீட்டத்தேவர் பொன்னம்மாள் என்பவரை மணந்துகொண்டார். இந்த சிறப்பு பெற்ற தம்பதியினர்க்கு மீனாம்பிகை என்ற மகளும் உக்கிரபாண்டி என்ற மகனும் பிறந்தார்கள்.
காலம் மெல்ல நகர்ந்து வெள்ளைச்சாமி தேவர் பெரும் செல்வந்தரானார். அதாவது (32 1/2) முப்பத்திரண்டரை “கிராம அகில்தா” என்ற சிறப்பைப் பெற்று விளங்கியது. இதனை முழுமையாக செயல்படுத்தும் திறமையுடையராய் உக்கிரபாண்டித்தேவர் செயல்பட முடியவில்லை எனவே ஆதிமுத்துராமலிங்கத்தேவர் சொந்தப்பிள்ளையாக வளர்த்து வந்த வைத்திய பிள்ளை அவர்களை உதவியாளராக நியமித்தனர்.
பெரும் குடும்பங்களில் இரண்டு மூன்று முறைப்பெண்கள் இருந்தால் பெண் திருமணம் செய்வதில் பெரும் சண்டை வரும் எனவே உக்கிரப்பாண்டித்தேவருக்கு இரண்டு அத்தைமார்கள் அவர்களிடையே சண்டை வரக்கூடாது என்பதற்காக இந்திராணி என்பவரையும் காசிலட்சுமி என்பவரையும் உக்கிரபாண்டித்தேவர் திருமணம் செய்துகொண்டார். 31.8.1906 ஆம் ஆண்டு ஆவணித்திங்க்ள் 16 ஆம் நாள் அரசர்கள் வீட்டுத்திருமணம் போல் வெகு சிறப்பாக நடந்தது. இதில் திருமணமானாலும் காசிலெட்சுமி என்பது வயதான பருவமடைந்த பெண் என்பது குறிப்பிடத் தக்கது.
அழகிலும் அறிவிலும் அடுத்தவரை உபசரிக்கும் பண்பிலும் சிறந்தவராகவும் பெண்களின் அரசியாகவும் இந்திராணி அம்மையார் திகழ்ந்தார். இருவருக்கும் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜானகி’ எனப்பெயரிட்டார்கள். பெயரிட்ட நாளன்று திருவிழா போல அந்நாளைக் கொண்டாடினார்கள். குழந்தை ‘ஜனாகி’ வருகையால் உற்றார் உறவினர் எல்லோரும் சந்தோஷ கடலில் மூழ்கினார்கள். ஐந்தாம் மாதம் முடியும் தருவாயில் குழந்தை ஜானகிக்கு விஷக் காய்ச்சல் வந்தது. தான் வசதி என்றால் என்ன பண்ண முடியும். தனது ஐந்தாம் மாதம் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டது குழந்தை ஜானகி.
உக்கிரப்பாண்டித்தேவரும் இந்திராணி அம்மையாரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பலபேர் உலக நடைமுறைகளைப் பற்றி எடுத்துக்கூறி மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பினார்கள்.
முருகப் பக்தி கொண்டவர் இந்திராணி அம்மையார். அந்த முத்துவயல் ஞானியை இந்திராணி அம்மையார் மீண்டும் பக்தியோடு நினைவுக் கூறத்தொடங்கினார். அந்த முருகப் பெருமானின் திருத்தொண்டரான ஞானியை எண்ணி மனங்கலங்கி நீங்கள் அன்று கனவில் தோன்றி நல்வாக்குச் சொல்லி திருநீரு கொடுத்தீர்கள். ஆனால் என் மகள் மறைந்தாளே என்று வாய்விட்டு அழுது வருந்தினார். இந்திராணி அம்மையார் ஏழை எளிய மக்களை மிகவும் நேசமுடன் நடத்துபவர் ஆவார். இளகிய மனமும் இனிமையான குணமும் கொண்டவர் இந்திராணி அம்மையார்
,ஆகவே தேவர் திருமகன் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் காலத்து வந்தவர்தான் நமது தேவர்திருமகன்.முத்துராமலிங்கத தேவர் அவர்கள் பல்வேறு ஆவனங்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிறப்பு :
30.10.1908 ஆம் ஆண்டு தேவர் திருமகன் பிறந்தார். 32 கிராமங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊர்கள் அனைத்தும் கூடி உள்ளம் கனிந்தது.
வீரமும், விவேகமும், நேர்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே வைக்கவேண்டும் என்று அப்பெயரையே தேவர் திருமகனுக்கு வைத்தனர். ஆகவே இவர் முத்துராமலிங்கம் என்று அழைக்கப்பட்டார். குழந்தையின் பாசத்தில் அளவுகடந்த எல்லையைத் தாண்டிய அவ்வம்மையார் தங்க தமிழ் மகனை தனியே விட்டுவிட்டு இறந்துவிட்டார். காலனுக்கு கருணை இல்லையே.
உக்கிரபாண்டியத்தேவர் இதயத்தில் பெரும் இடி விழுந்தது என்றே சொல்ல முடியும். அப்போது இந்துமாதக் குழந்தையே தேவர் திருமகன். அப்போது குழந்தையின் அழுகைசத்தம் கேட்டு உக்கிரபாண்டித்தேவர் வெறுப்படைந்தார். அப்பொழுது அவர் கொண்ட வெறுப்பு உக்கிரபாண்டித்தேவர் இறந்துபோகும் வரையிலும் இருந்தது. ஆகத் தன் வாழ்நாளில் தாய் தந்தை பாசமே அறியாது இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துன்பங்கள் என்பது மழையில் இருக்கும் கல்லை உருட்டி பாதளத்தில் தள்ளிவிடுவது போன்றது அதுபோல் மனிதனின் துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அதுபோல மீண்டும் ஒரு துன்பம் உக்கிரபாண்டித்தேவரை மேலும் தாக்கியது. அவரது இரண்டாவது மனைவியான காசிலெட்சுமியையும் மரணம் வலை வீசிப்பிடித்து இழுத்துக்கொண்டது. குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.
தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியம் பிள்ளை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என அவர் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள். தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்தத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார்.இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்டிமார்கள் :
இந்திராணி தேவியார் இறந்துபோன பிறகு உக்கிரபாண்டித்தேவரின் போக்கில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன.இதற்கிடையில் உக்கிரபாண்டித்தேவரிடம் குழந்தைச்சாமி பிள்ளையைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் சுமத்தி 32 கிராம நிர்வாகத்தையும் பார்த்து வந்த குழந்தைச்சாமி பிள்ளை நீக்கப்பட்டார். இவர் பேச்சாற்றல் மிக்கவர். கணக்கு வழக்குகளை சிக்கனமாக வைப்பதில் கெட்டிக்காரர் என்றும் நல்ல விசுவாசி என்றும் பெற்றிருந்தார். இருந்தும் மிகவும் நன்றியோடு இருந்த குழந்தைச் சாமி இந்திராணி அம்மையார் இருந்திருந்தால் குடும்பம் இவ்வளவு சீரழிந்து போயிருக்குமா? என்று எண்ணி வருந்தினார்.
அதனால் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டி ராணியம்மாள் அவரை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றார்.கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தார்.
சிறுகுழந்தை பருவத்தில் மிகவும் துடிப்புடனும் பொறுமையுடனும் எதையும் நினைத்தால் செய்துமுடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடனும் சிறுவயதிலிருந்தே செயல்பட்டார். சிறுவயதில் ஒரே ஒரு விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்தமானது மரத்தின் உச்சிக்கு ஏறி கால்களை பிண்ணிக்கொண்டு தலைகீழாக தொங்குவது அவருக்கு பிடித்தமான ஒர் விளையாட்டு.
கல்வி வாழ்க்கை :
ஆறுவயதில் தேவர் திருமகனின் கல்வி வாழ்க்கை தொடங்கியது. அக்கால வழக்கப்படி குருகுல வாழ்க்கையைக் கல்வியாக திண்ணைப்படிப்பு தஞ்சாவூர் ஆசிரியர் வாயிலாக கற்றார். மேலும் பல, ஆசிரியர்களிடம் கல்வி பயின்று வந்தார்.1917 ஆம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிசன் ஆரம்பப்பள்ளியில் சேர்ந்து பயின்று வந்தார்.
முத்துராமலிங்கத்தேவர் இயற்கையாகவே பல நல்ல குணநலன்களைப் பெற்றிருந்தார். அவர் இளைமையிலேயே சொல்களை திருத்தமாக பயின்றுவந்தார். அவர் வேலையை அவரே கவனித்துக்கொள்வார். இளமை முதற்கொண்டு திருநீரு பூசும் பழக்கம் தேவர் திருமகன் கடைபிடித்து வந்தாராம். ஆடம்பரமான ஆடை அணிகள்மேல் அவருக்கு விருப்பம் இல்லை. துய ஆடை அணிவதில் ஆர்வம் கொண்டு விளங்கினார்.
தேவர் திருமகனார் தெய்வீகச் செல்வராய் வளர்ந்து பள்ளி வளாகத்தில் ஒளிவிளக்காக நிமிர்ந்து நின்ற காலகட்டத்தில் உக்கிரபாண்டியதேவர் பலவித அனாவசிய செலவுகளை உண்டாக்கிக் கொண்டு வேண்டாத நண்பர்களுடன் நட்பு கொண்டு வருமானத்தையும் மீறிய செலவு செய்தார். சொத்துக்கள் எல்லாம் அழிந்தன. மீண்டும் குழந்தைச்சாமி பிள்ளை அவர்களின் முயற்சியில் மீண்டும் சொத்துக்கள் பெறப்பட்டது.
ஆசிரியருக்கே அறிவுரை :
1924 ஆம் ஆண்டு தெய்விகச் செல்வர் தமது ஐந்தாம் வகுப்பை முடித்தார். உயர்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ( u.c.school ) ஐக்கிய கிருஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தவர்.
ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம்,ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், “நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்….
“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்…மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது ஒன்றுதான்.
அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா…?” _ சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்..
நன்றி ::சர்வதேச தேவர்
.
.
Subscribe to:
Post Comments (Atom)
Nice 👌
ReplyDeleteTevar in sirappu Mikka Nandri
ReplyDelete