சுதந்திர இந்தியாவில் தேவர்




1945 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் முடிந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மருர்து சகோதரர்கள் பிறந்த ஊராகிய நரிக்குடி முக்குளம் என்ற ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் புளிச்சிகுளம் என்ற தேவருக்கு மட்டும் பாதியப் பட்ட கிராமத்தில் தெய்வீகத் திருமகன் தேவர் 1946 ஆம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை தங்கி இருந்தார். அந்த சமயத்தில் அவர் அரசியல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பொது அது சம்பந்தமாக கூட ஏதும் பேசாமல் மௌனம் காத்தார்.

1948 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் தனி இயக்கமாக தொடங்கியதும் தேவர் பார்வர்டு பிளாக்கின் வளர்ச்சிக்காக தன்னை அற்பனித்துக்கொண்டார். அந்த ஆண்டு நடந்த ஜில்லா போர்டு (மாவட்ட நிர்வாக அமைப்பு) தேர்தலில் காங்கிரசை எதிர்த்து கமுதி, சாயல்குடி ஆகிய ஜில்லா போர்டு தொகுதிகளில் முறையே குருவன் செட்டியார் மற்றும் சேதுராமன் செட்டியாரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றி தான் தேவர் மீது காங்கிரஸ் கட்சி வெறுப்படையச் செய்த முதல் நிகழ்ச்சி. பின்னாளில் தேவர் அவர்களின் தேர்தல் வெற்றிகள் காங்கிரசை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றன.

வங்கத்து சிங்கம் நேதாஜியின் பிறந்த நாள் ஜனவரி 23. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 23 ல் தேவர் அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கை தொடங்கப்பட்டது. அதி தேவர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தவறான போக்குகளை சுட்டிக் காட்டி நாட்டு மக்களின் நலன்களுக்காக அரசியல் கட்ட்சிகள், அரசியல் கட்சிகளின் நலன்களுக்காக மக்கள் அல்ல என்பதை தந்தி எழுத்தாற்றலின் மூலம் எடுத்தியம்பிக் கொண்டிருந்தார்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நேதாஜியின் அண்ணன் சரத் சந்தியா போசின் அழைப்பின் பேரில் கல்கத்தா சென்ற தேவர் அங்கிருந்து இந்தியா புலனாய்வுத் துறைக்கும் தெரியாமல் இந்தியா எல்லையை கடந்து சீனா சென்றார். ஏறத்தாழ ஓராண்டு கலாம் தேவர் எங்கே இருக்கிறார் என்ற விபரம் தெரியாமல் இருந்த நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தேவர் "வடகொரியா போர் முனையில் நின்று அந்த யுத்தத்தை நேரடியாக பார்த்து விட்டுத் தான் உங்கள் முன்னாள் நிற்கிறேன் என்று ஆரம்பித்து உலக அரசியல் பற்றி சுமார் 3 மணிநேரம் உரையாற்றினார்.

அந்த விழாமேடையில் தான் தேவர் அவர்களின் உருவ மாற்றத்தையும் மக்கள் கண்டார்கள். அதாவது முகத்தில் பளிச்சென்று விளங்கிக் கொண்டிருந்த மீசை முழுவதுமாக எடுக்கப் பட்டிருந்தது.. எப்பொழுது கிராப் வெட்டியா தலை முடியுடன் காணப்படும் தவர் பாகவர்தர்கள் போல் தொழில் தளி முடி புரளும் வண்ணம் தலைமுடியையும் வளர்த்துஇருந்தார். அவர் இந்தியா எல்லை கடந்து செல்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை இறுதிவரை கடை பிடிக்க எண்ணினாரோ என்னவோ ஆனால் இறுதிவரை எங்கும் அவர் எடுத்துரைக்கவில்லை.

1952 ல் பொதுத்தேர்தல் வந்தது. சென்னை மாகனமானது தமிழகம், ஆந்திரத்தில் சில மாவட்டங்கள், கேரளத்தில் சில மாவட்டங்கள், கர்நாடகத்தில் சில மாவட்டங்கள் சேர்த்து 375 தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது.

அன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் பிறந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகி இருந்தது, இருந்தாலும், தேர்தலில் நிற்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்தாலும், தி.மு.க. நேரடியாக தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த நேரத்தில் பெரியார். ஈ.வே.ரா. அவர்களும் காங்கிரசை எதிர்த்து முழு மூச்சாக வேலை செய்தார். தேவரும் பெரியாரும் ஒரே மேடையில் பல கூடங்களில் பேசியுள்ளார்கள். அப்போது பெரியார் "தேவகுமாரன் பேசுவார்" என்றே குறிப்பிட்டுள்ளார்.

முதுகுளத்தூர் இரட்டை மெம்பெர் தொகுத்து (பொதுவும் ரிசெர்வும் சேந்தது) அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கடம்பூர் சட்ட மன்ற தொகுதி கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்ட மன்ற தேர்தலிலும் தேவர் போட்டியிட்டு இரண்டிலும் அமோக வெற்றி பெற்றார்.

1952 தேர்தலின் போது தான் தேவர் அவர்களிடம் பி.கே. மூக்கைத் தேவர் அறிமுகப்படுத்தப்பட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் பார்வர்டு பிளாக் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது பணபலமும், ஆள் பலமும், செலவாகும் பெற்றிருந்த தேனி என்.ஆர். தியாக ராஜன் காங்கிரஸ் வேட்பாளராக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார், தேவர் அவர்களின் மின்னல் வேக சுற்றுப் பயணமும் ஆற்றல் மிக்க பேசும் பி.கே. மூகையாத் தேவரை வெற்றி பெறச் செய்தது.

1952 ல் பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்ற தேவர், சட்டமன்ற உருஓஇநராக பணியாற்றிட எண்ணி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார். அதனால் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் நடைபெற்றது. காகிராஸ் சார்பில் மறவர் இனத்தை சேர்ந்த திருமதி. இராசாத்தி அம்மாளுக்கு எதிராக செட்டியார் இனத்தை சேர்ந்த எம்.டி. இராமசாமி யை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் தேவர் ஜாதிகளைக் கடந்து தேச நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தார் என்பது நன்கு புலனாகும்.

1955 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளத்தில், ஆன்மீக ஞானி ஆறுமுக நாவலர் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் கோவில் கும்பாபிசேக விழாவில் அங்கு வாழும் கிருஸ்தவர்களால் கழகம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது. இதை கேள்விப்பட்ட தேவர் அந்த கும்பாபிசேக நிகழ்ச்சிகள் கலந்துகொண்டார். தேவரின் வருகையை ஒட்டி அங்கு இந்து பெருமக்கம் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர். அசம்பாவிதன் ஏதுமின்றி விழா அமைதியாக முடிந்தது. அந்த விழாவில் தேவர் யானை மீது பவனி வந்தார். அந்த விழாவின் இறுதியில் தேவர் சர்வ மதங்களும் இறைவன் என்ற வீட்டுக்குள் போகும் வேறு வேறு பாதைகள்தான் எல்ல மதத்தினருக்கும் தங்கள் மதத் தத்துவங்களை பேசுவதற்கும் பரப்புவதற்கும் உரிமை உண்டு. ஆனால் எந்த மதத்தின் நிகழ்ச்சியையாவது அடுத்த மதத்தவர் தடுத்தி நிறுத்திவிடலாம் என்று நினைத்தால் அது தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று பேசியதிலிருந்து எல்லா மத்தின் மீதும் தேவர் வைத்திருந்த பற்றுதலை வெளிப்படுத்தியது.

1956 ஆம் ஆண்டு மதுரை மீனாச்சி அம்மன் ஆலயத்தில் ராஜாஜி அவர்கள் எழுதிய வியாசர் விருந்து என்ற நூல் வெளியீட்டு விழா நடந்த பொது தேவர் அதில் கலந்து கொண்டார்.தேவர் பேச எழுந்த போது ராஜாஜி அவர்கள் வியாசர் விருந்து புத்தகத்தின் மீது கையை வைத்து அது பற்றி மட்டும் பெச்சும்படி சைகை காட்டினர். அதை புரிந்து கொண்ட தேவர் "அடியேன் எடுத்துக்கொண்ட பொருள் மீது எல்லை தாண்டாமல் பேசும் பழக்கம் உள்ளவன்" என்று கூறி தந்து உரையை ஆரம்பித்தார்.


"காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் - துரியோதனன்
காமத்தின் மூலம் அழிந்தவன் - இராவணன்"

என்பதை பொருளை மையமாக வைத்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றும் தன் மனிதனின் அழிவுக்கு காரணம்; மண்ணாசையையும், பொன்னாசையையும் சேர்ந்தது தான் காஞ்சனம்; பெண் ஆசை காமம். காஞ்சன ஆசை தான் தான் துரியோதனனை அழித்தது. அதுவே மகாபாரதம். காமம் இராவணனை அழித்தது. அதுவே இராமாயணம். வியாச முனிவர் எழுதிய மகாபாரதத்தை நாம் யாவரும் அறியும் வண்ணம் ராஜாஜி அவர்கள் வியாசர் விருந்தினை நம்மக்கு தந்திருக்கிறார்" என்று நீண்ட சொர்பெருக்காற்றினார். இராஜாஜி உட்பட அனைவரும் தேவரின் ஆன்மீக ஞானத்தை வியந்து பாராட்டினார்கள்.

1957 ல் இரண்டாவது பொதுத்தேர்தல் வந்தது. அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியானது, 10 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரட்டை மெம்பெர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியாக மாற்றப்பட்டது.1952 ஐ போலவே முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்ட திவா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இரண்டிலும் வெற்றி பெற்றார். இந்ததடவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். இடைதேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த டி.எல். சசி வர்ணத் தேவரை நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்.
1957 ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரத்தில் இம்மானுவேல் பரமகுடியில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. 1959 ஜனவரி 7 ஆம் நாள் நீதிபதி அனந்தநாராயணன் தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை, இம்மானுவேல் கொலைக்கும், தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று நிரூபிபதர்க்குக் கூட சாட்சியம் இல்லை என்று கூறி தேவரி விடுதலை செய்தார்.

1957 செப்டெம்பர் 28 ஆம் நாள் காங்கிரஸ் சீர்திருத்த கட்சியை இந்திய தேசீய ஜனாயகக் காங்கிரஸ் கட்சியாக உருவாக்கம் செய்ய மதுரை தமுக்கம் மைதானத்தில் மாப்பெரும் மாநாடு நடைபெற்றது. அதில் தேவர் பேசிய பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரசுக்காக தான் உழைத்தது, காங்கிரசை விட்டு ஏன் வெளியேற நேரிட்டது? தென்னாட்டில் தனக்கு வளர்ந்துவரும் செல்வாகினைக் குறைக்க அன்றைய அரசு ஒருதலை பட்சமாக நடந்துவரும் விதம், இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் ஏன் வளர்ச்சி பெற வேண்டும்? என்பதோடு உலக அரசியல் பற்றியும் நீண்ட உரை ஆற்றினார்.

மாநாட்டை திறந்துவைத்து பேசி முடித்து இரவு பத்து மணிக்கு தனது இருப்பிடம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த தேவர் அவர்கள் மதுரை கொரிபாலயத்தில் இன்று தேவர் சிலை கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இடத்தை தானி வந்த போது கைது செய்யப்பட்டார். எதற்காக கைது என்று கேட்ட போது, காவல் துறையினர் பாதுகாப்புக்கு சட்டத்தின் கீழ் கைது செய்வதாக கூறினார்கள். தேவர் அவர்கள் மறுப்பு ஏதும் சொலாமல் "மக்கள் அமைதி காக வேண்டும் " என்று மட்டும் கூறி வேனில் ஏறினார்.

பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தேவருக்கு குற்றச்சாட்டு எழுது மூலமாக தரப்பட்டது. அந்த குற்றச்சாடுகளுக்கு தேவர் எழுத்து மூலமாக, தகுந்த பதிலை ஆதாரங்களுடன் சென்னை அரசாங்கம் நியமித்த அட்வைசரி போர்டுக்கு அனுப்பி வைத்தார். அதை மேற்படி போர்டு மறுக்கவும் இல்லை, அங்கிகரிக்கவும் இல்லை

1959 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பாராளு மன்றத்தில் ஆங்கிலத்தில் இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் உள்ள குறை பாடுகள், காமன்வெல்த்தில் இந்திய தொடர்பு கொண்டதினால் வரும் இன்னல்கள், காஸ்மீர் விவகாரம், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் சர்வதேச அரசியல் பற்றி தமக்கு ஒதுக்கப்பட்ட பதினைந்து நிமிடங்களோடு மேலும் ஐந்து அனுமதி பெற்று அனைவரும் வியக்கத் தக்க வகையில் உரையாற்றினார்.தேவர் பேசி முடித்த பின்னர் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களோடு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் சேர்ந்து பாராட்டி கை குளுகியதிலிருந்து அவரது கருத்துக்கள் எந்த அளவுக்கு பாராளு மன்றத்தில் எதிரொலித்தது என்று நன்கு விளங்கும்.

1956 ஆம் ஆண்டு மார்ச் 26 ல் மதுரை நகராட்சி தேர்தல் நடந்து. அந்த தேர்தலில் தேவரின் ஆசியுடன் தொடங்கப்பட்ட ஜனநாயக காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணி அமைத்து காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு காங்கிரசஸ் கட்சியிடமிருந்த நகராட்சியை கைப்பற்றின. தேவசகாயம் என்பவர் நகர சபை தலைவரானார். தலைவரான தேவசகாயத்தை "தேவர் சகாயம்" என்று மக்கள் பாராட்டினார்கள்.

அருப்புக்கோட்டை தொகுதி பார்வர்டு பிளக்கை சேர்ந்த எம்.டி. இராமசாமி திடிரென காலமானதால் அந்த தொகுதிக்கு இடைதேர்தல் வந்தது. தேவர் அவர்கள் சௌடி சுந்தர பாரதி என்ற தேவாங்கர் இனத்தை சேர்ந்தவரை பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.

1959 ல் இருந்து தேவரின் உடல் நலம் குன்ற ஆரம்பித்தது. மதுரையில் இருந்த தேவர் திருசுய் சென்று அங்கு பழம்பெரும் தேசபக்தர் பி.இரத்தினவேல் தேவர் இல்லத்தில் மேல் மாடியில் தங்கி ஓய்வும் சிகிச்சையும் பெற்று வந்தார்.
1962 ல் பொதுத் தேர்தல் வந்தது. 14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜயும் ஒரே மேடையில் தோன்றினார்கள். நீண்ட நாட்களாகிவிட்டன அடியேன் உங்களின் ஒருமிப்பு சக்தியில் நின்று பேசி" யன்று  தனது உறைய ஆரம்பித்த தேவரின் பேட்சில் உதிர்ந்த முத்துக்கள் பின்வருமாறு.

பதவியை நான் நினைதவனுமல்ல; அப்படி நினைத்திருந்தால் அது என்னை பொருத்தவரையில் மிக எளிது.

தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூத்தி செர்தனில்லை நான். தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செயும் கூட்டத்தைச் சேர்த்தவன் நான்.

நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.

நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ் காரர்களின் எதிர்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.

18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்பு வாதியாக முடியும்.

தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை மக்கள் தெரிந்து கோளாமல் இல்லை.

எதிர் கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று. இரு கண்களும் சம சக்தியோடு செயல்பட்டாலன்றி ஜனநாகயம் வலிமையோடு நடக்க முடியாது.

உங்கள் தலை விதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது. காசுக்காக காத்திருக்காமல் அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.

மேற்கண்டவாறு மணிக்கணக்கில் தனது பேச்சாற்றலால், மக்களின் உளங்களை தன் பால் ஈர்த்த தேவர் அவைகளின் கடைசி பேசும் அதுவே. ஆம் அதன் பின்னர் அந்த மனிதருள் மாணிக்கம் விண்ணகம் செல்லும் வரை எங்கும் பேசவில்லை.

1962 ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொகுதிக்கு ஒரு நாள் கூட செல்லாமல் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தேவர் வெற்றி பெற்றார். தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆறு மாத காலத்திற்குள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறினால் அவர் தம் பதவி பரி போய்விடும். நோயின் உபாதையால் அவதிப் பட்டுகொண்டிருந்த தேவர் அவர்கள் குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள டில்லி செல்ல இயலவில்லை. இருப்பினும் பாராளுமன்றம் அவருக்கு மட்டும் அவர் எப்போது வேண்டுமானலும் வந்து பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்று விதிமுறையை தளர்த்தியது.

1963 அக்டோபர் திங்கள் 29 ஆம் நாள் அதிகாலையில் மதுரை திருநகர் இலத்தில் அவரது உடலை விட்டு அவர்தம் ஆன்மா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்றது. அவரது மறைவுச் செய்தி கெட அணைத்து கட்சியினரும் தங்களது கட்சிக் கொடியினை அரைக் கம்பத்தில் பறக்க விட்டனர். பத்திரிக்கைகள் அனைத்திம் இரங்கல் செய்தி வெளியிட்டன. தேவர் உடல் பசும்போன்னிர்க்கு கொண்டுவரப்பட்டது. லட்சோப லட்சம் மக்களும் பெரியோர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மறுநாள் மாலையில் யோகிகள் அடக்கம் செய்யும் முறையில் தெய்வத்தோடு ஐக்கியமாகிவிட்ட தேவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆண்டு தோறும் ஆன்மீகப் பெரியவர்களும், அரசியல் வல்லுனர்களும், பசும்பொன்னில் தேவர் நினைவாளையத்தில் நடைபெறும் குரு பூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். அதோடு லட்சக்கணக்கான மகள் தங்களின் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வலிபடுவதைபோல, மொட்டையடித்து, முளைப்பாரி சுமந்து, திருநீறு பூசி, வழிபடுகின்றனர். நினைவிடத்தில் புண்ணிய நீர் எடுத்துவந்து தமது இல்லங்களிலும், வயல் வெளிகளிலும் தெளித்து ஆராதனை செய்கின்றனர் இத்தகைய வழிப்பாடு முறைகள் தேவரின் த்ருவாகாம் தேசியமும், தெய்வீகமும் அவரது இரு கண்கள் என்பதை இந்த உலகம் உள்ள அளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

வாழிய தேவர் புகழ்.

நன்றி : ஏனாதி. கா. கோவிந்தசாமி , வழக்கறிஞர், கௌரவத்தலைவர்,
ஆபநாடு மறவர் சங்கம், முதுகுளத்தூர்.

_

No comments:

Post a Comment