முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை - 2




மாமேதை தேவரவர்கள் 1959 அக்டோபர் 10-ம் நாளன்று பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோயில் 12-வது நவராத்திரி ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.
ஆயிரமாயிரமாய்த் திரண்டிருக்கும் தெய்வீகச் சீலர்களே!

இன்று சக்தி என்னும் பொருள் பற்றி பேச வேணுமாயப் பெரியோர்கள் கூறியிருந்தனர். ஆனால், பேசுதல் என்பது ஒன்றுக்கு உட்பட்ட பொருள் அல்ல. சக்தி என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வது நல்லது என்றாலும், பேசுதல், எழுதுதல் என்று வைத்திருக்கிறார்களே அது ஏன்? என்பதுதான் மனிதனுடைய அறிவிற்கு வேண்டுகிற ஒரு சர்ச்சை.

முடிவான ஒன்றை நாம் காண்பதற்கு, முடிவற்ற ஒவ்வொன்றை ஏணியாக வைத்து அறிவும் சரீரமும் ஏறுவது இயற்கை. சந்திரனை கேட்டு அழுகின்ற குழந்தைக்கு சந்திரனை தர முடியாது என்பதை உணர்கின்ற பெரியோர்கள். அந்தக் குழந்தையடைய அழுகையை நிறுத்துவதற்காக கண்ணடியைக் காட்டி கண்ணாடியில் சந்திர பிரதிபிம்பத்தை விழச் செய்து. கண்ணுக்கு அங்கே தோன்றுகிற சந்திரனை இங்கே காணும்படியாகச் செய்து அழுகையை அமர்த்துவதைப் போல, பல லட்சம் மைலுக்கு அப்பால் இருக்கின்ற ஒன்றை ஒரு சில அக்குள்ளாக காட்டுவதற்கு கண்ணாடியை உபயோகப்படுத்துவதைப் போல, அது சந்திரனை தந்து விடவில்லை. சந்திரன் உருவத்தைக் கண்டு கண்ட ஆசையை அதே உருவமாக கண்டு ஆசையை அமர்த்துவதற்கு உபகரணமாயிற்று. அதுபோல் முற்றும் துறந்த முனிவர்களும், ஞானிகளும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்ற இடத்தில் அவர்களுக்கும் அப்பால் நிற்கின்ற ஒரு சக்தியை சாதாரண ஜன்மங்களும்அறிவின் பெயரால் அந்த அளவு வாழிவதற்கு பிரயோசனப்பட வேண்டும் என்ற பக்குவத்திறகாக பெரியோர்கள் எழுத்தாக எழுதினார்கள். ஆனால், இதை அவை அடக்கமாக சொல்லுகிற முறையில் வித்வத் சம்பிரதாயமாக நான் சொல்லவில்லை. சாஸ்திரம் சொல்லுகிறது: “உரையாற்ற ஒன்றிற்கு உரையாணும் ஊமர்காள். கரையற்ற ஒன்றிற்கு கரைகாணலாகுமோ, திறையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்கு, புரையற்று இருந்தான் புரிசடையோனே” என்று குறிக்கின்றது சாஸ்திரம்.

இதே இடத்தில் ஒரு மலர் மாலையை நீங்கள் பார்க்கிறீர்கள். இது என்னவென்றால்  முல்லைப்பூ என்று சொல்வதற்கு எல்லோருக்கும் தெரியும். இது எங்கே கிடைக்கிறது என்று கேட்டால் கடையில், எங்கே உற்பத்தி என்றால் நந்தவனத்தில், என்ன விலை என்றால் அதற்கு சரம் இன்னவிலை என்று பொருள். இத்தனையும் சொல்லுகின்ற நீங்கள் இதனடைய மணம் என்ன என்று கேட்டால் நல்ல வாசம் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, முல்லையுடைய வாசத்தை விவரமாக வார்த்தையால் சொல்ல முடியுமா? அதே போல் ஒரு ரோஜாப்பூ. ரோஜாவினுடைய நிறம், இதழ், விலை சொல்லலாம். அதனடைய வாசம் என்னவென்று கேட்டால் அதை சொல்வதற்கு வார்த்தை உண்டா? ஒரு ரோஜாவை நுகர்ந்து பார் என்று தான் சொல்லலாம். நிறத்தைச் சொல்லாம், உள்ளே விதை இருக்கும் என்பதை சொல்லாம், விலை சொல்லலாம், அதனுடைய ருசி என்ன என்றால் புளிப்பு என்று சொல்லலாம். புளிப்பு எப்படி இருக்குமென்றால் சொல்வதற்கு வார்த்தை உண்டா? ஒரு பழத்தை நீ ருசித்துப்பார் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.

இம்மாதிரி கேவலம் சாமான்யமான வாசகங்களுக்கும், சாமான்யமான சனைகளுக்கும், சாமான்யமான ருசிக்கும் சொல்வதற்கு வார்த்தை இல்லை என்கிற நிலைமையில், உலகத்தின் உணர்ச்சி இருக்கிற பொழுது உணர்வால் தெரிய வேண்டிய விஷயங்களை உரையால் புகுத்த வேண்டும் என்று காண்கிற்ற இடம் எவ்வளவு மேல்படி என்று நீங்களே உணர்ந்து கொள்ள வேண்டும்.அம்மாதிரியான நிலையை அடைவதற்கு இம்மாதிரியான அடிப்படையை நாம் கையாள வேண்டியது மிக அவசியம். அதுபற்றித்தான் மகான்கள் இவைகளை கொண்டாடுகின்றார்கள் . 

உதாரணமாக எந்த காரியங்களும் மனிதனுடைய கண்ணுக்கு தோற்றுகின்ற வைகளையெல்லாம் சாதாரணமான நிலைமையில் இருக்கின்றவை. அறிவிற்கு தோன்றுகின்றவைகள்தான் மிக அசாதாரணமாக இருக்கின்றவைகளாகும்.. மேலெழுந்தவாரியாக பார்க்கின்றவைகள் எல்லாம் சாதாரணமான பார்ப்பதற்காக இருக்கின்றவைகள் எல்லாம் மிகச் சிரமப்பட்டு பார்ப்பதற்கு மறைந்து கிடக்கின்ற ஒன்று, அதே நிலைமையை வைத்துத்தான்,”முகத்தில் கண் கொண்டு பார்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்” என்று சொன்னார்கள் பெரியோர்கள்.
ஆனால், எல்லோரும் இந்த முகத்தில் இருக்கின்ற கண்களால் பார்கின்ற பார்வையை வைத்து இதன் மூலம் கிடைக்கின்ற பேராசையைப் பெற்று பொருள் வடிவத்தையோ மற்றும் உள்ள இக்கால வடிவங்களையோ கைப்பற்றி அதன் மூலமமாக வாழலாம் என்கின்ற நிலைமையிலேயே வாழ்நாளை வீணாளாக்கி தங்களுடைய வாழ்க்கையை விருத்தாப்பியத்திற்கும் நோய்க்கும் ஆளாக்கி மரணத்தில் முடித்துக் கொள்வது தான் சகஜமாக இருக்கின்றது என்றாலும், அதைத் தாண்டுவதற்கு உரிய மார்க்கமும் அதற்கு அப்பால் செல்வதற்காக ஒன்று இருக்கின்றது என்பதையும் அங்கே பராசக்தியின் கிருபையால், மகான்கள் உதவியால் சட்டங்கள் வருக்கப்பட்டு, நீதி பண்ணி வைக்கப்பட்டிருக்கிறது.

முகக்கண் கொண்டு பார்ப்பதைத் தவிர வேறு எந்தக் கண்ணைக் கொண்டு பார்க்கமுடியும்? வேறு ஒரு கண் இருக்கிறதாக சொல்கிறார்கள். அது மிகத் தவறு. அது கற்பனை; பிரயோசனமற்ற ஒன்று. இது வீணாக சொல்வதைத் தவிர மற்றது கிடையாது என்று சொல்லுகிற அளவுக்கு பிரச்சாரமாகி நிற்கின்ற நேரம்தான் இன்றைய நாஸ்திக காலம். ஆனால், அது உண்மையா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும்சாதாரண காலம் ஒன்றுண்டு. நித்திரை காலம் என்ற ஒன்றுண்டு. நித்திரை காலத்தில் கண்ணை மூடித்தூங்குவதைத் தவிர பெரும்பாலோர் கண்ணைத் திறந்து தூங்குவதில்லை. ஆனால், பாதி கண்ணைத் திறந்து தூங்குபவர்களும் உண்டு அப்படி சிறுபான்மையோபர், திறந்து தூங்குவோர்களுக்கும்கூட நித்திரை நேரத்தில் பார்வை இருக்காது; இருக்க முடியாது; காது கேளாது; மற்ற அவயங்கள் வேலை செய்யாது.அதே நேரத்தில் சொப்பனம் என்பதைப் பார்க்கிறது. சொப்பனம் பார்க்கின்ற காலத்தில் நல்ல உருவங்களைக் கண்டு மகிழ்ச்சியும்,

மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கு வீதியில் நடைபெற்றது. திரு.பி.டி. ராஜன் தமிழ்ச்சங்க தலைவர் மற்றும் பொன்விழாக் குழு தலைவராக இருந்தார். 10 நாட்கள் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப் பட்டது
பொன்விழாவைத் துவக்கிற வைத்து மூதறிஞர் ராஜாஜி பேசினார். அவர் போசும் போது. 5000 வருடங்களக்கு முன் கலப்பில்லாத ஆரியன் இருந்தான். கலப்பில்லாத திராவிடன் இருந்தான். இப்போதோ ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி கலந்துவிட்டது. இப்போது சிலர் ஆரியன், திராவிடன் என்று பிரிவினை பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

நான்காம் நாள் நிகழ்ச்சியில் பேச வேண்டிய திரு. பி் டி ராஜன் தமதுவாய்ப்பை நிகழ்ச்சியில் இடம்பெறாத திரு. சி.என்.அண்ணாதுரைக்கு தந்து பேச வைத்தார். அவருக்கு முன்பாக சேலத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் மகள் மணிமேகலை என்னும்  சிறுமி பேசினார். அண்ணாதுரை பேசும்போது ” இங்கே அருமையாகப் பேசிய மாணவிக்கு பரிசு என்ற பெயரில் ஒரு புத்தகத்தை கொடுத்து ஏமாற்றி அனுப்பிவிட்டார்கள். அந்தக் காலமாக இருந்திருந்தால். உமையம்மையின் ஞானப் பாலுண்டார் - ஞானம் வந்தது. பேசினார் என்று கதை கட்டியிருப்பார்கள்” என்றார். மேலும் அவர் பேசும்போது, ” இந்த விழாவை துவக்கி வைத்துப் பேசிய ஆச்சாரியார் (ராஜாஜி) கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டால் ஆச்சாரியாரின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது” என்று ராஜாஜியின் பிறப்பை இழிவுபடுத்திக் குறிப்பிட்டார்.இதைக் கேள்விப்பட்டார் தேவர்.

ஆறாம் ஆம் நாள் சேதுபதிகளின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பேச வேண்டியிருந்தது. 5ஆம் நாளே பேச அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கபட்பட்டது, ஆனாலும் பேசினார்.“மேடை மரபுகளை மீறி மேடையை ஆக்கிரமிப்பதும். ஒரு மாது தலைமையேற்றுள்ள போது பேசுவதும் அடியேனுக்கு இது தான் முதலும் கடைசியுமாகும். ராஜாஜிக்கும் எனக்கும் ஆயிரம் கருத்த வேறுபாடுகள் இருக்கலாம். அவரது பிறப்பை, அவரது தாயை இழிவுபடுத்துகின்ற வகையில் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று பேசுவது பொறுத்தக் கொள்ள முடியாது.

இருக்கின்ற இடம் அங்கயற்கண்ணியின் ஆலயம் என்பதையும் மறந்து தான் பெற்ற பட்டத்தை, படிப்பை மறந்து, தான் கொண்ட நாத்திகக் கொள்கையை மட்டும் மறவாமல் பேச வந்தவரைப் பேச விட்டது யார்? ஞானசம்பந்தர் வரலாற்றைக் கதை கட்டியதால் வந்தது என்று பேசலாமா? ஆலயத்தில் இந்த விழா நடப்பதை அனுமதிக்க முடியாது. என்று பேசினார் தேவர்.

பசும்பொன்தேவர் அண்ணாவை சுடு சொல்லால் தாக்கினார் என்பது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு. தேவர் பயன்படுத்திய அதே சொல்லை அண்ணா , ராஜாஜியின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று நளினமாகச் சொல்லிவிட்டார். பசும்பொன் தேவர் யதார்த்தவாதி. பட்டென்று வெளிப்படையாச் சொல்லிவிட்டார்.தமிழ்ச்சங்க நிர்வாகத்தில் இருந்தவர்கள் தன்னிச்சையாக கோவிலுக்குள் நடக்கும் விழா என்பதை மறந்து நிகழ்ச்சி நிரலில் இல்லாதவரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மேடையேற்றியதுதான் முதல் தவறு.தேவரின் எச்சரிக்கையின்படி தமிழ்ச்சங்கம் பொன் விழாவின் மற்ற நிகழ்ச்சிகள் மீனாட்சியம்மன் கோவில் வடக்காடி வீதியில் இருந்து தமுக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.


நன்றி :  பசும்பொன் களஞ்சியம் - தேவரின் சொற்பொழிவுகள். தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம். (பக்கங்கள் : 350-351)


_

No comments:

Post a Comment