சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி சௌபா NIL பத்திரிகைத்துறையில் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிபெற்ற ஜூனியர் விகடனில், வாசகர்களின் பெரும் ஆதரவு பெற்றவை கிராமத்துப் பக்கங்கள்! நாடு விடுதலை அடைந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதும் கிராமங்களின் பல்வேறு பிரச்னைகளும் அந்தப் பக்கங்களில் ஒலித்தன. அதோடு கிராமத்தின் கலாசாரமும் அதில் இடம்பெற்றது. கிராமத்துச் சோகமும் சிரிப்பும் அதில் எதிரொலித்தன. அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்களும் கதைகளாக வந்திருக்கின்றன. அதில், 'செளபா' எழுதிய சீவலப்பேரி பாண்டி தொடர் மிகவும் புகழைப் பெற்றது. அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்கள்... எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய கிராமத்து வீரமகன் ஒருவனின் வாழ்க்கை சில சுயநலவாதிகளால் திசைதிருப்பப்பட்டு, அவன் கொலைகாரனாகிவிட்ட கதை. கதையின் கடைசியில், பாண்டி செத்து வீழ்கிறபோது போலீஸ் அதிகாரி பிரேம்குமார் மட்டுமின்றி நமக்கும் பாண்டியின் இதயத்துக்குள் மனிதநேயம் தெரியத்தான் செய்கிறது. கத்திமேல் நடப்பதுபோல எச்சரிக்கையுடன் எழுதவேண்டிய கடமை செளபாவுக்கு இருந்தது. அதைச் செவ்வனே செய்தார். தெற்கத்திய தீந்தமிழ் நடை அவருக்கு கைவந்தது. தொடருக்கு மேலும் உயிரூட்டியது. விகடன் மாணவர் திட்டத்தில் 'கண்டுபிடிக்கப்பட்ட' செளபா, இன்று தேர்ந்த எழுத்தாளராக உயர்ந்திருப்பது விகடனுக்குப் பெருமை.
_
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment