கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது யார்?

கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது யார்?

May 15 2010one Commented

Categorized Under: வரலாறு

“ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது” என்பது பழமொழி. வணிகராக வந்த வெள்ளையர் முதன் முதலாக வங்கத்தில் கால் பதிய வைத்தனர். பின்னர் ஆற்காடு நவாப்பின் கையாலாகாதத்தனத்தால், தண்டமிழ் கிழவர் நாட்டில் ஆட்சியுரிமையைப் பெற்றனர். 1790 ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ம் நாள் முதல், நாடு ஏகாதிபத்தியரின் முழு ஆட்சிக்குட்பட்டது. தளபதி டொனால்ட் என்பவன் மதுரை ஆட்சித் தலைமை ஏற்றான். நிலவி இருந்த 72 பாளையங்களையும் சிதைத்தான். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், போர்க்கருவிகள் அனைத்தையும் கொண்டு வந்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்று 03.10.1801ல் ஆணை பிறப்பித்தான். இதனால் தமிழகம் ஆங்கிலேயருக்கு முழு அடிமையாகிவிட்டது. இவ்வகையில் மருதுபாண்டியர்கள் இறுதி மன்னர்களாவார்கள்.

கி.பி.5ம் நூற்றாண்டில் ‘புல்லி’ என்ற கள்ளர் கோமகனார் ஆண்ட போது வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் 12 பகுதிகளாக இருந்தது. அவற்றுள், “அறுவர்”,”அருவா வடதலை” என்ற இரு நாடுகளையும் ஆட்சி செய்து வந்தவர் தொண்டைமான் இளந்திரையன் ஆவார். இத்தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவர் தான் சுந்தர பல்லவராயர் என்பவர். இங்கு வேட்டையாடுதல் பொருட்டு தெற்கே வந்தார். மேலும் தன் பூர்வீ க மண் தேடிவந்து சடாமுனி இருந்த ஒரு இடத்தில கோட்டை கட்டினார். இது புதுக்கோட்டை என்று வழங்காலாயிற்று. அப்பகுதி சேதுபதி ஆட்சிக்குட்பட்டு இருந்ததால் சேதுபதிகளோடு மறப்போர் புரிய வேண்டியதாயிற்று. போர் சேதுபதிகளுக்கு வெற்றியாக அமைந்தாலும், இவர் தம் வீரம் ஆண்மை பார்த்து சேதுபதி அவர்களின் மண உறவு சம்பந்தத்தோடு புதுக்கோட்டையில் கோட்டை கொத்தளத்தோடும் மறப்(கள்ளர், மறவர் மற்றும் சேர்வை) படைகளோடும் ஆட்சி செலுத்தி வந்தனர். பின்னர் அது தொண்டைமான் புதுக்கோட்டை எனப் பெயாரகியது.’காட்டிக் கொடுத்தனர்’ என்று தொண்டைமான் வழியினரை களங்கப்படுத்தி, அருமைத் தாயகத்தையே அவமதித்தது மட்டுமின்றி பல வீணர்கள் அதையே புலம்புமாரும் வழிசெய்து சென்றுள்ளனர் சில கோடரிக்காம்புகள்.

எனவே உண்மை வரலாற்றை எடுத்துக்கட்ட வேண்டியது நம் கடமையாகிறது.

வந்தான் பானர்மேன்:

பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காகவும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காகவும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார்கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையும் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள.

இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான்.

பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான்.

ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான்.

இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிடம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்காரர் கும்மி:

வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம்.

Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112)

இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார்.

“புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையானின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.”

“நயமாகப் பேசி விருந்துபச்சாரங்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்று ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

“சர்தார் முத்து பைரவ அம்பலக்காரரும் புதுக்கோட்டைத் தொண்டைமானும் ஆங்கிலேயரிடம் மிகவும் நட்புப் பூணடவர்கள். மறவர் பாளையங்களின் பரம்பரை வைரிகளான கம்பளத்துப் பாளையக்காரர்களை வேம்பென வெறுப்பவர்கள். அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் மறவர் பாளையங்களில் புகுந்து புரிந்து வந்த கொள்ளைகளையும், கொலைகளையும் கேட்டு உள்ளம் கொதிப்படைந்தவர்கள்” என்று அறிஞர் தமிழ்வாணன் தமது நூலின் பக்.208 ல் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

யார் அம்பலக்காரர்?

“முத்து பைரவ அம்பலக்காரர் தூய மறவர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் முன்னோர்கள் இராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை தனியாக பிரிந்தவுடன், அவர்கள் மறக்குல கள்ளர் மன்னராகிய புதுக்கோட்டை தொண்டைமானிடம் பணிபுரிய வந்துவிட்டார்கள்.

தவறானது:

செந்தமிழ் நாட்டின் பழந்தமிழ்க்குடி மறவர் பாளையங்களுக்கு பரம்பரை எதிரியாகவே, வந்து குடியேறியவர்கள் கம்பளத்துக்காரர்கள். தங்களது சுயநலம் காரணமாக நாடு, மக்கள் பற்றிய கவலை இல்லாது இருந்ததோடன்றி வீரவணக்கத்திற்குரிய மறவர் பாளையங்களுக்கு எதிரியாகவும் இருந்தனர். அவர்களின் ஒருவனே வீரபாண்டிய கட்டபொம்மன். அவனை தொண்டைமானின் அருமை நண்பன் என்று ம.போ.சி சொல்வது ஒரு புரட்டுக் கதையே. இதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பயன்படுத்திக்கொள்ளப்பட்டார்.

இதைக்கண்டு தான் “கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன்.

“பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணியம் தமது நூலின் பக். 165 ல்.

இதனை “கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியுள்ள பகுதியால் அறியலாம்.

இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.

நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிடம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன்.

ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்!

பல அடுக்கு மாளிகைகள் கொண்ட அழகான அரண்மனை கொண்டவர்கள் தொண்டைமான்கள், தஞ்சம் என்று வந்தவர் யாராக இருந்தாலும் அஞ்சேல் என ஆதரவு மட்டுமல்ல, தமது உயிரையும் தியாகம் செய்யும் உதார குணம் கொண்ட மறவர்கள். காட்டிகொடுக்கும் கயமைத் தொழில் செய்யும் கைகூலிகள் அல்ல அவர்கள் என்பதை எடுத்துக்கட்டும் வரலாறு பலவுண்டு, ஏடுகள் ஏராளமுண்டு என்பதை அறிஞர் மக்கள் அறிவர்.

இவ்வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல?

வீரமரணமா?

“பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

வணங்காமுடி:

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். இது தான் மறத்தமிழ் மக்களின் தியாகங்களை உறுதிப்படுத்தி மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் கடமையோ?

(கட்டபொம்மனை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், பூலித்தேவன், வெள்ளையத்தேவன், தொண்டைமான் மற்றும் மருதுபண்டியர்களை எப்படி எல்லாம் ம.போ.சி பயன்படுத்தி வரலாற்றை பாழ்படுத்தி இருக்கின்றார் என்று உணரும்போது தான் இப்பதிப்பை , கட்டபொம்மனைப் பற்றிய குறைகூறும் பதிப்பாக இருந்தாலும் அதை இங்கே பதிக்கிறோம். உண்மையில் யாரையும் குறைகூற விரும்புவது நமது நோக்கமும் அல்ல, நாம் அப்படிப்பட்டவர்களும் இல்லை. இருத்தாலும் நரியிடம் சிங்கக் கர்ச்சனை மற்றும் குதறல் தான் எடுபடும் என்பது தான் உண்மை. அதனால் தான் இப்பதிவு.)

எப்படியோ மக்கள் மத்தியில் குழப்பம் உருவாக்கப்பட வேண்டும், அதையே மறுபடியும் மறுபடியும் சொல்லியும் எழுதியும் வந்தால் அது உண்மையாகி விடும் என்று எண்ணுவது அறிவுடைய செயலாகாது. (சமீபத்தில் தஞ்சையில் நடந்த தமிழ் தேசியக் கட்சி (Tamil Nationalist Movement (TMM)) கூட்டத்திலும் சிலர் “தொண்டைமான் வேலை” என்று கேவலமாகக் குறிப்பிட்டது நம் நினைவுக்கு வருகிறது) வரலாற்றை திரித்துக் கூறும் புரட்டர்களுக்கு எதிர்காலம் (இன்று) பதில் சொல்லியே தீரும்.(சொல்லியாகி விட்டது))

மக்களின் தலைவர்:
குன்றமென நாட்டில் உயர்ந்துள்ள தென்னகத் திருக்குலம். தீந்தமிழ் மறக்குலம் புதுக்கோட்டை மன்னருக்கும் அவர் தம் மக்களுக்கும் இம்மியும் களங்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. நீண்ட காலமாக மக்கள் நல்வாழ்வில் தொடர்புடைய தமிழ் மரபிற்கும் களங்கம் ஏற்படுத்தி விட முடியாது.

“மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையினர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!)

எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம்.

தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.

3 comments:

  1. தொண்டைமான் எப்படி இந்துபரவன் ஆனான் இது யாருடைய வேலை

    ReplyDelete
  2. தொண்டைமான் தாண்டா வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்தவன்.

    ReplyDelete
  3. ம.பொ.சி.யை விட, தமிழ்வாணன் பெரிய மேதாவியா? மறவர் நாளையங்களில் புந்து கட்டபொம்மன் எனும் கோழை, கொள்ளையடித்தான். வ்விர மறவர்கூட்டம் பூப் பறித்துக் கொண்டிருந்தது. அத்தகைய மறவர்குல விரோதிக்கு, மருதிருவர் துணை இருந்தனர். உண்மைக்குப் புறம்பாய் எவ்வளவுதான் கூறுவீர்கள்? வெள்ளையத்தேவன் தலைமையில் 5000 மறவர் படை, கட்டபொம்மன் படையில் இருந்தனர். தொண்டைமானைக் காப்பாற்ற, முயன்று, இன பாகுபாடு பண்ணாதீர்கள்.

    ReplyDelete