தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார்.

அப்படி பசும்பொன் பெருமகனார் கேட்டதற்குக் காரணம், இன்று போல் 18 வயது வந்தோரெல்லாம் அன்று வாக்களிக்க முடியாது. யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் பெருமகனார் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “தேவரையா! எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று தாயும் மறுத்த காலம் அந்த காலம்.

அதற்கு மேல் பசும்பொன் பெருமகனார் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் பெருமகனார்.

பசும்பொன் பெருமகனாரின் வழிகாட்டுதலும் தேர்தல் பணிகளாலும் இத்தேர்தலில் காமராஜரின் விருதுநகர் நகரசபை தேர்தலில் வெற்றியும் பெற்றார். ..

செட்டிநாட்டு வட்டாரத்தில் காங்கிரஸ் மானத்தைக் காத்த தேவர், விருதுநகர் வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்று கேள்விப்படுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் வீதியில், ஜில்லா போர்டு தேர்தல் நடந்த சமயத்தில் காமராஜரின் வேட்டியை உரிந்து விட்டு இரண்டு சண்டியர்கள் வேட்டியை இருபுறமும் மிதித்துக் கொண்டார்கள். வேறு இரண்டு சண்டியர்கள் சாணி உருண்டைகளை முகத்தில் எறிந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு மேலாக தற்போது இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டியிருக்கும் தகவல் பசும்பொன் பெருமகனாருக்குக் கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார்.

காமராஜரை சந்தித்து மேலே சொன்னவைகள் உண்மை தானா என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர்.

அன்று இரவு விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் பெருமகனார் பேசினார். அவர் பேச்சில் தீப்பொறி பறந்தது.

“இங்கே இருக்கிற நாடார் உறவின் முறை மகமை கடைக்காரர்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் சில லட்சங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டுவதாக கேள்விப்படுகிறேன். இங்கிருக்கின்ற ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுக்கு வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து போவதை சாதகமாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு நடந்தால் அந்த அறியாமைக்காக அடியேன் வருத்தப்படுகிறேன். நாங்கள் வெள்ளைக்காரர்களையே எதிர்க்கும் கூட்டம், உங்களை எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்கு முடியாத காரியமல்ல. விருப்பமான காரியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1936-ல் நடந்த தேர்தலின் போது காமராஜரை வேட்டியை உரிந்து படுத்திய பாட்டை கேள்விப்பட்டேன். சூழ்நிலை அந்த நேரம் இங்கு நான் வரமுடியாமல் போய்விட்டது. இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன்.

காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார்.

அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் பெருமகனாருடைய ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் வி.வி.ராமசாமி நாடார் கேட்டார்.

அதற்கு கலெக்டர் “உங்கள் வீட்டுக்கோ நடத்தும் பொதுக் கூட்டத்திற்கோ பந்தோபஸ்து கேட்டால் நாங்கள் தாராளமாகக் கொடுக்கலாம். நீங்கள் கேட்பது போல் ஓட்டுக்கேட்கப் போகும்போது போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தால், தேவர் சாதாரண மனிதரல்ல. போலிசோடு நீங்கள் ஓட்டுக் கேட்பதை போட்டோ எடுப்பார். ஜஸ்டிஸ் கட்சி போலீஸை வைத்து தேர்தல் நடத்துகிறது. போலீசாரை வைத்து மிரட்டி ஓட்டுக் கேட்கிறது என்று கோர்டுக்குப் போவார். அதன்பின் எங்கள் நிலை என்னவாகும்” என்று சொல்லி மறுத்தார்.

வி.வி.ராமசாமி நாடார் கிராமங்களுக்குப் போய் ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜ் நாடார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜ் நாடாரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான்.

13 comments:

  1. ஒரு சிறு கும்பலின் பொய் பிரச்சாரத்தின் முகமுடி இன்று ஆதாரத்துடன் கிழித்தெரியப்படுகிறது.
    1936ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராக தீரர் சத்தியமூர்த்தி இருந்தபோது அவருக்கு அடுத்த இடத்தில் செயலாளராக காமராஜர் இருந்தது தமிழக அரசியல் வரலாறை படித்து தெரிந்துகொள்ளலாம்.
    அமைப்பு பணிகளை முழுமையான ஆர்கணைசரான காமராஜரிடம் முழுமையாக ஒப்படைத்தார் அறிவுஜீவியான சத்தியமூர்த்தி.

    அப்போது முதுகளத்தூர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்(ஆதாரம் தி இந்து 7.11.1936.மதுரை பதிப்பு)அந்த காலகட்டத்தில் காமராஜரின் வயது33,தேவரின் வயது28.

    தேவருக்கும்,வீரர் வேலுச்சாமி நாடாருக்கும்,வாய்பூட்டு சட்டம் முதுகளத்தூர் தாலுக்காவிற்குள் மட்டும் போடப்பட்டு இருந்தது.இரண்டு பேருமே ஜில்லா போர்டு உறுப்பினராக போட்டியிட விரும்பியபோது அம் மாவட்டத்தை சேர்ந்த மாநிலசெயலாளர் காமராஜர் தேவருக்கு முதுகளத்தூர் சர்க்களில் நிற்க்கும்படியும் வீரர் வேலுச்சாமிநாடாரை கமுதிசர்க்களில் நிற்கசெய்யும்படி செய்தார்.

    தேர்தலுக்கு பிறகு ஜில்லாபோர்டு சேர்மனாக தனது தீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை வேட்பாளராக சத்தியமூர்த்தி மூலம் அறிவிக்கசெய்தார் அவர் ஜில்லாபோர்டு தலைவரானார் இது வரலாறு.

    அதேபோல் 1946ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது தேவருக்கு ராமநாதபுரம் கிராமம் பொது(முதுகளத்தூர்)தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் இவை அனைத்தும் ஆதாரபூர்வமான உண்மைகள்.

    இந்த உண்மைகளை மறைப்பதற்க்காக சிலர் வதந்திகளையும்,கட்டுகதைகளையும் பரப்பி விடுகிறார்கள்.இதில் ஆட்டுகுட்டிகதை,குதிரைகதைகளும் அடங்கும்.அத்தைகைய மோசடிகளில் ஒன்றுதான் முத்துரங்கமுதலியார் படத்தை போட்டுவிட்டு முத்துராமலிங்கதேவர் படம் என்று சிலர் பொய்யாக பரப்புரை செய்துவருகின்றனர்.
    முத்துரங்கமுதலியார் அவர்கள் பழம்பெரும் தேசபக்தர்.மூதறினர் ராஜாஜியின் தீவிர ஆதரவாளர் முத்துராமலிங்கதேவரைவிட மூத்தவர்,பெரியவர் பக்தவச்சலத்தின் மாமனார்,1938ம் வருடம் இவர் காங்கிரஸின் மாநிலதலைவராக இருந்தார்.

    செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் அவர்களுடன் முத்துரங்கமுதலியார் இருக்கும் படத்தை போட்டுவிட்டு முத்துராமலிங்கதேவர் படம் என்று சிலர் வரலாற்று மோசடி வேலை செய்துவுள்ளனர்.முத்துரங்கமுதலியார்படத்தையும்,முத்துராமலிங்கதேவர் படத்தையும் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது என்பது தெள்ளதெளிவாக தெரியும்.

    இரண்டு படத்தையும் வெளியுட்டு உள்ளோம்.இந்த மோசடியை நம்பி ஏமாந்த அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய பதவி வகித்திருந்தாலும் அய்யோ நாம் ஏமாந்துவிட்டோமே என்று தங்களது செருப்பை எடுத்து தாங்களே அடித்துகொள்ளவும்,

    இந்த மோசடியால் ஏமாந்த அரசியல்வாதிகள்,பத்திரிக்கையாளர்கள்,அனைவருக்கும் இது பொருந்தும்.தமிழ் உலகம் மோசடி பேர்வழிகளின் உண்மை ரூபத்தை இனியாவது உணரும்.

    ReplyDelete
  2. தேவரின் ஆட்டுகுட்டி கதை ஒரு பச்சை பொய் என்று நாங்கள் கூறும் கருத்துக்களில் பகுத்தறிவு உள்ளவர்கள் பார்க்க வேண்டிய ஆதாரங்கள்,1.1936ல் காமராஜரின் பதவி மாநில காங்கிரஸ் கட்சியின் சக்திவாய்ந்த மாநில செயலாளர் பதவி(ஆதாரம் தமிழக அரசியல் வரலாறு)2.முத்துராமலிங்கதேவர் முதுகளத்தூர் தாலூக்கா காங்கிரஸ் தலைவராக இருந்தார்(ஆதாரம் 7.11.1936.தி இந்து மதுரை பதிப்பு)3.நடைபெறாத சம்பவத்தை மாவட்ட அளவிலான 3+1 எம் எல் ஏகளின் தலைவர் முத்துராமலிங்கதேவர் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் பேசி திரிந்துள்ளார்,இந்த பொய்னால் அரசியலில் தேவரால் முன்னேற முடியவில்லை,4MLA பதவிகள் மட்டுமே கடைசிவரை கிடைத்தது.4 தேவரின் பொய்களால் காமராஜருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப்படவில்லை கூட்டணி இல்லாமல் தனித்தே 45%வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் அறியணை ஏறினார் முதல்வர் காமராஜர்.ஆதாரமற்ற பொய்கதைகளை கூறி திரிந்த முத்துராமலிங்கதேவரை மக்கள் புறக்கணித்து அவரது கட்சியின் மாநில அந்தஸ்த்தையும் அவரது சிங்கம் சின்னத்தையும் இழக்க செய்தனர்..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. டேய் உண்மையான வரலாற சொன்னா அதை நீக்கு முட்டா பயலே....

      Delete
  4. ஆட்டுகுட்டி கதை ஒரு பச்சை பொய்

    1936ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்.தனது வெற்றிக்கு முக்கிய காரணமான மிகப்பெரிய ஆர்கனைசரான காமராஜரை கட்சியின் இரண்டாவது பெரியபதவியான ஒரே மாநிலசெயலாளராக்கினார்.

    1936ல் ஜில்லா போர்டு தேர்தல் வருகிறது, அந்த காலகட்டத்தில் முதுகளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவராக முத்துராமலிங்கதேவர் பதவி வகித்தார்(இதைவிட பெரிய பதவியை காங்கிரசஸில் தேவர் எந்த காலத்திலும் பெறமுடியவில்லை)

    ராமநாதபுரம் முதுகளத்தூர் சர்க்கிள் உறுப்பினராக தேவரும்,கமுதி சர்க்கிள் ஜில்லா போர்டு உறுப்பினராக வீரர்வேலுச்சாமி நாடாரும் தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்றார்கள்

    .ஜில்லா போர்டு தலைவராக இருந்த அண்ணல் சவுந்திரபாண்டியன் போல் தானும் ஜில்லா போர்ட் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் குதித்தார் தேவர்.

    தனது தீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை ஜில்லா போர்ட் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு ஜில்லா போர்டு உறுப்பினர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வாகனத்தில் சென்று பார்த்து நிலமையை தனது ஆதரவாளரான குமாரசாமிராஜாவுக்கு சாதகமாக்கினார் மாநிலசெயலாளர் காமராஜர்

    .ராமநாதபுரம் ஜில்லா போர்ட் தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியின் சார்பாக தனதுதீவிர ஆதரவாளரான குமாரசாமிராஜாவை வேட்பாளராக அறிவிக்கசெய்தார் காமராஜர்.இதனை ஏற்றுக்கொள்ள கூடாது என தேவரின் உற்ற நண்பரான வீரர்வேலுச்சாமி நாடார் தேவரிடம் நீங்கள் போட்டி இடுங்கள் நான் ஆதரவு தருகிறேன் அல்லது நான் போட்டி போடுகிறேன் நீங்கள் ஆதரவு தாருங்கள் என கேட்டுஇருந்தார்

    .ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்தேவரே குமாரசாமிராஜாவை முன்மொழிந்து விட்டார்.தான் போட்டியிட்டால் குமாரசாமிராஜாவை தோற்க்கடிக்க முடியாது என்பதே இதற்க்கு காரணம்

    ,வாய்பூட்டு சட்ட வீரரான தனது நண்பர்வேலுச்சாமி நாடாருக்கும் அவர் ஆதரவு அளிக்காமல் பின்வாங்கி விட்டார் தேவர்.இதனால் தான் ஜில்லா போர்ட் தலைவராகும் வாய்ப்பை கெடுத்துவிட்டாரே காமராஜர் என்ற கோபம் தேவருக்கு உண்டு

    அதன் வெளிப்பாடே சுமார் 20 வருடங்களுக்கு பின் பொய்யாக ஒவ்வொரு ஊர்களிலும் ஆட்டுகுட்டி கதை என்ற புளுகுமூட்டைகதைளை கூறித்திரிந்தார் தேவர்

    .இந்த உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் தான் தேவருக்கும் வீரர்வேலுச்சாமி நாடாருக்கும் வாய்பூட்டு சட்டம் போடப்பட்டது ஆதாரம் (தி இந்து மதுரை பதிப்பு) 7.11.1936

    ReplyDelete
  5. ரமேஷ் அண்ணன் சொல்றதுதான் உண்மை.

    ReplyDelete
  6. காமராஜர் ஒரு சிறந்த கறை படாத மனிதர்.

    ReplyDelete
  7. சூப்பர்டா டேய் 1950 கள் பேசுன தேவர் பொய் பேசுனாரான் இப்ப இவனுங்க உண்மை பேசுறானுங்களாம்....டேய் காமராசனுக்கு எப்பவும் மக்கள் செல்வாக்கு இருந்தில்லை அவன் குறுக்கு வழில ஆட்சி புடிச்சது சத்தியமூர்த்தி ராசாசி காலவாரி மேல வந்தது கள்ள நோட்டுக்குஆதரவு கொடுத்தது எல்லாம் பொய் முந்தாநாள் பொறந்த புண்டைங்க சொல்றது உண்மை தேவரின் சொற்பொழிவ கேளுங்கடா

    ReplyDelete
  8. இவ்வளவு மக்கள் செல்வாக்கு இருக்கறவன் ஏன்டா காலேஜ் பையன்ட்ட தோத்தான்....ஆனா காமராசன் சாதிக்கலவரம் பண்ணப்பவும் தேவர் எந்த தேர்தல்லயும் தோக்கல சாத்தினு போங்கடா Especially Ramesh

    ReplyDelete
    Replies
    1. காமராஜர் நீதி , நேர்மையோடு வாழ்ந்தவர். ஐந்து பைசா கூட மக்கள் காசில் செலவழித்து கிடையாது. சின்ன பையன் கிட்ட தோத்தவர்னு சொல்றீயே . அந்த சின்ன பையன் பெயர் நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் , சின்ன பையன் கிட்ட தோத்த காமராஜரின் பெயரை பள்ளி செல்லும் சின்ன பையன் கிட்ட கேட்டாலும் தெரியுமடா.

      Delete
    2. காமராஜர் நீதி , நேர்மையோடு வாழ்ந்தவர். ஐந்து பைசா கூட மக்கள் காசில் செலவழித்து கிடையாது. சின்ன பையன் கிட்ட தோத்தவர்னு சொல்றீயே . அந்த சின்ன பையன் பெயர் நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் , சின்ன பையன் கிட்ட தோத்த காமராஜரின் பெயரை பள்ளி செல்லும் சின்ன பையன் கிட்ட கேட்டாலும் தெரியுமடா.

      Delete
  9. மேலே உள்ள புகைப்படம் அந்த குரூப்பில் உள்ளது தேவர் ஐயா இல்லை அவர் பெயர் பஹானிசிங்

    ReplyDelete