மருது பாண்டியர் குருபூசை தின வாழ்த்துகள்

முதல் இந்திய சுததந்திர போராட்ட தினம்  & மாமன்னர் மருது பாண்டியர் குருபூசை தின வாழ்த்துகளை தேவர் முக்குலத்தோர் தளம் பெருமிதத்தோடு உங்களிடம் இன்றைய தினத்தில் பகிர்ந்து கொள்கிறது.

இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு

வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள்.

வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.

தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்டு தீராத உட்பகை உருவாவதற்கும் காரணமாக  இருந்தார்கள்.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிற உணர்வும், ஊக்கமும், உத்வேகமும்
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உருவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் தென்பகுதியிலும், நடைபெற்றதை யாரும் மறுக்க இயலாது. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதல் குரல் தென்னகத்திலிருந்துதான் எழுந்தது என்பது சரித்திரம் மறைத்துவிட்டிருக்கும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால், இந்தக் கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டங்களும், தங்களின் ஆட்சி, அதிகாரத்துக்கு ஆபத்து வந்தபொழுது ஏற்பட்டவை என்பதால் இவை மக்கள் விடுதலைக்கான போராட்டங்களாகவும், நாடு தழுவிய ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாகவும் அமையவில்லையென இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (​IC​HR​ -  Indi​an Coun​cil of Histori​c​al Rese​ar​ch) கருத்துத் தெரிவிக்கிறது. இது அறியாமையின்பாற்பட்ட, உண்மை நிலைமை உணராத கூற்று என்பதை நம்மில் யாரும் ஏன் குரலெழுப்பி மறுக்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

1800-1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் உருவான புரட்சியும், போராட்டங்களும் தமிழ்நாட்டிலும், மலபார், கர்நாடகப் பகுதி வரையிலும் பரவி, குவாலியர் வரையிலும் எட்டியிருந்தது. இந்த ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சியை இந்திய வரலாற்று ஆய்வுக்குழு (IC​HR)​ ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது.

அவர்களுக்கு இந்த மாமன்னர்களின் சுதந்திர வேட்கையும், மக்களை ஆங்கிலேய
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியும் தெரியாமல்
போனதா?


இந்திய வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்களம் கண்ட அரிய, தீரமிக்க நிகழ்ச்சியை இந்திய மண்ணில் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என எந்தச் சூழ்நிலையிலும் மறுத்துவிட இயலாது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1800 -1801) நடைபெற்ற இந்த ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி, ஏன் உரிய முறையில், இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இன்றும் புதிராகவே உள்ளது.

இந்தியாவின் தென்பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அடியெடுத்து
வைத்தார்கள். பின்னர்தான் கொல்கத்தா சென்றார்கள்.எனவே, ஆங்கிலேயர்கள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த இந்தத் தென்பகுதியில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியை முதல் சுதந்திரப் போராட்டமாகப் பதிவு செய்யாமல், இதற்குப் பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து வடக்கே நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை (sepoy mutiny)​ இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்...?


இத்தகைய சரித்திரப் பதிவு தென்பகுதி மக்களின் உச்சபட்ச தியாகத்தையும், போராட்டத்தையும் சிறுமைப்படுத்திவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. இந்த உண்மை நிலைமைகளை வெளிப்படுத்துவதால், 1857ம் ஆண்டு நடைபெற்ற
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதக்கூடாது. ஆனால், சரித்திர நிகழ்வுகளை காலத்தவறின்றி (​Chronologi​c​al re​cording)​ வரிசைப்படுத்திப்  பதிவு செய்ய வேண்டும் என்பது சரித்திர ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடாகும்.

தவறான பதிவை நாம் திருத்தி எழுதியாக வேண்டும். தமிழன் செய்த தியாகம் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுவதை நாம் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்? இதில் சில சரித்திர ஆசிரியர்களும், இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழுவும் (IC​HR)​ தவறிழைத்துவிட்டதாகவே கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யன்தான் தன்னுடைய வரலாற்று நூலான "தென்னாட்டுக் கிளர்ச்சிகள்" (South Indian Rebellion:- The first war of Independence, 1800 - 1801) என்கிற ஆங்கில வரலாற்று நூலில் இதுபற்றி சரியாகப் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்தக் கிளர்ச்சியும், புரட்சியும்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்  போராட்டமாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும்  தொடர்ந்தார். (ர.ட.சர். 36714/2006) பின்னர் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவினரிடம் (ICHR)​ தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.


அந்த ஓய்வறியாத வரலாற்றுப் பேராசிரியர் இராஜய்யனை, மாமன்னர்

மருதுபாண்டியர்கள் நினைவு நாளில், வாழ்த்துவதும், வணங்குவதும் தமிழ்
மக்களின் கடமையாகும்.

இந்திய சரித்திர ஆராய்ச்சிக் குழு (IC​HR)​1800 - 1801ம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சி பற்றியும், ஆயுதப் போராட்டங்கள் பற்றியும், போராடியவர்களின் நோக்கங்கள், சிந்தனைகள், தேசியப்பற்று, இந்திய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை என்றே அறிய முடிகிறது.

1800 - 1801ம் ஆண்டில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக,
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மாமன்னர் மருதுபாண்டியர்கள், திருச்சி
மலைக்கோட்டை ஆற்காடு நவாப்பு அரண்மனை வாயிலிலும், திருவரங்கம் கோயில்
வாசலிலும் 1801ம் ஆண்டு ஜூன் 16ம் நாள் ஒட்டிய போர் பிரகடனம் (War De​cl​
ar​ation) வரலாற்றில் பிரசித்தி பெற்றதாகும்.


ஆங்கிலேயருக்கு எதிரான இந்த யுத்தப் பிரகடனத்தில் மருதுபாண்டியர்கள், ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களும் ஆயுதமேந்தவும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவும் தயாராக வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்கள்.

தன்னுடைய ஆளுகைப் பகுதிக்காகவோ அல்லது தன்னிடம் நட்புக் கொண்டவர்களுக்காகவோ மட்டும் அவர்கள் போராடவில்லை. மாறாக, இந்த மண்ணுக்கும், தங்கள் தங்கள் பகுதிக்கும் உரிமை பெற்றவர்களுக்கும் சேர்த்தே போராடத் தயாரானார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. அவர்களது உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.


தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளிக்காதவர்களைக்கூட, அவர்கள் கலந்துகொள்ள
வேண்டும் என மருதுபாண்டிய மன்னர்கள் வற்புறுத்தவில்லை. மாறாக, அவர்கள்
யுத்த களத்துக்குச் செல்லும் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதும் எனத்
தெரிவிக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள், பசிக்குச் சோறு இல்லாமல் சோற்றுக் கஞ்சியே சாப்பிடுகிறார்கள், நம்முடைய கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து கொண்டிருக்கிறது என நாட்டு மக்களுக்குப்  பிரகடனப்படுத்தினார்கள் சிவகங்கைச் சீமையை ஆண்ட அந்தக் குறுநில மன்னர்கள்.

இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து குவாலியர் வரையிலும், தூதுவர்களை
அனுப்பி ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்கள். போர்ப் பிரகடனத்தின் இறுதியில் ஆங்கிலேயர்களின் "அசைக்க முடியாத எதிரி'' என்றுதான் கையொப்பமிடுகிறார்  மன்னர் மருது.

இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போர்ப்பிரகடனம்
பதினெட்டாம் நூற்றாண்டிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ ஆங்கில
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களால் அறிவிக்கப்பட்ட இந்தப் போர்ப் பிரகடனம்
பற்றிய செய்தியையும், ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களையும் அவர்களது
வாரிசுகளையும், சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் போராளிகள் 500 பேருடன்
திருப்பத்தூர் கோட்டையில் கொடூரமாகத் தூக்கிலிட்ட துயரமான செய்திகளையும்,
அப்பொழுது இங்கு பணியாற்றிய இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து, அவரது
வேண்டுகோளின்படி 1813ம் ஆண்டு இங்கிலாந்தில், ஜே.கோர்லே என்பவர்
புத்தகமாக வெளியிட்டுள்ளார். (M​A​H​R​A​DU AN IN​D​IAN ST​O​RY OF THE
BE​G​I​N​N​I​NG OF THE NI​N​E​T​E​E​N​TH CE​N​T​​URY By J.GO​U​R​L​AY )

இந்தப் புத்தகத்தில், மருதுபாண்டியர்களின் குடும்பத்தாரையும், சிறுவர்களையும் போராளிகள் 500 பேரையும் ஆங்கில இராணுவத்தினர், எந்தவிதமான அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் கொடூரமாகத்  தூக்கிலிட்டுக் கொன்றார்கள் என்கிற கொடுமையான செய்தியை இராணுவ அதிகாரி என்பதால் என்னால் வெளி உலகத்துக்குத் தெரிவிக்க முடியாது. எனவே, தாங்களாவது  உலகத்துக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்பத்தான், இந்த நூலை வெளியிடுகிறேன் என்று நூலாசிரியர் ஜே.கோர்லே முன்னுரையில் தெரிவிக்கிறார்.

மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தைக் குறிப்பிடுகிறபொழுது,  கி.பி.85ல் ரோமானியத் தளபதி அக்கிரிகோலா இங்கிலாந்து நாட்டை முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரிட்டானியப் படைகளை ஒருங்கிணைத்து, ரோமானிய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற பிரிட்டானியப் படையிடம், ஆற்றல்மிக்க தளபதிகளில் ஒருவரான கால்காகஸ் (A.D.85 Calg​a​cus' spe​ech to his troops)​ தன்னுடைய படை வீரர்களைப் பார்த்து வீரம் செறிந்த உரை நிகழ்த்துகிறான்.

உணர்ச்சிப் பிரவாகமாக மாறுகிறது பிரிட்டானியப் படை. அந்த வீரம் செறிந்த உரைக்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தை நூலாசிரியர் ஒப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் நேர்மையும், நெஞ்சுரமும், விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாவீரர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனத்தையும், பிரிட்டானியத் தளபதி கால்காகஸ் இராணுவ வீரர்களிடம் ஆற்றிய உரையையும் அவர் ஒப்பிடுகிறார்.

1813ல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜே. கோர்லே மருதுபாண்டியர்களின் போர்ப்
பிரகடனத்தை கி.பி. 85ம் ஆண்டில் பிரிட்டானியத் தளபதியின் உரைக்கு ஒப்பிட்டு இருவரின் சுதந்திர வேட்கையையும், நாட்டுப் பற்றையும், நெஞ்சுரத்தையும் பாராட்டி அந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகப் பதிவு செய்கிறார்.ஆனால், இந்தியாவில் உள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் குழு (IC​HR)​ 1800 - 1801ல் நடைபெற்ற ஆங்கில எதிர்ப்புப் போராட்டத்தை முறைப்படி அங்கீகரித்துப் பதிவு செய்ய மறுக்கிறது.

வேதனையானது, வினோதமானது, வேடிக்கையானது என்றெல்லாம் கூறுவதைவிட மாமன்னர் மருதுபாண்டியர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் இதற்குக் காரணமானது
என்றுதான் நம்மால் கூறமுடிகிறது. எந்தநாடு இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்யும் என்று எதிர்பார்த்தோமோ அந்த நாட்டில் இந்தச் செய்தி உரிய முறையில் வெளியாகி உள்ளது.

ஆனால், எந்த நாட்டில் இந்தச் செய்தி அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட
வேண்டுமோ அந்த நாட்டில், இந்தியத் திருநாட்டில், இந்தச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. தென்னகத்துத்  தியாக வேள்வியை இரும்புத்திரை போட்டு மறைக்கும் இந்த முயற்சியை நாமும் முறியடிக்க மனமில்லாமல் மௌனம் சாதிக்கிறோம்.

இன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் (October 24 (அ) 27,1801).

இந்த மண்ணை நேசிக்கும்,ஏன், இந்த மண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டால், உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் மருதுபாண்டியர்களின் வழிவந்தவர்களின் உணர்வுகள் முற்றிலும் மறைந்து போய்விடவில்லை. அவர்கள் சார்பாக தெரிவிப்பதெல்லாம், மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகரற்ற, உலகம் போற்றும் வீரத்தை போர்க்களத்தில் எதிர்கொண்ட ஆங்கில இராணுவத்தின் தளபதி ஜெனரல் வெல்ஸ் மனம் திறந்து பல படப் பாராட்டினார் - பதிவும் செய்து வைத்திருக்கிறார். (Milit​ary Reminis​cen​ces of Gen.​ Welsh)

அவர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும் சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின்
உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர்
கோர்லே.

எப்படி உதயசூரியனைத் திரையிட்டு மூடமுடியாதோ, அதேபோல, மருதுபாண்டிய
மன்னர்களின் வீரத்தையும், விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும்,சுயமரியாதை உணர்வையும் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவல்ல, எந்த ஆய்வுக் குழுவாலும் மறக்கடிக்க முடியாது.


மக்களின் சுவாசத்துடனும், மண்ணின் மணத்துடனும் கலந்துவிட்ட வீர வரலாறு,
இந்திய சுதந்திரத்துக்கு முதல் குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின்
வரலாறு!



நன்றி: பொன். முத்துராமலிங்கம், தினமணி

_

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 1







......

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 2







....

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 3






....

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 4







.....

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 5







....

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 6

தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழா மதுரை Part 2 - 7







....

THEVAR SPEECH PART-4








.....

THEVAR SPEECH PART 3







....

THEVAR SPEECH PART-2






.....

THEVAR SPEECH-1






....

LORD PASUMPON MUTHURAMALINGA THEVAR -PART 1 BY JAYA TV






...

LORD PASUMPON MUTHURAMALINGAM-PART 3 BY JAYA TV







....

LORD PASUMPON MUTHURAMALINGA THEVAR - FILM PART 2 BY JAYA TV






....

வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது






...

திவான் பாடல் (பார்த்ததிலே)







.....

பாரதி கண்ணமா பாடல்






...

தேவர் மகன்பாடல் (போற்றி பாடடி பொன்னே )











.....

அமரன் பாடல் (சந்திரரே சூரியரே )









.....

சிவலபேரி பாண்டி கதை







....

சிவலபேரி பாண்டி பாடல்







...

யார்டா தேவன் ?

ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா?





முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்று முக்குலத்தோர் சமுதாயம். இந்த சமுதாயத்தினரின் குல தெய்வங்களில் ஒன்று ஒச்சாயி அம்மன். இந்தப் பெயரைத் தழுவி முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெயர்களை வைப்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம்.
ஒச்சு, ஒச்சாயி என்ற பெயர்கள் ஒவ்வொரு முக்குலத்தோர் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படுவதைக் காணலாம். முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தையின் பெயர் ஒச்சாத் தேவர் என்பதாகும்.

இப்படி முக்குலத்தோர் சமுதாயத்தின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயரை தமிழ்ப் பெயரா என்று கேட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு.

உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ. ஆசைத்தம்பி என்பவரது இயக்கத்தில்உருவாகியிருக்கும் படம்தான் ஒச்சாயி. புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தமிழ்ப் பெயர்களில் அமைந்த திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி சலுகையை தர மறுத்து விட்டதாம் தமிழகஅரசு. காரணம், ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று கேட்டு மறுத்துள்ளது.

இது தென் மாவட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வ குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. இதற்கு கேளிக்கை வரி விலக்கும் அளித்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு தமிழ்ச் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயரைக் கொண்ட படத்துக்கு தமிழ்ப் பெயரா என்று கேட்டிருப்பது வேதனை தருவதாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் கூறுகிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். இது மொழிப்பற்றால் கேட்கப்படும் கேள்வியாகத் தோன்றவில்லை, ஆதிக்கம் செலுத்துவோர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன்.

எனக்கு மட்டுமல்ல, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.

ஒச்சாயி தமிழ்ப் பெயர்தான்-தா.பாண்டியன்

இந்த நிலையில், ஒச்சாயி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.

ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி - தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம். தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

'ஒச்சாயி'' என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும். எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 நன்றி :
http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/tamil-cinema-ochayi-tamil-tha-pandian.html

Thevar Jayanthi 2010



Thanks &Regards A.R.Murugesa Boopathy Thevar




தேவர் ஜெயந்தி 30 அக்டோபர் 2010

                                                            படம்: முருகேச பூபதி தேவர்

முக்குலத்து உறவினர்களான தேவர்கள் அனைவருக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதில் தேவர் முக்குலத்தோர் தளம் மகிழ்ச்சியடைகிறது...!

தேவர் ஜெயந்தி வாசகங்கள்:

நாங்கள் ஆளப்பிறந்த கூட்டம்
யாராலும் அடக்கியாள முடியாது
அடக்கநினைத்தாலும் அது முடியாது
ஆர்ப்பரிப்போம் பசும்பொன்னில்
ஆட்சியை பிடிப்போம் தமிழகத்தில்...!

மூவேந்தர் வழிவந்த முக்குலத்தோர்
முத்துக்குளிக்கும் பசும்பொன் சமுத்திரத்தில்
முரசுக்கொட்டி முழக்கமிட்டு
முத்தமிழ் நாட்டை மீட்டெடுப்போம்...!

வாளெடுத்த கூட்டம் நாங்கள்
வாலாட்ட நினைக்காதே
வெள்ளோட்டம் காட்டினால்
உன் நிலைமைதான் தள்ளாட்டம்...!

பச்சோந்திகளை விரட்டியடிக்கும்

பயமறியா பாசக்கூட்டம் - நாங்கள்
பதுங்கி நிற்கும் புலிக்கூட்டம்
பாய்ந்து வந்தால் நீயும் ஓட்டம்...!


வீறுகொண்ட கொண்டு சீறிப்பாயும்
வில்லும் வேலும் வாளும் தாங்கிய
வீரம் விளைந்த வெற்றிக்கூட்டம்
எங்களிடம் யார்மோதினாலும் வெற்றிடம்...!

 எக்குலத்தையும் ஆளப்பிறந்த
முக்குலத்து தேவர் வம்சம்
அடக்கி ஆளப்பிறந்த கூட்டம்
ஆர்பரிப்போம் பசும்பொன்னில்
அக்டோபர் முப்பதில்...!

வீராப்பாய் பேசித்திரியும் வீணர்களை விரட்டியடித்து
வீற்றிடுவோம் மூவேந்தர் ஆட்சியினை
வீரத்தமிழ் நாட்டினிலே வெற்றிக்கொடியை பறக்கவிட
வீரமுழக்கமிட்டு வெகுண்டெளுவோம் பசும்பொன்னுக்கே ...!


தேவர் ஜெயந்தி இணைய நேரலை:

தேவர் ஜெயந்தியினை இணையத்தில் நேரலையாக வெளிநாடு வாழ் முக்குலத்தோர் கண்டு மகிழ  இங்கே சொடுக்கி அக்டோபர் முப்பது அன்று நேரடியாக பார்க்கலாம்.(http://www.nttv24x7.com/)

தேவர் ஜெயந்தி மைய நோக்க காணொளி: 


தேவர் ஜெயந்தி மைய நோக்க பாடலை இங்கே சொடுக்கி யூ டியூப் வாயிலாக பார்க்கலாம்.(http://www.youtube.com/watch?v=LtsDn1ywQEY)


எக்குலமும் நலமாய் வாழ்க, முக்குலமே தமிழகத்தை ஆள்க...!


#



பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்





ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
 
ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். 

தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.


ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.


அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை  ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.



நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.

 
உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்...? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.

       - பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் 


நன்றி: திரு. துரைராஜ் கண்டியர், தலைவர், பசும்பொன் நுண்கலைக் கழகம், சென்னை.
மூல நூல்: பசும்பொன் நுண்கலைக் கழகம், பசும்பொன் அறக்கட்டளை நிர்வாகிகளின் முகவரி கையேடு 2009 - 2010.

கீழத்தூவல் தேவரின ஐவர் படுகொலை


1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரை காவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற தினத்தை தேவர் சமூகத்தினர், கீழத்தூவலில் ஆண்டு தோறும் செப்டம்பர் பதினான்காம் நாள் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

வரலாற்று பக்கங்களில் மறைக்கமுடியாத உண்மைகள் சில:




தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய, அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.

கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே" அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.

அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத சோதனை நடத்திய பின் ரகசியமாய் போலிசாரே எரித்து விட்டனர். இதுதான் இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.



கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும் காங்கிரச அரசின் கொலைவெறி

கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.


காங்கிரஸ் அரசின் வெறித்தனம்

மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.


தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய காங்கிரஸ் :


இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன.

இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது.

தேவரை கைது செய்து மகிழ்ந்த காங்கிரஸ்:

தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.

_

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

-பி.ஏ. கிருஷ்ணன்




“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.
 
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.


புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.

உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
 
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
 
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”


மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
 
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்


அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:



1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

2. Military Reminiscences - James Welsh 1830 London

3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய 'காலச்சுவடு' இணையதளத்திற்கும் மற்றும் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் 'பி.ஏ. கிருஷ்ணன்' அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
 
_

இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்


இராஜராஜனின் ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறுகிறது:

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்

இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம். அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு ‘மும்முடி சோழ மண்டலம்’ எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.
சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம். அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம். ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
இப்போது அதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லையெனினும், நாகபட்டினம்தான் சோழர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது. அப்போதைய சோழ நாட்டு மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்து வைத்திருந்தனர். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, (அந்த நீரோட்டத்திற்கு வடக்கன் என்று பெயர்) கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். (ஆகையால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன்.) அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள அக்கரைபட்டினம் என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் இராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். இராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல்கள் செல்வதைப் பெருக்கினான். ஆனால் அவ்வழிகளை அமைத்துக் கொடுத்தது இராஜராஜன்தான். அதற்கு முன்னர் கலிங்கர்களும், குஜராத்தியர்களும் அறிந்திருந்தனர்! இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தியது இராஜராஜன்தான் என்றால் மிகையாகாது!
தவிரவும் இராஜராஜன் காலத்தில்தான், வணிகக் குழுக்கள் கீழை நாடுகளுக்குச் சென்று தமது வணிகக் கூடங்களை நிறுவியது. அப்போது தான், பல நாடுகளினின்று வந்த வணிகர்களும்கூடி வணிகத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனமாக மாற்றினர். ஆகையால், வணிகத்தை நாடு கடந்து சிறப்பாக நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்ததில் இராஜராஜனின் பங்கு அதிகம் இருந்தது எனக் கொள்ளலாம்.
முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!

நன்றி :மாய தேவர் ...

hanks to http://www.tamilhindu.com/2010/08/rajaraja-cholans-power-in-sea-route-power/

கரிகாலன்----காரவேலன்-----மௌரியர் படையெடுப்பு

கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.


மூவேந்தர் கூட்டணி
அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.


கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

மௌரியர் படையெடுப்பு
கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

நன்றி :http://muelangovan.blogspot.com/2010/04/blog-post_14.html

குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் - பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார் .

தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;
3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.


நன்றி: http://valavu.blogspot.com/2010/05/6_14.html



....

சிலப்பதிகாரத்தில் சோழ, பாண்டியர் நிலை:

இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது.

வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே.

நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும் (26). நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.]

நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை (27A) ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன் (27B) இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது (28).)

பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.]

thanks : http://valavu.blogspot.com/2010/05/6_14.html


...

தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா

ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது. கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது. இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது. இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான்.ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன். வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன. மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில் சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!

thanks to   http://www.dinamani.com ..



..