இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு
குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது.
அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன்,
கல்லணையைக்கட்டிய கரிகாலன்,
மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே!
உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன.
இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:
கள்வன் ராஜ ராஜன்” என்றும், “களப ராஜராஜன்” என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் – கள்ளரே! ஆவார்.
இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை ”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:—(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.
களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் “தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது” பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:
“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”
பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:
“விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு”(குறள் 775)
பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்.
“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்” (குறள் 774
பொருள்:போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.
மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர்.
தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது.
1. பாண்டிநாடு
2. பல்லவநாடு
3. சேரநாடு
4. இலங்கை
5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்
6. வேங்கி
7. சாளுக்கியநாடு
8. சக்கரக்கோட்டம்
9. கலிங்கம்
10. கங்கபாடி
11. நுளம்பப்பாடி
12. குடகு
13. கேரளம்
14. கொல்லம்
15. மாநக்கவாரம்
16. மாப்பாளம்
17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்
18. கடாரம்
19. சாவகம்
20. இலாமுரிதேசம்
21. சிறீவிசயம்
22. கருமனம்
23. புட்பகம்
24. யவனம்
25. மிசிரம்
26. காழகம்
27. புட்பகம்
28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்
29. அங்கம்
30. வங்கம்
31. கோசலம்
32. விதேகம்
33. கூர்சரம்
34. பாஞ்சாலம்
35. இடைதுறைநாடு
36. வனவாசி
37. கொள்ளிப்பாக்கை
38. மண்ணைக்கடக்கம்
39. மதுரமண்டலம்
40. நாமணக்கோணை
41. பஞ்சப்பள்ளி
42. மாசுணிதேசம்
43. ஒரிசா(ஒட்ட விசயம்)
44. சுமத்ரா தீவிலுள்ள விசையம்
45. பண்ணை
46. மலையூர்
47. இலங்கா சோகம்
48. இலிம்பிங்கம்
49. வளைப்பந்தூறு
50. தக்கோலம்
51. மதமாலிங்கம்
ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது. சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது.
வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை எ ன்று வரலாறுகூறுகிறது.மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர்மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும்,கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது. வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, “சேனர் பரம்பரை” ஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.(”தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்.
““களவர்” என்ற வார்த்தை மருவி “களபர்” என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர். இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.
மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.
அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:
பாடல்: “மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்………………..”
பொருள்:
1)அம்பெய்யும் பொறி
2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி
3)கல்லெறியும் கவண்
4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய்
5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம்
6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை
7)கல்லும் கவணும் வைக்கும் கூடை
8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில்
9)சங்கிலி
10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி
11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 1
2)திடீரென பாயும் அம்புக்கூட்டம்
13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி
14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம்
15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள்
16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம்
17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள்
18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள்
19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள்
20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.
கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய “தொண்டைமான் வம்சாவளி” என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது. தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று “இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-
1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி” என்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் “தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சி” என்று பாடியுள்ளார்(இ.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)
2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)
3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர்.
4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்)
5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.
6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.
7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..
8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்
கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன.
இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். “களப” என்ற வார்த்தையும் “கள்வன்” என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் “களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய “கள்வன்” என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே ஆவர்
நன்றி திரு.சம்பந்த மூர்த்தி மழவராயர்
கப்பலோட்டிய தமிழன் யார்?
“தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு
ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை “சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்” என்று “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.
அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்? ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?
வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!
தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.
1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.
தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல, நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.
“சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி” என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும், செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – “தேவர் முரசு”, செப்டம்பர் 1981.
(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)
என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.
வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால், தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம், ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது, என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?
சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும், அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன? ஏன்?
தேசியச் செம்மல்:
1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம், அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.
இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான், தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).
இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?
எந்த அடிப்படையில் எழுதினார்?
இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?
உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.
(“செக்கிழுத்த செம்மல்” திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)
எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில், பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.
நன்றி ::thevar.co.in
..
விடுதலைப் போரின் முதல்வன் யார்?
மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது.“திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்”
“வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்”
உலகும் புகழும்(!) வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே விடுதலைப் போரை தொடங்கியது யார்?
அவன் தான் மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்.
இதை முழுமையாக இருட்டடிப்பு செய்தது ஏன்?
அடுத்து மற்றொன்றும் கூறுகிறார் ம.பொ.சி. அவர்கள்.
“ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி, இந்தியாவிலேயே முதல் புரட்சியாக கிட்டூர் ராணி சென்னம்மாள் விளங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னோடியாக கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிர்ப்பு கிட்டூரில் தான் உருவாகியது” (பக்.18(1) ) [இவர் போராட்ட காலம் 1830-31]
மேலும்,
மேலும் ம.பொ.சி.அவர்கள்,
“1767ல் மேஜர் பிராண்டும்,
1783 ல் கர்னல் புல்லர்டனும் பாஞ்சலங்குறிச்சி மீது படையெடுத்தனர்(பக்.42 )”
“பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தளபதி பானர்மேன் தாக்கியது 5 செப்டம்பர் 1798ஆம ஆண்டு தான்(பக்.42)
1755ஆம் ஆண்டு மே திங்கள் மறத்தமிழ் மாமன்னர் மாவீரன் பூலித்தேவன் கோட்டை முதல் வெள்ளைப்படைத் தளபதி கர்னல் ஹெரான் என்பவனால் தாக்கப்பட்டது என்பது தான் ஆவணச் சான்றுடன் கூடிய வரலாறு.
மேலும் மறுக்கமுடியாத சான்றுகள் ஏராளமுண்டு.
நெல்லை மாவட்ட விவரச்சுவடி1917 , பகுதி 1, பக்-70-73, 81-85, 363-387, 389-408, 403ல் விரிவாகக் காணலாம்.
“அமெரிக்க விடுதலைப் போருக்கும் (1775–1783), பிரெஞ்சுப் புரட்சிக்கும் (1789–1799) முன்னரே தென்னக விடுதலைக்காக இரத்தம் சிந்திய தியாகத் தலைவன் பூலித்தேவன் அவர்களே”.
பெயர் என்ன இதற்கு?
இதற்குப் பெயர் என்ன?
1755க்கும் 44 ஆண்டுகளுக்குப் பின் 1799ல் நாட்டின் சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் தான் விடுதலை இயக்கத்தில் முதல் முதலாக முழங்கியவன் என்று கூறுவதன் உள் நோக்கம் என்ன? சாதரணமாக தவறு நிகழ்ந்து விட்டது எனக்கருத முடியுமோ? தமிழ்க் குலம் தலைகுனிய வேண்டும் என்பதிலே ஆர்வமோ? அல்லது தமிழன் அல்லாத வேறு ஒருவன் என்று வரவேற்கும் பெருமையோ?
அறிஞர்கள் கருத்து:
இந்த தமிழ் துரோகத்தை மறுத்து பல அறிஞர்கள் தம் ஆய்வுக்கருத்துக்களை கூறியுள்ளனர்.
தமிழ்வாணன்
முனைவர். ந.சஞ்சீவி
முனைவர் எஸ்.கதிர்வேல்
எஸ்.கே.சாமி
பேராசிரியர் வானமாமலை
எட்டயபுரம் நா.குருகுகதாசப்பிள்ளை.
சுப்பிரமணியம்.
வ.வேணுகோபால்.
மங்கள முருகேசன்
எஸ். நடராசன் மற்றும் சான்றோர் பலரது எடுத்துக்காட்டுகள் மலைவிளக்காக காட்சி தருகிறது.
“இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” முனைவர்-ந.இராசையா பக்.18-28ல் தெளிவாகக் காணலாம்.
இவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள். என்றாலும் நம் பெருமையை அடுத்தவர்கள் கூறும் போது தான் நாம் உணரமுடிகிறது.
மேல்நாட்டு அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்?
திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடி, அறிஞர் பேட்டி, ஐ,சி.எஸ். பக்.70-75, 80-339, 376, 411.
திருநெல்வலி சரிதை, அறிஞர் கால்டுவெல், பக்.92, 376.
இந்துஸ்தான் சரிதை – ராபர்ட் ஓர்ம்ஸ் -பகுதி 1 பக்.400-401, 420, 423, 425 - பகுதி 2 பக்.100, 109, 112, 116-117, 199-200.
மேலும் அறிஞர் அருட்திரு. கிரான்ஸ், ஏ.ஜே.ஸ்டுவர்ட், எச்.ஆக்பெட் போன்ற மேல்நாட்டு அறிஞர் குறிப்பு – ?
“1799ல் உள்ள ஒருவன் முதன் முதலாக முழங்கியவன் என்று சொல்லுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறது நாடு?”
இந்தக் கேள்விக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லிதானே ஆகவேண்டும்.
இப்படி எடுத்துக்காட்டிய அறிஞர்கள் ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதால் தமிழர் கட்சித் தனிப் பெருந்தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒதுக்கிவிட்டிருக்கலாம்.
ஆனால்…! உண்மை வரலாறு என்ன? உணர்த்தியாக வேண்டுமல்லவா? தவறான கற்பனைகளை உண்மை போல் சித்தரித்துக் காட்டிய திருப்பணிகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆராய்ச்சித் திறன் அரசியலடிமையாகி விடக்கூடாது.
“வீரநடை போட்டு வந்தான் வீரபாண்டியன்”
மறவர் மாண்பு:
வெள்ளையர்களுக்கு திகில் கொடுத்த மாவீரன் பூலித்தேவனை கையில் விலங்கிட்டு செல்ல முடிந்ததோ?
கொல்லங்கொண்டான் மாவீரன் வாண்டையாத் தேவன் அடிச்சுவட்டையாவது வெள்ளையர் காண முடிந்ததா?
சேதுபதி மீது படையெடுத்து வந்த இராமப்பையன் மற்றும் தளபதியார் வாள் சுழற்றி வன்னியத் தேவனை சிறை பிடிக்க முடிந்ததோ?
சின்ன மறவர் நாட்டின் செங்கதிர் மறத்தமிழ் மாமன்னர் பெரிய மருது வெள்ளையரின் வஞ்சகத்திற்குத் துணிந்து வந்தே தூக்குக் கையிற்றை துணையாக்கிக் கொண்டானே தவிர கையில் விலங்கைச் சுமந்து அவன் கோழையாகியது உண்டோ? கட்டபொம்மு நாயக்கனுக்கு உயிர் பிச்சை அளித்த மாவீரன் வெள்ளையத்தேவன் மார்பிலே வேல் தாங்கி களத்திலே உயிர்விட்டானே தவிர கையில் விலங்கு சுமந்து தூக்குக் கயிற்றில் தொங்கினானா? இவர்கள் தானே வீரன் , மாவீரன் என்பதற்கு இலக்கணமானவர்கள். மறத் தமிழ் மக்கள். வரலாற்றுச் சிற்பிகள்.
ஆனால்.
“கோழைகளை எல்லாம் வீரனாக்கியே தீருவேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு பரணிபாடிய ஒரு சிலருக்கு மாவீரன் பூலித்தேவன் உண்மை வரலாறு தெரியாமல் இருக்க முடியாது. சான்றுகள் ஏராளமுண்டு”.
எனவே, தான் செய்த தவற்றை மறைக்க திரும்பத் திரும்பப் பேசியும், எழுதியும் வந்தால் உண்மையாகிவிடலாம் என்ற எண்ணமும் இருக்கக்கூடும்.
உண்மை தியாகத்தையும் உறுதியாக உள்ள வீரவரலாற்றுச் சுவடிகளையும் ஒதுக்கி தள்ளியும், முழுமையாக மறைத்தும், மக்களைக் கொள்ளையடித்து, பொருள் திரட்டி வந்த ஒருவனை
“வீரபாண்டியன் என்று பச்சைக் குத்திக் கொள்வது என்றால் தமிழனுக்குப் பச்சை துரோகம் செய்வதாகும்”
கரும்பு வெட்டியவர் கடித்துண்ண முடியாது கைபிசைந்து கலங்கும் நிலைதானே! எதிகால இளையோர்களும் குருடாகவே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடையோர் செயலாகாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே துணிந்து செய்யும் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டோ?
என்ன சொன்னான் அந்த மாவீரன்(!)?
கூறுகிறது கட்டபொம்முவின் புகழ் பாடிடும் “பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்” -ஜெகவீரபாண்டியனார் பக்- 130ல் காணலாம்.
வீரபாண்டியனின் கழுத்தில் முத்துமாலையை அணிவித்தது யார்?
ஏன் முத்துமாலை பரிசு தந்தனர் கும்பினியர்?
‘கும்பினியாரின் வளர்ப்பு பிள்ளை’ வீரபாண்டியன் என பாராட்டுப் பெற்றது ஏன்?
திரு. எம்.எஸ்.சுப்ரமணிய ஐயர், “வீரபாண்டிய கட்டபொம்மன்” நூலின் பக்.45-46.
“வீரபாண்டிய கட்டபொம்மன்”நூலின் பக்.43, 44
“பாஞ்சாலங்குறிச்சி சரித்திரம்” பக்.132
03.05.1798ல் மீண்டும் கடிதம் எழுதினான்.
23.05.1798ல் பிளைட் என்ற வெள்ளையன் மூலமாக கடிதம் அனுப்பினான்.
18.08.1798ல் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் வீரபாண்டியனுக்கு!
என்ன எச்சரிக்கை?[இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]
05.09.1798ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆணை?என்ன செய்தான் மாவீரன்(!)?
வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? என்று முழக்கமிட்டான? வரிந்துகட்டிக் கொண்டு படை திரட்டினான? பொங்கி எழுந்தானா? போர் முரசும் முழங்கினானா?
மண்டியிட்டான்: “கலெக்டர் ஜாக்சன் செப்டம்பர் 5ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்று ஆணை?”
ஏறக்குறைய 23 மைல்கள்
400 நாட்கள்
தமிழ் மக்கள் அத்தகைய வெறியர்கள் அல்ல … என்று ஆதாரங்களை அமைதியாகவே எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
ஆனால் ம.போ.சியோ ? அவரது வரலாற்றுக் குழப்பத்திற்கு காரணம்?
உண்மையிலேயே அவரது நிலை கழிவிரக்கமானது தான். தமது வாதங்கள் தோற்றுப் போகும் போது ஆத்திரம் எழுவது இயல்புதான்.
அதுவும் உண்மையை மறைவின்றி எடுத்துக்காட்டிய அறிஞர் தமிழ்வாணன் மீது ஏற்படாமல் இருக்க முடியுமா?
உண்மை கசப்பானது தான். அதை யார் சொன்னால் என்ன? சாடுவது நியாயமாகவே கருத முடியும்.
அவர் மீது அனுதாபமே ஏற்படுகிறது.
மேலும் சிந்திக்க தூண்டுகிறதே தவிர, மறைக்கச் செய்ய முடியவில்லை.
ஏன்? இளைய தலைமுறையினர் மத்தியில் தவறான வரலாறு இடம் பெற்று விடக் கூடாது என்பதாகும்.
“கலெக்டர் ஜாக்சன் பேட்டி கொடுத்தான். அமைச்சர் தானாபதி பிள்ளையும், வீரபாண்டிய கட்டபொம்முவும் சென்று பேட்டி கண்டனர்”
சினம் கொண்டு வீரபாண்டியன் வெளியேறி இருப்பானேயானால் உடன் வந்த அமைச்சர் கைது ஆனது ஏன்?
கவலை வீசி இருந்தால் எப்படி தானாபதி பிள்ளை கைது ஆகி இருக்க முடியும்? அவரை திருச்சிக்கு ஏன் கொண்டு போனார்கள்?
கமுதிக்கோட்டை:
“வெள்ளையத் தேவரே என் உறவினர் எல்லோரும் எனக்குப் பகையாகி விட்டனர். நீங்கள் ஒருவர் தான் எனக்குத் துணை! சண்டை வேண்டாம். இப்போது இராமநாதபுரம் சென்று பார்த்துக் கொள்ளலாம் அமைதி வேண்டும்” என்று வெள்ளையத் தேவனிடம் வேண்டியவன் கட்டபொம்மன் தானே?
உண்மையான வரலாறு விளக்கம் சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சியை கண்ட ஜாக்சன் அதிர்ச்சி அடைந்தான். ஆயினும் இதை திருச்சிக்கு தெரியப்படுத்துகிறேன். பதில் வர சில நாட்கள் ஆகலாம். அதுவரை இங்கயே தங்குவதற்கு வேண்டியது செய்கிறேன், என்றான்.
இடுக்கிப் பிடியில் அகப்பட்டுக் கொண்ட கட்டபொம்மன் இடத்தை விட்டு, உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். வயிறு வழியாக இருக்கிறது கொள்ளைக்குப் போக வேண்டும் என்றான்.
குறிப்பிட ஒரு இடத்தை அவர்கள் காட்டினர். மாடிப்படியிலிருந்து இறங்கியவன் நேராக வாயில் நோக்கி ஓட்டமெடுத்தான். கூக்குரல் எழுப்பினர் காவலர்கள். வாயிலில் நின்ற லெப்டினன்ட் கிளார்க் ஓடிவந்து தடை செய்தான்.
கூக்குரல் கேட்டதும் கோட்டைக்கு வெளியே தயாராக இருந்த வீரர்கள் பாய்ந்து சென்றனர். கோட்டை வாயில் நோக்கி, தடை செய்த கிளார்க் என்பவனை கைவாள் கொண்டு வீசினான் மாவீரன் வெள்ளையத் தேவன். கட்டபொம்மன் விடுபட்டு வெளியே வந்தான்.
சின்னக் கடை வீதி:
ஆனால் ம.போ.சி. கூறுகிறார்
“வீரபாண்டியன் குதிரைமேல் ஏறி தப்பிவிட்டான்”
என்பது, சின்னக்கடை வீதியின் திருவிளையாடல்களை மறைப்பதற்காகவே வரலாறு திசை திருப்பிவிடப் பட்டுள்ளது என்ற உண்மையை விளக்கியாக வேண்டும்.
என் தந்தை (மை பதர்)
இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் ஜாக்சனின் இடுக்கிப் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சியில் பெருவிழா நடத்தினார்.
ஏன்? வீர வெற்றி விழாவா?
சின்னக்கடை வீதியில் தாம் நடத்திய் வீரத் திருவிளையாடல்களின் பூரிப்பு விழாவா?
இல்லை! இல்லை!!
வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு விழா!
கடமையைச் செய்த தளபதிக்கு பாராட்டு விழா ஏன்?
பாராட்டு மட்டுமா, உயர் பட்டமும் வழங்கப்பட்டது ஏன்?
கோட்டை வாசலில் தன்னைத் தாக்க வந்த வெள்ளைப் படையின் துணைத்தளபதி கிளார்க் தலையைக் தமது கைவாள் கொண்டு துண்டித்துத் தமக்கு உயிர்பிச்சை கொடுத்த வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு, அவனது வீரதிர்க்குரிய பட்டம் சூட்டும் விழா தான்.
என்ன பட்டம் சூட்டப்பட்டது? வெள்ளையர்களை, சூழ்நிலையால் எதிர்த்து நின்ற கட்டபொம்மன் டச்சுக்காரர்களிடம் அணுக்கமான உறவு வைத்திருந்தான் என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டின் இக்கட்டுரை விரியும். அவர்களது அடிச்சுவட்டை பின்பற்றினான்.
டச்சுக்காரர்கள் தங்களது மதகுருக்களை ஃபாதர், தலைவன், தந்தை என்று தான் அழைத்து வந்தனர். அதையே கைகொண்டான்.
சின்னக்கடை வீதியின் நிகழ்ச்சியால் வேதனையில் உழன்று கொண்டிருந்த மறவர் வீரர்களைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற தமது நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார் கட்டபொம்மன்.
தன்னுயிரை பாதுகாத்த வீரத் தளபதியை ‘மை ஃபாதர்’, ஏன் தலைவன், ஏன் தந்தை என்று பட்டம் சூட்டினான்,
நன்றி மறவாத செயல் அது மட்டுமல்ல.
இந்த உண்மையைத் தெளிவுபடுத்திக் கொண்ள்ள நெஞ்சழுத்தம் அதிகம் வேண்டும்.
‘மை ஃபாதர்’ என்பது மக்கள் பேச்சு வழக்கில் சாதரணமாக பாதர் வெள்ளை என மாறிவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும்
பாண்டித்தேவன் கொலை:
திருவைகுண்டதிலுள்ள கும்பினியாரின் தாணியக்கிடங்கு கொள்ளையடிக்கப் பட்டது ஏன்?
காவலாரக இருந்த மாவீரன் பண்டியத்தேவனை கொலை செய்தது யார்?
தம்பியின் திருமனதிர்க்கும், தானாபதிப் பிள்ளை மகன் திருமனதிர்க்கும் கும்பினியர் தானியக் கிடங்கு கொள்ளை?
அதைத் தடுத்த திரு. பாண்டியதேவர் கொலையும் ஆகா வேண்டுமோ?
செதூரிளிருந்து கடத்தி வந்த சிவகிரிப் பெயரார் கொலை அனது ஏன்?
இவைகளுக்கெல்லாம் தெளிவான விளக்கம் தேவையாகும்.
இத்தகு செயல்களுக்கு மாவீரன் என்ற பட்டம் சூட்டப்பட்டால், உண்மையான வீரம் தலை குனியத் தான் வேண்டும்.
நடிப்பு தான்:
விடுதலை இயக்கத்திற்கு முதன் முதலாக விட்தொன்றிய மறத்தமிழர் மாமன்னர் பூலித்தேவனின் வீர வரலாற்று அடிச்சுவட்டையே இருட்டடிப்பு செய்துவிட்டும்; சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த கட்டபொம்முவை மாவீரன், முதல் முழக்கமிட்டவன் என்றும் பட்டம் சூட்டிய புதிய கதையாக அமைந்திருக்கலாம்.
ஆனால்…
மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை அழித்துவிட்டு எழுதி இருப்பது உண்மை வரலாறு என்று மக்கள் ஒப்புக் கொள்ள முடியுமோ?
எனவே, அதை மறைப்பதற்கும், கதையை உறுதிப்படுத்தி கொள்ளவும் திரைப்படமாக்கப் பட்டது. வீரப் பரம்பரையில் வந்த ஒருவர், பல பதக்கங்கள் பெற்ற சிவாஜி கணேசன் பயன்படுத்தப்பட்டார்.
அவரது நடிப்பு திறமையால், தவறான ஒரு வரலாறு நாட்டிலே உண்மை போல் சித்தரித்துக் காட்டப்பட்டது. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதர்க்காகவே பிறந்தவன் என்னும் உரிமையும் ஆக்கப்பட்டுவிட்டது.
கோழையை வீரனாக்கிய பெருமை சிவாஜியின் நிடிப்புத் திறமையே. தவறான திசை திருப்பப்பட்டதே தவிர வரலாறு நாயகனுக்கு அல்ல.
வரலாறு புரட்டு:
கவிஞர் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார்களே! “சரித்திரத்தை மாற்றுகிறவன் வரலாற்றுப் புரட்டன்” என்று. வரலாற்றுப் புரட்டும், வஞ்சகமும் தமிழர் வரலாற்றுக் காலம் முதற்கொண்டே உடன் பிறந்ததாயிற்றே!
இத்தகு வரலாற்று புரட்டுக்கு அறிவின் முதிர்ச்சி என்று பட்டம் சூட்டுகிறார்களே! வாய்மையினை உயிரோடு கொண்ட இளங்கோ அடிகளின் சிறப்புக் கூறியவர், வழி தவறுவது முறையோ? மறத்தமிழன் பூலித்தேவன் வெற்றிகளை எல்லாம் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் மேல் ஏற்றியது ஏன்?
இது ஆழ்ந்து அகன்ற அறிவின் முதிர்ச்சியின் தீர்ப்பு என்று என்ன முடியுமோ? திரிபு வாதத்தின் உச்சகட்டம் ஆகும் என்றால் தவறாகுமோ?
காய்தல் உவர்த்தல் இன்றி வரலாறுகளை, உண்மைகளை நடுநிலை நோக்கோடு ஆய்ந்து வெளியிட வேண்டுவது தாமே வரலாற்று ஆராய்ச்சியாளன் கடமை. அது தானே வரலாறு. வரலாற்று வல்லுனர்களின் கடமையாகும்.
இதில் வரலாற்று ஆசிரியர் ம.போ.சிவஞான கிராமணியார் எந்த வகை? என்று புரிந்து கொள்ள இயலவில்லை.
இத்துணை எதிர்ப்புகளையும், மறுப்பு நூல்களையும் கண்டும், கேட்ட பின்னரும், மௌனம் சாதிப்பது என்றால்…? அதைத் தாங்கி கொள்ளும் தனித்திறன் பாராட்டுக்குரியதாகும்.
அந்தத் திறமையை தந்தை பெரியார் பாராட்டிப் பட்டமும் கொடுத்துள்ளார்கள். “எதிரிகளின் ஒற்றர்” என்ற பண்பாளர் தான் ம.போ.சிவஞான கிராமணியார்.
அரசியலையே விலைச் சரக்காக அடமானம் வைத்து விட்டு தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மந்திரிப் பதவி கிடைக்கிறதோ என்று நாக்கில் எச்சில் சொட்டக் சொட்ட நின்று, நெஞ்சிலே ஈரம் வற்றிப் போன காரணமாக இருக்கலாம் என்று குறை சொல்ல வேண்டும் என்பது எனது (திரு. வி.ஆ.ஆண்டியப்பத் தேவர்) எண்ணம்.
சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைக்க முடியுமோ? நரி நக்கி கடல் வற்றி விடாது. ஈ குடித்து எருமைப்பால் வற்றாது என்று ஒதுக்கி விடலாம்.
என்றாலும் கூட……..!
ஆயிரமாயிரம் ஈட்டிகள் அவர்கள் நெஞ்சிலே பாய்வது போலல்லவா இருக்கிறது.
உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி (!) (ஆச்சர்யம் என்னுடையது) உலகிற்கு வெள்ளிடை மலை போல் எடுத்துக்காட்டி வரும் காலக் கண்ணாடியாம் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய குங்குமம் இதழ் “நெஞ்சுக்கு நீதி” என்ற கட்டுரையில் “முதன் முதலாக விடுதலை முழக்கமிட்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற எழுத்தோவியம் வஞ்சமனப்பான்மையில் வழிதவறிச் சொல்லும் வரலாற்றுப் புரட்டர்களும் நெஞ்சு நிமிர்ந்து விடுவார்களே ? சரித்திரக் கொளைஞர்களுக்கும் நெஞ்சுக்கு நீதி புகட்ட வேண்டுவதும், காழ்ப்பு உவர்ப்பின்றி நடுநிலை நோக்கோடு நாலராயும் பண்பையும் எடுத்துக்கட்ட வேண்டுமே தவிர புரட்டர்களுக்கு ஊன்று கொள்ளகி விடக்கூடாது. மேலும்…!
கலைஞரே எழுதிவிட்டார் என்று வீரம் விளைவித்த மறத்தமிழ் மக்கள் வரலாறுகளை எல்லாம் அளிக்கும் துணிபை வளர்த்துவிடக் கூடும் என்பது தான் மக்களது கவலையாகும்.
ஏன் எழுதினார்?
“நான் மீண்டும் பிறப்பதற்கே விரும்புகிறேன். அதுவம் தமிழ்நாட்டில்; தமிழ் நாட்டிலேயும் கலைஞருடைய தோழனாக இருந்து, தமிழுக்கு வாழ்வு தேடுகிற நிலையையே விரும்புகிறேன்” (இன்னொரு முறையுமா??????)
கற்பனை கட்டுரையில், உணர்ச்சியையும் வீரவேசத்தையும் தூண்டி எழுதினால் மட்டும் உண்மை ததோக் கருவூலமாகி விடுமோ?
அதை ஏன் என்று கேட்க நாம் முன்வரவில்லை. மக்கள் வரிப்பணம் தானே! நமது கேள்வி:
மேலும், வழிப்பட்டுக்குரிய மாவீரர்களை எல்லாம் மறைப்பதும், வழிப்பறிக் கொள்ளையர்களைப் போற்றுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவது தவறாகுமோ?
நாட்டின் மானம் காத்த உயிர்த் தியாகம் செய்த மான மறத்தமிழ் மக்களை மறைத்து விட்டு, நாடோடியாக வந்து வயிறு வளர்க்க வந்த, மக்களை கொள்ளை அடித்து, வரிவசூல் செய்பவர்களை வாழ்த்துவதற்கு நமது நாவையும், வரிவரியாய் புகழ்ந்து எழுதுவதற்கு நமது கையையும் பயன்படச் செய்வது தாய் நாட்டிற்கு செய்யும் துரோகமுமாகுமல்லவா?
மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சியை உருவாக்கிக் காசுகள் பெரும் எச்சில் ஏடுகள் சில! முதல் முழக்கம் முழங்கியவன் கட்டபொம்மன் என்று தரங்கெட்ட புரட்டு ஏடுகளைச் சான்று காட்டிப் பணத்தை அறுவடை செய்து கொள்கின்றனர். வரலாற்று உண்மைகளை எடுத்துக்கட்ட வேண்டியது ஏடுகளின் கடமை. அதை மறந்து கவர்ச்சியில் கை நிறைய காசு சேர்த்துக் கொள்கின்றனர். வரலாறு பற்றி என்ன கலவை. காசு எப்படி வந்தால் என்ன?
பாதாளச் சிறை:
தளபதி பானர்மென் பாஞ்சை கோட்டையைக் கைப்பற்றிய போது அங்கிருந்த பாதாளச் சிறையை கண்டான்.
அங்கே குரும்பூர், மாநாடு என்னும் ஊர்களிலிருந்து சில பெரியவர்களை கட்டபொம்மு கடத்தி வந்து, பலவந்தமாக தூக்கிவரப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தங்களை மிருகங்களினும் கேவலமாக நடத்தி வந்தனர் என்பதைத் தெரியப் படுத்தி இருக்கிறார்கள்.
எழுச்சி பெற வேண்டும்:
எனவே, வீரர்களை அடையாளம் கண்டு வழிபடுதல் வீரர் வழிச் சந்ததினரேயாவர். ஆயிரமாயிரம் அறிய கருத்துக்களை, தியாக வீரர்கள் வரலாறுகளை எல்லாம் தேடிக் கொணர்ந்து தமிழக வரலாற்று உண்மைகளை தூண்டித் துருவி ஆராய்ந்து, நிகழ்ச்சிகளுக்குத் தகுந்தவாறு நினைவாஞ்சலி செய்ய வேண்டும். இனமான உணர்வு பெற வேண்டும்.
அன்று தான்……..!
உண்மை வரலாறுகளை அழிக்க எண்ணித் திட்டமிட்டு வரலாறு புரட்டர்களை அடையாளம் காணமுடியும். எழுதுங்கள் உண்மை வரலாறு. உடலிலே உதிரம் வற்றும் வரையிலும் ஓயாமல் எழுதுங்கள். தவறினால் தேசிய மக்களது வரலாறுகள் முழுமையாக அளிக்கப்பட்டு விடும் என்பது உறுதி. அடிச்சுவடு கூடத் தெரியாத நிலையில் இளையோர்கள் அவதிப்பட நேரிடும்.
எனவே விடுதலைக்கு முதல் முழக்கம் முழங்கிய மாவீரன் பூலித்தேவரது வரலாறுகளை பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையிலும் மாணவர்களுக்குப் படமாக்கப் படவேண்டும்.
வாழ்க! வாழ்க!! உத்தம தியாகிகள் புகழ்!!!
நன்றி : http://thevar.co.இன்
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி
வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், ” புனித சேது காவலன்” என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.
இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.
இன்றைக்கு இருநுhற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வரலாற்றைத் தடம்புரளச் செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம். அப்பொழுது இந்திய nhரரசாக விளங்கிய ஜஹாங்கீரின் அனுமதி பெற்ற இந்நிறுவனத்தினர் குஜராத்திலும், வங்காளத்திலும் தங்களது பண்டகசாலைகளை அமைத்து வாணிபத்தில் ஈடுபட்டனர். பின்னர் மசூலிப்பட்டிணத்திலும், சென்னையிலும் தங்களது நிலைகளை வலுவுடையதாக்கிக் கொண்டனர். அடுத்து, வாணிகத்திற்குப் புறம்பாக உள்நாட்டு பூசல்களிலும் தலையிட்டுத் தங்களுக்குப் பயனளிக்கும் கட்சிக்காரர்களை முழுக்க முழுக்க ஆதரிப்பவர்களாக விளங்கி வந்தனர்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது மதுரை நாயக்க மன்னரது மறைவிற்குப்பிறகு கப்பத்தொகையினை யாருக்கும் கொடுக்காமல் சுயாதீனமாக இயங்கி வந்த தென்னகப் பாளையக்காரர்கள் நவாப்முகம்மதுஅலிக்குக் கப்பத்தொகை கொடுக்க மறுத்தனர். அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதற்குப் பரங்கியரது கூலிப்படை நவாப்பிற்கு உதவியது. இந்த வகையில் நவாப் முகம்மது அலி, கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை கூடிக் கொண்டே சென்றது. பாளையக்காரக்களைத் தவிர , அப்பொழுது தென்னகத்தில் திருவாங்கூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய பரம்பரைத் தன்னரசுகளும் இயங்கி வந்தன. இவர்களிடமிருந்தும் கப்பம் பெறும் உரிமை தமக்கு உள்ளது என வலியுறுத்திய நவாப், கும்பெனியாரது படைபலத்தைக் கொண்டு திருவாங்கூர், தஞ்சாவூர், மன்னர்களை இணங்க வைத்தார். புதுக்கோட்டை மன்னர், நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் பலவிதத் தொண்டுகளைச் செய்து வந்ததால் அவரிடம் மட்டும் கப்பம் கேட்டு நிர்பந்திக்கவில்லை.
ஆனால் மதுரை நாயக்க மன்னர்களுக்கே திறை செலுத்தாமல் தன்னரசாக இருந்து வந்த மறவர் சீமை மன்னர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் திறை செலுத்த ஆணை பிறப்பித்துத் தவணை கொடுத்துப் பணம் செலுத்தக் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை என நவாப் முகம்மது அலி முடிவிற்கு வந்தார். ஆதலால் அவர்களையும் ஆயுத வலிமை கொண்டு அடக்கிக் கப்பத் தொகையினைப் பெற வேண்டும் ! நவாப்பினது மகன் உம்தத்துல் உம்ரா, கும்பெனித் தளபதி ஜோசப் சுமித் ஆகிய இருவரது தலைமையில் திடிரென 29.5.1772 ஆம் தேதி பெரும்படை மறவர் சீமைக்குள் புகுந்து தலைநகரான இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி வளைத்தது. இராமநாதபுரம் சேதுபதி மன்னராக இருந்த பன்னிரண்டு வயது நிரம்பிய இளவல் முத்துராமலிங்க சேதுபதிக்காக அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியாரும் பிரதானிபிச்சப் பிள்ளையும் நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா, ராணியாருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ராணியார் ஆற்காடு நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்கவும், அவருக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதையும் மறுத்துவிட்டார். இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பேய்வாய்ப் பீரங்கிகள் கோட்டை மீது நெருப்பைக் கக்கின. அக்கினி மழையில் நனைந்த கோட்டைச் சுவரின் கிழக்குப்பகுதியில் இரண்டாம் நான் போரில் ஏற்பட்ட பிளவின் ஊடே பரங்கியர் கோட்டைக்குள் புகுந்தனர். அரண்மனை வாயிலில்நடைபெற்ற வீரப் போரில் மூவாயிரத்திற்கும் மிகுதியான மறவர்கள் தாயகத்தை காக்கும் தொண்டில் தங்களது உயிரைக் காணிக்கையாகத் தந்தனர் என்றாலும் போப்பயிற்சியும் கட்டுப்பாடும் மிக்க பரங்கியருக்கே வெற்றி கிடைத்தது.
ராணியும் அவரது இருபெண்குழந்தைகள், சிறுவன் சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுத் திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். சேதுபதி சீமையில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, பரங்கியரது பாதுகாப்பில் நடைபெற்றது. குழப்பம் அராஜகம், கலகம் இவைகளுக்கிடையில் கிடைத்தது ஆதாயம் என நவாப் எண்ணினார். என்றாலும் இராமநாதபுரம் சீமையில் தெற்கிலும், வடக்கிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் நவாப்பின் நிர்வாகத்தை அலைகழித்து அச்சுறுத்தின. ஆதலால் இராமநாதபுரம் சீமையின் மீதான தமது பிடிப்பை முழுமையாக இழந்துவிடாமல் தக்க வைத்துக் கொள்ள நவாப், சேதுபதி மன்னருடன் சமரச உடன்பாடு ஒன்றினைச் செய்து கொண்டு சேதுபதி மன்னர் இராமநாதபுரத்தில் தமது ஆட்சுயைத் தொடர கி.பி. 1781 -இல் வழிகோலினார்.
தொன்று தொட்டு மறக்குடி மக்களது தன்னரசாக விளங்கிய சேது நாட்டின் தன்னாட்சி உரிமையைப் பறித்துச் சேதுநாட்டை ஆக்கிரமிதத்துடன், தன்னையும் தமது டும்பதிதினரையும் பத்து ஆண்டுகள் திருச்சிக் கோட்டையில் அரசியல் கைதிகளாக அடைத்து வைத்து, அவல வாழ்க்கையை அனுபவிக்கச் செய்த நவாப்பையும், அவரது ஏவலரான கும்பெனியாரையும் பழிவாங்கச் சேதுபதி மன்னர் துடித்தார். இடைஞ்சல் ஏற்படுத்திய எவரையும் யனை மறப்பது இல்லை அல்லவா?
நாட்டின் பாதுகாப்பை வலுவுள்ளதாக்கினார். திருவாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிச் சீமைப் பாளையக்காரர்களுடன் நல்ல நேச உறவுகளைக் கொண்டிஐந்தார். சேதுநாட்டின் நவாப்பின் பேரரசையும், கும்பெனியாரது ஏகாதிபத்திய நிழலையும் படரவிடாமல் தடுக்க, டச்சுக்காரiர்களுடன் உடன்பாடு செய்து கொண்டு அனைறைய போர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரிய பீரங்பிகளைத் தயாரிக்கும் ஆயுதச் சாலையை இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் தொடங்கினார்.
சேது நாட்டில் இயங்கிய அறுநுhறு தறிகளில் நுhற்று ஐம்பது சேதுபதி மன்னரது குத்தகைக்கு உபட்ட தறிகளாக இருந்தன. புதுச்சேரி பிரஞ்ச்சுக்காரர்களும் தரங்கம்பாடி டச்சுக்காரர்களும், சேது நாட்டின் கைத்தறித் துணிகளை விரும்பி வாங்கி வந்தனர். இதனால் சேதுபதி சீமையில் போர்ட்டோ நோவா பக்கோடா என்ற டச்சுப் பணம் பரவலாக நாணயச் செலவாணியில் இருந்தது. இதற்காக உள்நாட்டுச் சுழிப்பணம் அல்லது சுழிச்சக்கரத்திற்கு மாற்றிக் கொள்ளும் நாணயச் செலவாணி நிலையங்களை இந்த மன்னர் நிறுவியிருந்தார்.
சேதுநாட்டு இஸ்லாமியர் எதிர்க்கரையில் உள்ள இலங்கை மற்றும் கீழ்த்திசை நாடுகளிலும், உள்நாட்டிலும் வாணிபத்தைப் பெருக்கச் சலுகைகளை செய்து கொடுத்தார். சேது நாட்டு சங்கு வங்கத்திற்கும், அரிசி, நெல், இலங்கை, புதுச்சேரிக்கும் அனுப்பப்ட்டன. கேரளத்து மிளகும் கொப்பரையும் சேது நாட்டில் விற்பனையாயின.
சேதுநாட்டு அரிசி, கருப்புக்கட்டி, எண்ணெய், கைத்தறி ஆகியவைகளின் விற்பனைள்கௌ அரசுத்தரப்பில் வியாபாரத்துறை ஒன்று தனியாகச் செயல்பட்டது.
அடிக்கடி சேதுநாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்த வறட்சியை நிரந்தரமாக ஒரீக்க ஒரு திட்டத்தை தீட்டினார். மதுரைச் சிமை வருஷநாட்டில் உற்பத்தியாகி இராமநாதபுரம் சீமையில் நுழைந்து கிழக்குக் கடற்கரையில் சங்கமமாகும் வைகை ஆற்றின் ஒரு பகுதி நீர் வருஷநாட்டு மலையில் உள்ள ஒரு பாறையால் தடுக்கப்பட்டு, கிழக்கே வருவதற்குப் பதிலாக மேற்கே சென்று கேரளக் கடலில் வீணாவதைத் தடுத்து ஆற்றின் முழுநீரையும் மறவர் சீமைக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் அது.
இவ்விதம் நாட்டின் நலனையும், பொரளாதார முன்னேற்றத்தையும் பெருக்கும் வகையில் இந்த அளம் மன்னர் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தமிழக அரசியலில் அவர் எதிபாராத திருப்பம் எழுந்தது. இது மனனரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் அரசியலில் வெள்ளைப் பரங்கியரது ஆதிக்கத்திற்கு வலுவான அடித்தளமாக ஏகாதிப வளர்ச்சி உருவாக, அந்தத் ப்பம் திiமாறியது.
ஆற்காடு நவாபின் இறையான்மைக்கு உட்பட்ட தமிழகத்தில், அவரது சலுகைகளை எதிர்பார்த்துத் தங்களது கணிகத்தைத் தொடர்ந்து வந்த வெள்ளையர், கும்பெனியாரிடம் கடனாளியாகிவிட்ட ஆற்காடு நவாப்பிற்கு நிபந்தih விதித்து ஆட்டிவைக்கம் சூத்திரநாயகிவிட்டனர். நவாப்பின் அதிகாரத்தைப் பாளையக்காரர்களிடம் அமல்படுத்தத் தங்களது கூலிப் படையைக் கொடுத்து உதவிய கும்பெனியாருக்கு நன்றிக்கடனாக முதலில் கி.பி. 1783-இல் செங்கை மாவட்டத்தை விட்டுக் கொடுத்தார் நவாப். அடுத்து திருநெல்வேலி சீமையில் நிலத்தீர்வை ளை நவாப்பின் சார்பாக வசூலிக்கும் உரிமை பெற்றனர். பின்னர் தென்னகத்தில் நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய வரவினங்கள் அனைத்தையும் வசூலித்துக் கொள்ளும் உரிமையையும், அதில் ஆறில் ஒரு பகுதியை நவாப்பிற்கு அளித்து விட்டு எஞ்சியதை நவாப்பின் கடக்காக வரவு வைத்துக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்க் கோட்டை கொத்தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றனர். மேலும் நவாப் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையைத் குறிப்பிட்ட பத்து தவணை நாட்களுக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும். தவணைப்படி பணம் செலுத்தத் தவறினால் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நெல்லுhர், வடஆற்காடு, பழநாடு, ஓங்கோல் சீமைகளின் வரி வசூலைக் கும்பெனியாரே மேற்கொள்ளலாம். இரண்டாவது தவணையிலும் தாமதம் ஏற்பட்டால் அந்தச் சீமைகளை கும்பெனியாரே நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகைகளையும் பெற்றனர். இவைகளைத் தொடர்ந்து, மறவர் சீமையினை மூன்று ஆண்டுகால வசூலுக்கு ஒப்படைப்பில் பெற்றனர்.
இவையனைத்தும், இருக்க இடம் பிடித்துக் கொண்ட நரி கிடைக்கு இரண்டு டுகளைக் கேட்ட கதையாக முடிந்தது. சிலந்தி வலையில் சிக்கிய ஈ போன்ற இடர்பாடு மிக்க நிலை நவாப்பிற்கு, இதனைத் தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்று கூடக் குறிப்பிடலாம் !
தமிழகத்தில் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்து கப்பல்களில் இங்கிலாந்துக்கு அனுப்பிக் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த கும்பெனியாருக்கு மறவர் சீமையின் கைத்தறித் துணிகள் கண்களை உறுத்தின. லாபக் கற்பனை விரிந்தது. அவர்களது லாகூர் வர்த்தகப் பிரதிநிதிகள் இராமநாதபுரம் சீமையில் சுற்றுப்பயணம் செய்து கைத்தறி நெசவுத்தறிகளின் எண்ணிக்கை, உற்பத்தி பற்றிய முழுவிவரங்களையும் இரகசியமாகச் சேகரித்தார்கள். அடுத்து, கலெக்டர் லாண்டன் மூலமாக மநவர் சீமையின் அனைத்துத்தறிகளின் நெசவுத்தறிகளை கும்பெனியாரே கொள்முதல் செய்யவிருக்கும் ஏபோகப் பேராசைத் திட்டத்தைச் சேதுபதி மன்னருக்குத் தெரிவித்து ஒப்புதல் கோரினார். மன்னர் முற்றாக அந்தத்திட்டத்தை மறுதலித்தடன், வீணாகத் தம்மை அலைக்கழித்தார் என்றும் கலெக்மரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சேதுபதி மன்னர், கும்பெனியாரிடமும் வெள்ளைப் பரங்கிகளிடமும் மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்கிறார் என்றும், ஆதலால் மன்னரது அலுவலர்களது நடவடிக்கைகளிலும் இந்த வெறுப்பு பிரதிபலிக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது. மறவர் சீமைத் துணி கொள்முhலில் ஏகபோக உரிமையை நிலைநாட்ட முயன்று தோல்வியுற்ற கும்பெனியார், அடுத்து சேதுபதி சீமையில் தானியங்கனை விற்றுக் கொள்ளை லாபம் பெற முயன்றனர். இதற்காக அவர்கள் சேதுபதி சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதிப்பில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்குக் கோரினர். இதனையும் முற்றாக சேதுபதி மன்னர் மறுத்துவிட்டார். மன்னரது போக்கை, ஆற்காடு நவாப்பிற்கு முறையீடு செய்து, அவரிடமிருந்து மன்னருக்குப் பதிந்துரை ஒன்றையும் அனுப்பி வைக்கச் செய்தனர். சேதுபதி மன்னர் இதனையும் புறக்கனித்தார். வெளிநாட்டார் மட்டுமல்ல, உள்நாட்டைச் சேர்ந்தவர்ம் கூட வாணிபத்ல் ஈடுபட்டு ஊதியம் ட்டும் பொழுது நடைமுறையில் உள்ள சுங்கத் தீர்வைகளைச் செலுத்துவதுதானே வழக்கம் ? ஏற்கனவே கைத்தறித் துணியில் ஏகபோக உரிமை பெற முயற்சித்தது போல இப்பொழுதும் மறவர் சீமையில் தங்களது கால்களை வலுவாகப் பதுக்கச் செய்த முயற்சி அது !
இத்துடன் கும்பெனியார் தங்களது முயற்சிகளைக் கைவிட்டு விடவில்லை. துhத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கைத்தறித் துணிகள் மிளகு மற்றும் சரக்குப் பொதிகைகனை ஏற்றிக் கொள்ளும் கப்பல்கள், இராமநாதபுரம் மன்னரது பாம்பன்நீர்வழி வழியே சென்னை துறைமுகத்திற்குச் சென்று வந்தன. பின்னர் அந்தப் பொதிகள் ஆழ்கடல் செல்லும் பெரிய கப்பல்களுக்கு மாற்றப்ப்டடு இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தன. கும்பெனியாரது இச் சரக்குக் கப்பல்களுக்குப் பாம்பன் துறைமுகத்தில் வரிசைக்கிரமத்தில் நிறுத்தி சுங்கச் சோதனை இடுவதில் இருந்தும், சுங்கத்தீர்வை விதிப்பில் இருந்தும், விலக்கும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் எனக் கும்பேனியார் மன்னரிடம் கோரி இருந்தனர். இந்தக் கோரிக்கையையும் மன்னர் நிறைவேற்றவில்லை. இதனால் சீற்றமடைந்த கும்பெனிக் கலெக்டர் சேது நாட்டில் தங்களுக்குத் தகுந்த மதிப்பு அளிக்கப்படுவதில்லையென்றும், மன்னரது நிர்வாகம் ஆங்கிலேயருக்குச் சிறிது அளவு கீட வளைந்து கொடுக்காமல் உதாசீனம் செய்து வருகிறது எனவும் தமது அறிக்கையில் முறையீடு செய்து இருந்தார்.
கி.பி. 1794 செப்டம்பர் மாதம் முதல் வாரம், சேதுபதி மன்னருக்கு அவசரக் கடிதம் ஒன்றினைக் கலெக்டர் பவுனி என்பவர் அனுப்பி இருந்தார். அது கடிதம் அல்ல. சம்மன்ஸ் – அழைப்பாணை. இராமநாதபுரம் சிவகங்கை கமஸ்தானங்களுக்கான பூசல்கள் பற்றிய விசாரணைக்கு முத்துராமலிங்கப்பட்டினம் சத்திரத்தில் சேதுபதி மன்னர் ஆஜராமாறு அறிவிக்கம் ஆணை. என்ன திமிர் ! வணிகம் செய்து பிழைக்க வந்த கூட்டம் அரசியலைத் தமது உடமையாக்கிக் கொண்டு செய்யும் ஆர்பாட்டத்திற்கு அடிபணிவதா ? இந்த உத்தரவை ஒரு பொருட்டாக மன்னர் எடுத்துக் கொள்ளவில்லையென்பதை அறிந்த கும்பெனி மேலிடம் கடும் சினத்தால் குதித்தது. ஏனைய பாளையக்காரர்களும் சேதுபதி மன்னரைப் போன்று கும்பெனியாரையும் அவர்களது உத்தரவுகளையும் உதாசீனம் செய்தால் …..! இப்பொழுது சென்னையில் இருந்து கும்பெனி கவர்னர் சேதுபதி மன்னரைத் தொடர்பு கொண்டார். கலெக்டரது சம்மன்களுக்குக் கீழ்ப்படிந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையிட்டார். பலன் இல்லை.
மறவர் சீமையில் இந்த இறுக்கமான சூழ்நிலையில் தலையிட்டு அடங்காப்பிடாரியான சேதுபதி மன்னரைச் சிறையிலிட்டு மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள நவாப் முயன்றார். திருச்சியில் இருந்த நவாப்பின் மகன் உம்-தத்ல்-உம்ராவைக் கலெக்டர் பவுனியைச் கந்திக்கச் செய்தார். ஆனால் தங்களது ஏகாதிபதியக்குறியில் சிறிதும் தளர்வு இல்லாத கும்பெகியார் முந்திக் கொண்டனர். ஏற்கனவே இராமநாதபுரம் கோட்டையில் உள்ள கும்பெனி ஒற்றன் மார்டின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு கும்பெனியாரது உத்தரவுகளை மதித்து நடக்கும் மனோபாவம் சேதுபதி மன்னருக்கு இல்லை என்ற உண்மையைத் தெளிவாகடப புரிந்து கொண்ட கும்பெனித் தலைமை சேதுபதி மன்னர் மீது போர்தொடுத்துச் சேதுநாட்டைக் கைபற்றுவதற்கான இரகசியத் திட்டத்தைத் தீட்டியது.
சேதுபதி மன்னரது ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் உள்ள பயிற்சி பெற்ற நாலாயிரம் போர்வீரர்கள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் பற்றியும் சிந்தித்துத் தங்களது திட்டத்தை முடிவு செய்தனர். ஆனால் சேதுநாடு முழுவதும் அப்பொழுது வறட்சியின் பிடியில் சிக்கி இருந்ததால் திட்டத்தை அமல்படுத்தாமல் தாமதித்து வந்தனர்.
புத்தாண்டு பிறந்தது.கி.பி.1795 பிப்ரவரி எட்டாம் நாள். உதயதாரகை கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது. கும்பெனியாரது பெரும்படை அணிகள் வரிசை வரிசையாக இராமநாதபுரம் கோட்டை வாசலைக் கடந்து மன்னரது அரண்மனையைச் சூழ்ந்து கொண்டன. கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் தனபதி மார்டினின் பொறுப்பில் இருந்ததால் கும்பெனியாரது திட்டம் முழுமையாக இரகசியத் திட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது. சேதுபதி சீமை வரலாற்றில் வேதனை நிறைந்த பகுதி தொடங்கி விட்டது. மன்னரோ மன்னரது வீரர்களோ எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாத நிலை. கும்பெனியாரின் வஞ்சகத் திட்டம் நிறைவேறியது ! சிங்கத்தை அவனது குகையிலேயே விலங்கிட்டது போல, பாளையங்கோட்டை அணிகளுக்குத் தலைமை ஏற்று வந்த தளபதி ஸ்டீவென்சன் சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சி சிறைக்கு அனுப்பி வைத்தான். கலெக்டர் பனியும், தளபதி மார்டினும் அரண்மனையைக் கொள்ளையிட்டு விலை உயர்ந்த அணிமணிகளையும், அரசு கருவூலப் பணத்தையும் கைபற்றினர். அவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். குடிமக்கள் குழப்பம் செய்யாமல் இருக்கக் கோட்டைப் பகுதி எங்கும் பீரங்கி வண்டிகளும் வெடிமருந்துப் பொதிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
சேதுபதி சீமையில் கும்பெனியாரது நேரடி ஆட்சி. அடங்க மறுத்த மன்னர் அடக்கப்படவில்லை, நீக்கப்பட்டுவிட்டார் என்றாலும் சேதுபதி மன்னரது குடிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கும்பெனியாருக்கு வரி செலுத்த மறுத்தனர். அவர்களது நிலங்களைக் கும்பெனியார் நில அனவை செய்து வரிவிதிப்பு செய்வதையும் எதிர்த்தனர். இந்த அமைதியான எதிர்ப்புகளைக் கலெக்டர் ஜாக்ஸன் வன்முறையில் அடக்கியொக்கினார். இதனால் மக்கள் தளர்ந்து விடவில்லை. மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து தப்புவிக்க முயன்று தோற்றார். பின்னர் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை தொடங்கினார். 24.4.1799 தேதியன்று முதுகுளத்துhர், அபிராமம், கமுதி ஆகிய ஊர்களின் கச்சேரிகள் தாக்கப்பட்டு கும்பெனியாரது ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டன. தானியக் களஞ்சியங்களும், கைத்தறித் துணிக் கிடங்கிகளும் சூறையாடப்பட்டன. இவ்விதம் மக்களைத் திரட்டிக் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சியில் பக்கத்து பாளையங்களான குளுத்துhர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சாலங்குறிச்சி மக்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இந்தக் கிளர்ச்சி கும்பெனியார ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது.
கி.பி. 1800-1801-இல் இந்த மக்களது கிளர்ச்சி, சிவகங்கைப் பிரதானிகளது ஊக்குவிப்பினால் மீண்டும் துளிர்த்தது. இப்பொழுது இந்தக் கிளர்ச்சி, இராமநாதபுரம் சீமைப்பகுதிகளில் மட்டுமல்லாமல் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் சீமைகளிலும் பரவியது. கும்பெனியரது சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன், அவர்கள் வருவாய் பெறும் வழிகளும் சிதைக்கப்பட்டன. அவர்களது ஆயுதப்படை மக்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அடக்கத் திராணியற்றுத் திகைத்தது. ஆதலால், மிருகபலமும் அசுரப்பண்புகளும் கொண்ட மலேயா, இலங்கைப்படைகள் வரவழைக்கப்பட்டன. மறவர் சீமை மக்களை அவர்கள், ஓநாய்கள் கடித்துக் குதறுவ போலத் தாக்கி அழித்தனர். வீரத்தையும், மானத்தையும் கொண்டு வீறுபெற்றுப் போராடிய மறவர்களது வேலும், வாளும் விளையாட்டுப் பொருளாக வெடிமருந்து வீச்சில் நொறுங்கி அழிந்தன. முடிவு வெற்றி ஆன்ம பலத்திற்கும், ஆருயிர் இலட்சியங்களுக்கம் அல்ல. ஆயுத வலிமைக்கு !
மறவர் சீமையின் மகத்தான மக்கள் புரட்சி இம்முறையும் தோல்வி கண்டது. கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய தளபதி மறிலப்பன் சேர்வைக்காரரையும் மீனங்குடி முத்துக் கருப்பத்தேவைரையும் கும்பெனியாரின் கைக்கூலிகள் வேட்டை நாள்களைப் போலத் தொடர்ந்து சென்று, இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொடுத்துக் கும்பெனியாரது சன்மானத்தைப் பெற்றனர்.
இனிமேல் மறவர் சீமையில் தங்களை எதிர்ப்பதற்கு வீரமறவர் எவரும் இல்லை என்னும் நிலையை உணர்ந்த கும்பெனியார், மறவரது மகுடமாக விளங்கிய கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். கர்ணனது கவசக் குண்டலங்களைப் போல மறவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்து அழித்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக வறட்சியிலும், வறுமையிலும் நைந்து நலிந்த குடிமக்கனைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்தனர். இவ்வளவும் செய்தும் கும்பெனித்தலைமைக்கு சேதுபதி மன்னரைப் பற்றிய பயம் நீங்கவில்லை. மீண்டுமொரு கிளர்ச்சி ஏற்பட்டால்….? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
இந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் சூத்திரதாரி திருச்சிக் கோட்டைச் சிறையில் உள்ள சேதுபதி மன்னர் என்பதை கலெக்டர் லுhஷிங்டன் கண்டறிந்தார். சேதுபதி மன்னரை மக்கள் தொடர்பு கொள்ளாத வண்ணம் நீண்ட துhரத்தில் உள்ள நெல்லுhர் அரஷக்கு மாற்றுமாறு குடமபெளித் தலைமைக்குக் கலெக்டர் பரிங்துரைத்தார். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைமயில் குண்டு துளைக்காத அறையொன்றில் சேதுபதி மன்னர் அடைத்து வைக்கப்பட்டார்.
அங்கும் ஆண்டுகள் பல கழிந்து – கோட்டைச் சவற்றிற்கும், சிறைக் கதவுகளின் பாதுகாப்பு எல்லைக்குள்ளும், இரவு பகல் என்ற பேதமற்ற பெருங்கொடுமையான அந்தச் சிறை வாழ்க்கையை நொடிப்பொழுதில் எண்ணிப்பார்ப்பது இயலாத காரியம். உணர்ச்சிகள் மயக்கப்பட்டு, உள்ளத்தின் நம்பிக்கைகள் நசுக்கப்ப்ட்டு அந்த சிறைவாசத்தில் கழியும் ஒவ்வொருவினாடியும் ஒரு யுகத்திற்கு சமமானது. ஆடம்பரத்திற்கும் அனைத்துச் சுகபோகங்களுக்கும் உரியவராக இருந்த இந்தச் சேதுபதி மன்னர், இவ்விதம் பதினான்கு ஆண்டுகளைக் கழித்ததே ஒரு புதுமை. பெரும் சாதனை. நாற்பத்து எட்டு ஆண்டுகால ஜீவியத்தில் அருபத்து நான்கு ஆண்டு சிறை வாழ்க்கையில் செல்லரித்த அவரது உடல் ஒடுங்கியது. 23.1.1809 ஆம் தேதி இரவில் அவரது உயிர் பிரிந்து அமரரானார்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தப் புனித பாரத பூமியில் இருந்து அகற்றி ஒழிக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளினை எய்த எத்துணையோ கிளர்ச்சிகளும், போராட்டங்களும் நடத்தப்பெற்றதை வரலாற்றுப் பதிவுகளில் காண முடிகிறது. கி.பி.1827-இல் வடமாநிலங்களில் நிகழ்ந்த சிப்பாய்களது கிளர்ச்சி, கி.பி. 1827-31 -,ல் கர்நாடக மாநில கிட்டூர் சமஸ்தானத் தன்னுரிமைக்குப் போராடிய கிட்டூர் ராணி சின்னம்மாளது போராட்டம், கி.பி. 1806 -இல் வேலுhர் கோட்டைச் சிப்பாய்கள் வெள்ளையருக்கு எதிராக துhக்கிய கலகக்கொடி, கி.பி.1802-இல் திருவாங்கூர் சமஸ்தானத் தளவாய் வேலுத்தம்பி மேற்கொண்ட கிளர்ச்சி, கி.பி. 1800-இல் கர்நாடகத் தளபதி துhந்தியாவாக் மக்களைத் திரட்டிக் கும்பெனியாருடன் பொருந்திய போர், கி.பி. 1801 -இல் சிவகங்கைப் பிரதானிகள் மருது சகோதரர்களும் ஊமைத்துரையும் கும்பெனியாருக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பொருந்திய போர்கள், இவைகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது, கி.பி. 1792-95-இல் சேதுபதி மன்னர், கும்பெனியாரது ஆதிக்கப் பேராசைகளை அழித்து ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளும், போர் ஆயுதங்களும் ஆகும்.
திப்பு சுல்தானுக்கு அஞ்சாத கும்பெனியார் சேபதி மன்னரது விடுதலை வேட்டைக்கு அஞ்சினர். குற்றச்சாட்டுக்கள், விசாரணை எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்துக் கொன்றனர்.
இறைவனது சந்நிதானத்தில் இணைந்து ஒளிரும் இலட்ச தீபங்கள் ஒளிபெறுவதற்கு ஒரே ஒரு சுடர்தான் பயன்படுகிறது. அதனைப் போன்று இந்த நாட்டின் விடுதலை வேள்விக்கு – இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தீரர்களது உள்ளங்களில் உயிரினும் மேலான நாட்டுப் பற்றையும் நலமான சிந்தனைகளையும் புகுத்தி, வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழச்செய்து வெற்றி காண்பதற்கும், சுதந்திர தேவியின் சந்நிதானத்தைச் சுடர்மிகுந்த ஆலயமாக்குவதற்கும் மறவர் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் என்ற அக்கினிக்கொழுந்து பயன்பட்டுள்ளது.
தமது அரிய வாழ்க்கை முழுவதையும், அன்னிய ஆதிக்கக் கனவுகளுக்கு எதிராக, விடுதலை வேள்விக்கு ஆகுதியாக அளித்து, சுதந்திர யாகம் சுடர்விட்டு பொலிய, தியாகியான அந்த இளம் மன்னர் பற்றிய வீர நினைவுகள், அவரது விடுதலை முழக்கம் வருங்காலத் தலைமுறையினர் பிறந்த மண்ணை நேசித்து நாட்டுப்பற்றுடன் வாழ நினைவூட்டும் என்பதில் ஐயமில்லை!
கட்டுரை ஆக்கத்திற்கு துணையான ஆவணங்கள், நுhல்கள்:
1. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பக ஆவணங்கள்
2. சேதுபதி மன்னர் செப்பேடுகள்
3. இராமநாதபுரம் சமஸ்தான மான்யுவல் (ஆங்கிலம்) – ராஜாராம் ராவ்
4. இராமநாதபுரம் சமஸ்தான நிலமானியக்கணக்கு
5. மதுரைச் சீமை வரலாறு – (ஆங்கிலம் ) நெல்சன்
6. மதுரை வரலாறு (ஆங்கிலம் ) – டாக்டர்.கே. இராஜய்யன்
7. மறவர் வரலாறு ( கி.பி. 1700-1800) ஆங்கிலம் டாக்டர் எல். கதிர்வேலு
8. மற்றம் சுவடிள், கல்வட்டுகள்.
நன்றி : http://thevar.co.இன்
தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்
1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார்ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார்.
அப்படி பசும்பொன் பெருமகனார் கேட்டதற்குக் காரணம், இன்று போல் 18 வயது வந்தோரெல்லாம் அன்று வாக்களிக்க முடியாது. யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் பெருமகனார் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “தேவரையா! எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று தாயும் மறுத்த காலம் அந்த காலம்.
அதற்கு மேல் பசும்பொன் பெருமகனார் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் பெருமகனார்.
பசும்பொன் பெருமகனாரின் வழிகாட்டுதலும் தேர்தல் பணிகளாலும் இத்தேர்தலில் காமராஜரின் விருதுநகர் நகரசபை தேர்தலில் வெற்றியும் பெற்றார். .. செட்டிநாட்டு வட்டாரத்தில் காங்கிரஸ் மானத்தைக் காத்த தேவர், விருதுநகர் வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்று கேள்விப்படுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் வீதியில், ஜில்லா போர்டு தேர்தல் நடந்த சமயத்தில் காமராஜரின் வேட்டியை உரிந்து விட்டு இரண்டு சண்டியர்கள் வேட்டியை இருபுறமும் மிதித்துக் கொண்டார்கள். வேறு இரண்டு சண்டியர்கள் சாணி உருண்டைகளை முகத்தில் எறிந்தார்கள். இந்த சம்பவத்திற்கு மேலாக தற்போது இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டியிருக்கும் தகவல் பசும்பொன் பெருமகனாருக்குக் கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார். காமராஜரை சந்தித்து மேலே சொன்னவைகள் உண்மை தானா என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர். அன்று இரவு விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் பெருமகனார் பேசினார். அவர் பேச்சில் தீப்பொறி பறந்தது. “இங்கே இருக்கிற நாடார் உறவின் முறை மகமை கடைக்காரர்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் சில லட்சங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டுவதாக கேள்விப்படுகிறேன். இங்கிருக்கின்ற ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுக்கு வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து போவதை சாதகமாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு நடந்தால் அந்த அறியாமைக்காக அடியேன் வருத்தப்படுகிறேன். நாங்கள் வெள்ளைக்காரர்களையே எதிர்க்கும் கூட்டம், உங்களை எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்கு முடியாத காரியமல்ல. விருப்பமான காரியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 1936-ல் நடந்த தேர்தலின் போது காமராஜரை வேட்டியை உரிந்து படுத்திய பாட்டை கேள்விப்பட்டேன். சூழ்நிலை அந்த நேரம் இங்கு நான் வரமுடியாமல் போய்விட்டது. இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன். காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார். அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் பெருமகனாருடைய ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் வி.வி.ராமசாமி நாடார் கேட்டார். அதற்கு கலெக்டர் “உங்கள் வீட்டுக்கோ நடத்தும் பொதுக் கூட்டத்திற்கோ பந்தோபஸ்து கேட்டால் நாங்கள் தாராளமாகக் கொடுக்கலாம். நீங்கள் கேட்பது போல் ஓட்டுக்கேட்கப் போகும்போது போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தால், தேவர் சாதாரண மனிதரல்ல. போலிசோடு நீங்கள் ஓட்டுக் கேட்பதை போட்டோ எடுப்பார். ஜஸ்டிஸ் கட்சி போலீஸை வைத்து தேர்தல் நடத்துகிறது. போலீசாரை வைத்து மிரட்டி ஓட்டுக் கேட்கிறது என்று கோர்டுக்குப் போவார். அதன்பின் எங்கள் நிலை என்னவாகும்” என்று சொல்லி மறுத்தார். வி.வி.ராமசாமி நாடார் கிராமங்களுக்குப் போய் ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜ் நாடார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜ் நாடாரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான்.
பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்
பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்
ஆன்மீக ஞானி,
தேசியத் தலைவர்,
பொதுவுடைமைத் தலைவர்,
வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட
அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.
பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்
ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானியாரின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசு ஆட்சியை வகுக்கும்.
ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இங்கே இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.
தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.
உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.
ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.
பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன் மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.
ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.
அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.
இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.
நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.
ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.
தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.
உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.
