மருதுபாண்டியர் ஆக்கிரமித்துக் கொண்டனரா?

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை.
வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம்.
ம.போ.சி கூறியதாவது:
“முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்”
இவ்வாறு உறுதியாகச் சான்று கூறிய ம.போ.சி அவர்கள்.
மேலும் தொடர்கிறார்:-
“அவர் மனைவி வேலுநாச்சியார் சிவகங்கைப் பாளையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும் அதுவரை தளபதியாக இருந்துவந்த மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்”
என்று தமது நூலின் பக்.62 ல் குருப்பிட்டுள்ளார். இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ம.போ.சி. அவர்கள் தமது நூலின் முன்னுரை பக்.6 ல் கூறிய கருத்துக்களுக்கும், வரிவடிவில் தீட்டிய பக்.62  க்கும் என்ன தகுதி இருக்கின்றது. எந்த அடிப்படையில் இதை எடுத்துக் கொள்வது. குழப்பத்தையே உண்டாக்குகின்றதே தவிர வரலாறு காண முடியவில்லை.
23-05-1772 ல் மன்னர் முத்து வடுகநாததேவர் மறைந்தார், என்று இராமநாதபுரம் மாவட்டச் சுவடி பக்.890 ல் சான்று உள்ளது.
வேலுநாச்சியார் நீடித்து இருக்க விரும்பவில்லை. நாட்டின் நலன் கருதியும், மக்களது மனநிலையையும் அறிந்தார். ஆட்சிப் பொறுப்புகளை மருதுபாண்டியர்களிடம் ஒப்படைப்பதாக மக்கள் மன்றத்தில் அறிவித்தார். 1780ல்  தான் அரியணை அமர்ந்தனர் மருதுபாண்டியர்கள்.
“வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும், மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்” என்கிறார் ம.போ.சி.
எட்டு ஆண்டுகள் அரியணையில் இருந்தவர் வேலுநாச்சியார் அவர்கள். யானைமலை, திண்டுக்கல் வாழ்வு என்னாயிற்று? உடன் இருந்தவர்கள் இருந்தவர்கள் மருதுபாண்டியர்கள். ஆக்கிரமிப்பு நடந்தது எப்போது?
மேலும் “உயிரை காப்பாற்ற தவறி விட்டனர்” என்று எழுதியுள்ளார் .
மாற்றானுக்கு ஒரு அங்குல இடம்கூட தரமாட்டேன் என்று உரிமை முழக்கமிட்டு களம் புகுந்தவர் மன்னர் முத்து வடுகநாத தேவர்.
தளபதிகளாக இருந்த மருதுபாண்டியர்கள் கச்சை வரிந்து கட்டிக்கொண்டு கையில் வாளெடுத்து காலத்திலே வெள்ளையர் தலைகளை வெட்டி வீழ்த்துவதிலேயே முன்னணி சென்றவர்கள். வாளையும் கையையும் மடக்கி கொண்டு, வெண்கவரி வீசிக்கொண்டு  பதுமை போல் முத்துவடுகநாதரின் பின் சென்றவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் – “தேவர் முரசு” மார்ச்சு 86 குறிப்பு.
கூலிப்படையின் வஞ்சகத்தால் சின்ன மருது சிக்கிக்கொண்டார்.
பெரிய மருதுவை கைது செய்ய முடிந்ததா?
அவர் கையில் விலங்கு பூட்ட முடிந்ததா?
கோழை போல்  அவரை தூக்கில் வெள்ளையர் கையால் தொங்கவிட முடிந்ததா?
இத்தகு வரலாற்று சிறப்புப் பெற்ற மான மறத்தமிழ் மன்னர் மருதுபண்டியர்களுக்கும் வேலுநாச்சியாருக்கும் களங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூலிப்படைகள், வெள்ளைப்படைகள் செய்த சதித் திட்டங்களை போன்று நழுவவிடாமல் ம.போ.சி. அவர்களும் களங்கத்தை உருவாக்கி அதை வரலாறு என்றும் அதை உறுதிப்படுத்தி கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி தான் மேலே குறிப்பிட்டுள்ள அவர் எழுதிய வரிகள். நாடு மொழி, இனம் என்றும் முப்பிரிவிற்கும் உரிமையான மறத்தமிழ் மன்னர், மக்கள் எல்லாம் அவர்களை மருதீசர், மருதேந்திரன், மருதுபூபதி என்று தங்களது இதயத்தில் தெய்வமாக வைத்து வணங்கி வந்தனர், வருகின்றனர்.
சாந்து சக்கரைப் புலவர் இயற்றிய தர்க்கயாகப் பரணியின் 18 பாடல்கள் இதற்கு சான்றாகும். வெள்ளையர்களை மட்டும் எதிர்த்து வீரமுழக்கமிட்டு, மாற்றான் டச்சுக்காரனின் காலடி பணிந்து பணத்தை சேர்த்துக் கொண்ட மாவீரர்கள் (கட்டபொம்மன் போல்) அல்ல மருதுபாண்டியர்கள்.
தன்னுயிர் காக்க மட்டுமல்ல, நாட்டின் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்தவர்கள். சுயநலம் பறிபோகிறது என்பதற்காக அவர்கள் வெள்ளையர்களை எதிர்த்த மாவீரர்களும் அல்ல.
தஞ்சமென்று வந்தவர்களுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து, அவரின் உயிர் காக்கப்பட தன்னையே அழித்துக் கொண்ட பார் வேந்தர் மருதுபாண்டியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
“மருது உன்னைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை நாங்கள். நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்துவிடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என்று தளபதி வேல்சு வேண்டினனே ஏன்? ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாலா?
மேலூர் கள்ளர்கள்:

வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? யார் முழங்கியது?
மயில்றாயன் கோட்டை, மேலூர் கள்ளர்களிடம் மதுரை நாயக்கர் அரசு வரிப் பணம் கேட்டு வந்தபோது அவர்கள் முழங்கிய வீர முழக்கங்களை தாங்கள் தான் முலங்கியதாகப் பெயர் பதிய வைத்துக் கொண்டவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள்.
மதுரை மாவட்ட விவரச்சுவடி பக்.88 ல் அறிஞர் பிரான்சிசு எடுத்துக்காட்டியுள்ளார்.
நிம்ராட்: பாபிலோனிய சக்கரவர்த்தி ‘நிம்ராட்’ என்பவன் உலகமகா வீரனாகத் திகழ்ந்தவன். அவனுக்கு இணையாக விளங்கியவர் மருதுபாண்டியர். கீழ்த்திசை நிம்ராட் என்று தளபதி வேல்சு பாராட்டியுள்ளான்.
நெல்லை மாவட்டச் சரிதை பக்.212-213 ல் அறிஞர் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.
மனுநீதிச் சோழனை காண விரும்புபவர்கள் அவனது அரண்மனை வாயிலில் கட்டி இருந்த பெரிய மணியை அசைத்துப் பின்னர் இசைவு பெற்றுத்தான் மன்னரைக் காணவேண்டும்.
ஆனால்…! மருதுபாண்டியர்கள் பற்றி வேல்சு கூறுகிறார்.
தென்றல் விளையாடி வந்த சீமையிலே சுழட்டி அடிக்கும் சூறாவளிப் புயலாக 1801ம் ஆண்டு மே திங்கள் ஊமைத்துரை உருவிலே வந்தது.
அகதியாக வந்து அடைக்க்கலாமானான் மருதுபாண்டியர்களிடம் என்பதை மறந்துவிடக் கூடாது.
வரலாறு:
இன்றைய நிகழ்ச்சி எதிர்கால வரலாறு, உண்மைச் செய்திகளை எடுத்தக் காட்டும் ஓர் காலக் கண்ணாடி ஆகும். அதுவும் கூட அன்றே கலப்படமாகி விட்டது!
“ஒருவருடைய வரலாறு எழுதப்பட வேண்டுமேயானால், அவர் மறைத்த பின்னர் தான் எழுதப்படவேண்டும். அவரோடு தொடர்பு கொண்டவர்கள் கல்விப்பயிற்சி முகுந்தவர்களால் தான் எழுதப்படவேண்டும். அது தான் உண்மையான வரலாறு ஆகும். பிற்காலத்தில் எழுதுவது என்பது பொய்யும், புனைந்துரையும் புகுத்து விடும்” என்பது பாம்பன் சுவாமிகளின் திருவாக்கு.
அதை முழுமையாக ஏற்றுக்கொண்ட ம.போ.சி. தமது நூலில் முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எழுத்து வரி வடிவிலே அமைக்கபடுகின்ற போது முழுமையாகவே தமது கருத்துக்களை புறக்கணித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.
மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று உறுதியான எடுத்துக்காட்டு எந்த அடிப்படையில்? என்ன தகுதி? என்பது இளையோர்களது   கேள்வி? சொல்லித்தானே ஆகவேண்டும் பதில்!
ஏன்? என்ன காரணம்?
ம.போ.சி எழுதிய நூல் வரலாறு மட்டுமல்ல, தேசியச் சொத்து(!), தமிழத்தின் பங்கு. இதை மறந்துவிடக் கூடாது. பதில் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.
எனவே, அவரது அணுகுமுறை, அவரது கருத்துக்களுக்கே மாறானதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. அந்த தேசிய தமிழகப் பங்கு நூலினால் விடுபட்டுப்போன செய்திகளை உரக்க சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது மறத்தமிழ் தேசிய மக்கள்.
எனவே, இந்திய தேசிய வரலாறு தமிழத்தின் பங்கு அல்ல என்பதை உறுதியாக எடுத்துக்காட்டுவது தவறாகாது.
இந்திய துணைக் கண்டத்திலேயே வழிகாட்டியாகவும், தமிழகத்தின் மிகப்பெரிய ஓர் தேசிய இனத்தின் உண்மை நிகழ்சிகளை ஆய்ந்து அதை நியாப் படுத்தி வெளியிட வேண்டிய கடமை தவறிய நூல் தேசிய வரலாறு ஆகுமோ?
இதை வரலாறு என்று ஏற்றுக் கொள்ளப்படுமேயானால்…?
எதிர்காலம் வரலாற்று ஆசிரியர் என்று எவரும் பெருமை பேச முடியுமோ? தமிழகம் மட்டுமல்ல. தமிழுலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படலாம் (ஏற்கனவே பாதி அப்படித்தானே இருக்கிறது இப்போது) என்பதை சுட்டிக் கட்டுகின்றோம்
எனவே, நற்றமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் எல்லாம், பல்வேறு நிலைகளிலும் எதிர்த்து வீரப்போர் புரிந்த மறத்தமிழ் மக்கள், மாவீரன் பூலித்துரைப் பாண்டியன், முத்துவடுகநாதத்தேவர், மாவீரத்தளபதி வெள்ளையத் தேவன், மருதுபாண்டியர்கள் ஆகிய மறத்தமிழ் மக்களின் உரிமை முழக்கங்களையும், தங்களது குருதியை இம்மண்ணில் ஆறாகப் பெருக்கியும், உயிர் நீத்த வீர வரலாறுகள் அறிந்தீர்கள். அதே நேரத்தில் வந்தவன் கால்களில் மண்டியிட்டும் சுயநலம் பேணி மக்களிடம் குழப்பம் உருவாக்கியும் மறத்தமிழ் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த துரோகச் செயல்களையும் பார்த்தீர்கள்.
அத்துடன்…
எது உண்மையான வரலாறு? வரலாற்று புரட்டு எது என்பதையும் தெரிந்து கொண்டீர்கள்.
எனவே தியாகி யார்? துரோகி யார்? வீரர்கள் யார்? கோழைகள் யார்? வீரர்களுக்குரிய மரியாதையைச் செய்ய தவறி விடமாடார்கள் என்று நம்புவோமாகுக.
(ஆசிரியருக்கு, இன்றும் ராஜராஜன், பூலித்தேவன், மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தமிழும் தமிழரும் உள்ளவரை இது நடக்கும். எத்தனையோ நல்ல வீரிய உள்ளங்கள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி எம் தமிழ் பூமி. அவர்களின் எண்ணங்கள் என்றும் இங்கே உறைந்து நின்று அனைவரையும் காக்கும் – வீரத் தமிழ் மைந்தர்கள்.) ஒலிக்கட்டும் உண்மை வரலாறு.
நன்றி - “விடுதலைப் போரின் மறத்தமிழர் உண்மை வரலாறு”
சமுதாய விடிவெள்ளி திரு. வி.ஆ. ஆண்டியப்பத்தேவர்.
நன்றி : http://thevar.co.in/
 
 
 
....

சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன்?

உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம்.
“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.
“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார்.  ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.
வீட்டுக்கு வந்த தமது மனைவியை பார்த்து குழந்தை எங்கே? என்று கேட்டாராம் மங்களத்தேவர். பதறிப்போய் தாய் தேடிப் புறப்பட்டாள். மற்றும் சிலரும் தொடர்ந்து காடு சென்றனர். கிடைக்கவில்லை. அந்தக் குழந்தை தான் அரண்மனையில் வளர்ந்து வருகிற வெள்ளையத்தேவனாகும் .
இது தான் அந்தக் கட்டுக்கதை. பொய்ப் புரட்டு.
மறக்குலத் தாய்மார்களுக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளனர்.  தாய்மார்கள் தன்னுயிரைக்கூட இழக்கத் துணிவர். ஆனால்…..! தமது குழந்தையை வினாடியும் விட்டுப் பிரியாதவர்கள். விறகு வெட்டப் போனவள் குழந்தையை மறந்து விட்டு வந்துவிட்டாள் என்பது தாய்க்குலத் துரோகச்செயலாகும். அடுத்து காட்டுக்கு வேட்டையாட வந்த கட்டபொம்மன் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து வளர்த்தான். படைத்தலைவனாக்கினான். அவன் தான் வெள்ளையத்தேவன். உண்ட கடனுக்காக உயிர் கொடுத்தான். செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான் என்று மறக்குல மாண்புக்கு மீது அழியாப் பழி சுமத்தியுள்ளனர்.
என்றாலும்…… தவறு யாருடையது?
மறக்குல மக்களே அடிச்சுவடுகூடத் தெரியாது, புரியாது அவல நிலையில் இருக்கின்றனரே.  வரலாறு எழுதுபவர்களாவது உண்மை நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடாது முறையானவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது தான் வரலாறு ஆகும். தவறினால் திறனாய்வு இல்லாத புரட்டர்கள் என்ற களங்கம் ஏற்பட்டுவிடும்.

கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03-01-1760
பட்டம் ஏற்றுக் கொண்டது 02-02-1790
அவன் தூக்குக்கயிற்றில் தொங்கியது 16-10-1799
மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி தான்.

02-02-1790ல் பட்டம் ஏற்றவன் வேட்டையாட காட்டிற்குப் போகிறான். கண்டெடுத்தான் ஒரு குழந்தையை. பொடி நடை பயிலும் வயது. சண்டை துவங்கியது. 1798 ல் இந்த ஒன்பது ஆண்டு காலத்திற்குள்ளாக வளர்ந்து வில், வாள் பயின்று வீரனாக படை நடத்தும் தலைவனாக ஆகிவிட்டான் என்றால்…..! மந்திர வித்தையா?
அவனுக்கு வெள்ளையம்மாளைத்   திருமணம் செய்திருக்க முடியுமோ? கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றை கதையாக தீட்டிவிட்டனர். கதையும் அல்ல. களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்று தீட்டிய புரட்டு, புனைந்துரையாகும்.
வெள்ளையத்தேவன்?
முத்தமிழ் நாடாம் வித்தகர் போற்றிப் புரக்கும் செந்தமிழ்நாடு சேதுபதி சீமை. அதன் அணிகலனாக உள்ள சிறு கிராமம் சாயல்குடி. அதன் அருகே மங்கம்மாள் சாலை இருந்ததால் சாலைகுடி என்று பெயர் இருந்தது. வசதிகள் நிறைந்த இடமாக இருந்தது. மேலும் பல தியாக வீரர்களை விளைவித்த நிலம், பின்னால் அது சாயல்குடி என்ற பெயராகி விட்டது.
அந்த சாயல்குடியில் வாழ்ந்து வந்த பெரியார் மங்களத்தேவர் அவர்கள். மக்கட் பண்புடன் வாழ்ந்த அவர் குறுநில மன்னரின் சிறப்புக்குரியவராகவும் இருந்தார். அவரது திருமகன் தான் வெள்ளையத் தேவன். சேற்றில் கண்டெடுத்தவன் அல்ல. சேது நாட்டின் செந்தமிழ் செல்வனே ஆகும்.
இளமையில் அவன் மறக்குல மாண்புடன் வில், வாள். ஈட்டி முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவனாக விளங்கினான். அவனது துணையாக இருந்தவர்கள் கட்டகருப்பணன், சுந்தரலிங்கம் என்ற இரு தாழ்த்தப்பட்ட (அரிசன)  இன வீரர்கள். இணைபிரியாத தோழர்களாவர்.
இந்த நிலையில்,ஒருநாள் கட்ரா, கட்டப்பிரமையா என்ற கம்பளத்து நாயக்கர் வாரிசு, வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கர் சாயல்குடி வந்தான். மங்களத்தேவர் அவர்களைக் கண்டான். எட்டயபுரம் அரசர் தமக்குச் செய்துவரும். தொல்லைகளையும், அதனால் தாம் அடைந்த இன்னல்களையும் எடுத்துக் கூறினான். ஆதரவு தந்துதவ வேண்டினார் தேவர் அவர்களிடம்.
“வெள்ளையத்தேவா….  !
வந்திருப்பவர் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் நம்மிடம் உதவி வேண்டி வந்திருக்கிறார். வந்திருப்பவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. எனவே, நீ உடன் சென்று அவருக்கு உறுதுணையாக இருந்து வெற்றி கொண்டு வா. உனக்குத் துணையாக உனது நண்பர்கள் கட்டக்கருப்பணன், சுந்தரலிங்கம் இருவரையும் வேண்டிய ஆட்களையும் கூட்டிச் செல்க” என்றார்.
தந்தை ஆணைப்படி தனையன் வெள்ளையத் தேவன் புறப்பட்டான். வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கரும் வந்து சேர்ந்தான்.
வெள்ளையத்தேவன் கட்டபொம்முவுக்கு உதவிக்கு வந்ததை அறிந்த எட்டயபுரம் அரசர் திசை திருப்பப்பட்டது. தென் நாட்டில் வந்த வெள்ளையர்களுக்கு ஆதரவு கொடுத்தார். எப்படியும் தனக்கு துரோகம் செய்த கட்டபொம்முவை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தாரே தவிர, எட்டயபுரம் அரசர் குமார முத்து எட்டப்பர் துரோகியல்ல. துரோகிகளை ஒழிக்க முன் வந்தவர்.
தமிழ்க் கலை வளர்த்தவர். பல தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். உமறுப் புலவர் போன்றோர்களை வளர்த்தவர். உறுதுணையானவர் தான் எட்டயபுரம் அரசர். எட்டயபுரம் மகாக்கவி பாரதியார் பிறந்த இடமல்லவா? தமிழ் வளர்த்த வள்ளல் எட்டப்பர் துரோகியாக்கப்பட்டார்.  தமிழனைக் காட்டிக் கொடுத்தும், கொள்ளை அடித்தும், கிட்டி போட்டு வசூல் செய்தவன் வீரானாகிவிட்டான் (கட்டபொம்மன்). அவனை வீரானாக்கிய பெருமை தமிழ் மண்ணுக்குத்  (ம.போ.சிக்கு) தான் உண்டு.
ஆதியில் எட்டயபுரம் அரசருக்கு உரிமையாக இருந்தது செக்காரக்குடி கிராமம். அங்குள்ள வேளாளர்கள் செழிப்பாக இருந்து வந்தனர். அவர்களை அடக்க எண்ணினார் எட்டயபுரத்தார். அப்பொழுது (எட்டயபுரத்தார்க்கு) தமது அடைப்பக்காரனாக இருந்தவன் தான் கட்ரா கட்டப்பிரமையா. அவனது வாரிசுதாரர் கருத்தையா என்ற கட்டபொம்முவை செக்காரக்குடி அனுப்பினார்.  வேளாளர்களை அடக்கியவன், தானே அங்கு பொறுப்பேற்றுக் கொண்டு எட்டயபுரத்தார்க்கு எதிரியாகிவிட்டான்.  அடுத்திருந்தது  வீரபாண்டியபுரம். அங்கு சென்றான். வீரபாண்டிய மன்னனிடம் அடைக்க்கலாம ஆனான். பணியிலும் அமர்ந்து கொண்டான். அவன் வாரிசு இன்றி காலமானதால், அவனுக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை நிறைவேற்றியவன். தானே வீரபாண்டியபுரம் அரசர் என்று பட்டமும் சூடிக்கொண்டான். எனவே வீரபாண்டியபுரம் அரசராக கட்டபொம்மன் ஆகிவிட்டானே தவிர பாண்டியன் அல்ல, பாண்டியன் மரபினனும் அல்ல.
எனவே, தஞ்சமென்று தந்தையிடம் அடைக்கலம் புகுந்த, வீரபண்டியபுரம் கட்டபொம்மனுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து தமது உயிரையும் தியாகம் செய்த மறத்தமிழ் மாவீரன் வெள்ளையத்தேவனே தவிர, செஞ்சோற்றுக்காக பிள்ளை புகுந்தவன் அல்ல. தாய்க்குலத்திற்கு துரோகம் செய்பவர் மறவர் மக்கள் அல்ல என்பதை நாடே அறியும்.

நன்றி :  http://thevar.co.in/
 
 
 
 
.....

பாவாணர் யார்?

தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ்   வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.
அதில் அடிகளாருடன் தொடர்பு கொண்ட புலவர்களை எழுதிகின்ற பொழுது மொழி ஞாயிறு பாவாணர் பெயர் இடம் பெறுகிறது:- “வித்துவான் தேவநேயப் பாவாணர் ஏன்.ஓ.எல். மொழித்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்”
இவர் பழந்தமிழ் அரிசன மரபினர். திருநெல்வேலி சீமையில் கிருத்தவ சமயம் புக்கவர். வடசொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆராய்ச்சியால் மாற்றிய அறிஞர்….! அடிகள் பால் அளவிறந்த அன்பும், மதிப்பும் பூண்டவர்” என்று இருக்கிறார்.
சொல்லுகிறார் பாவாணர்:
“நான் சங்கர நயினார் கோயில் (முத்துச்சாமித் தேவர் மகன்) ஞான முத்தனுக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும் 07.02.1902 அன்று வெள்ளி மாலை பிறந்தவன்.
சைவசித்தாந்தக் கழகம் ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்குப் பாவாணர் 02.11.1960 ல் எழுதிய கடிதம். “என்னையும் கேளாது மடைத் திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதி இருக்கிறது, நான் புத்தகத்தைப் பாராததினால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு மடைத்தனமாக எழுதினாலும், தாங்கள் எப்படி வெளியிடலாம்? நான் என்றேனும் எங்கேனும் என்னை அரிசன் என்று சொன்னது அல்லது எழுதியதுண்டா? – பாவாணர் கடிதங்கள் – சைவ சித்தாந்த நூற்பதிப்பு – ஒரு பகுதி (தொகுப்பு – இலக்கியச் செல்வர் இரா.இளங்குமரன்)
பாவாணர் மறுப்புரை:
சென்ற நூற்றாண்டில் நடுப்பகுதியில் கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் (சங்கரன் நயினார் கோயில்) இடையில் தூக்கக் (Storkes) என்ற மேனாட்டு கிருத்தவ குரவர் தொண்டாற்றி இருக்கிறார். அவர் வளமனைக் காவற்காரராக இருந்தவர் முத்துச்சாமித் தேவர். அவர் மனைவியார் வள்ளியம்மாள். அவ்விவிருவரையும் கிருத்துவராக்கி இருக்கின்றனர் அத்துரைமகனார். அவ்விருவருக்கும் பிறந்தவர் தான் என தந்தை.
என தந்தை பிறந்த சிறிது நாட்களில் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அத்துரையே எடுத்து வளர்த்து ஞானமுத்து தோக்கக் எனப் பெயரிடத் சொக்கம்மா என்ற பெண்ணை மரியாள் எனப் பெயர் மாற்றி உரிய பருவத்தில் மணமும் செய்து வைத்திருக்கிறார். அவ்வம்மையார் கூடி வாழாது ஈழத்திற்கு ஒடிவிட்டாள். உண்மைக் கிருத்துவரானதினால் கோவில்பட்டிப் பாண்டவர் மங்கலத்தில் ஓதுவராக (உபதேசியாக)  இருந்த குருபாதம் என்பவற்றின் மகளாகிய என அன்னையாரைப், படிப்பு பற்றியும் குல வேற்றுமை காட்டாமை பொருட்டும் மணந்து கொண்டார். 7ம்  எட்வர்டு இளவரசராக இருந்த காலத்தில் என அன்னையார் சாரா-டக்கர் கல்லூரியில் 3ம் தரம் படித்தரம்  (III Grade)…… தேறியவர்.
என தந்தையார் சன்கரன் கோயிலில் கணக்காயர் வேலை பார்த்தார். அங்குதான் நான் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. என தாயாருக்கு சொந்தமான இராசநாயகத் தேவர் பணவிடலியில் இருந்து அடிக்கடி வந்து போவார். எங்கள் வீட்டில் தங்கி விருந்துன்பார். உள்ளூரிலும் 3கல் தொலைவிலுள்ள களபபாளங்குளத்திலுள்ள குலச்சியரும், இளைஞரும் என தந்தையாரிடம் பயின்றனர். என தந்தையார் கணக்காயராக இருந்த பள்ளி தாழ்த்தப்பட்ட மக்கட்கேண்டு ஏற்பட்டதுதான். சங்கரன் கோயில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என அன்னையர் வழியை நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என உறவினர் அல்லாத நெடுஞ்செழியன் என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னை தன இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறான். அதை நம்பி….!
தமிழன் என்று தலை நிமிர்ந்து மார்தட்டும் வீரரும் மிடுக்கும் எனக்கு இருக்குமளவு சோ.சு.பாரதியாருக்குக் கூட இருந்தது இல்லையே. அங்ஙனம் இருப்பவும் என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும் தமிழரெல்லேருள்ளும் உயர்ந்தவனாகக் என்னைக் கருதிகிறேன். தாழ்த்தப்பட்டவன் என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு. அதிலும் வடவர் ஒருவர் (காந்தி) புணர்ந்த அரிசன் (ஹரிஜன்). மலல்மகன் என்னும் வரசொல்லாற் குறிப்பது. தந்தையார் வரலாற்றைத் தவிர வேறெதையும் எழுதத் தெரியாத மடைத் திருநாவுக்கரசை உடனி அழைத்து இம்முடங்கலைக் காட்டுக. மறைமலை அடிகளார் வரலாற்றிலும் என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிக. … …   …  … மடைத் திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும் வேண்டியதில்லை. என் தொண்டை இரண்டொரு ஆண்டில் உலகறியும். என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிய இயலாவிடில் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவதையும் காரச்சு மையலால் மறைத்துவிடுக.
என் தந்தையார் 1906ம் ஆண்டிலும், என அன்னையார் அதன் பின்பும் இறந்து போயினர். என தந்தையார் உயிரோடிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார் குலத்தை மறந்துவிட்டதானாலும், அவர் இறந்து அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்டதினாலும், அவர் முன்னோரைப் பற்றி இன்று பலருக்குத் தெரியாது.
எனவே, ஒருவர் வாழ்நாளிலேயே அவர்தம் மரபு பெருமைகளை அழிக்கப்பட்டு வரும் போது, மறைந்த தமது முன்னோர்கள் வரலாறு முழுமையாக மாற்றப்பட்டு வருகிறது என்றால்…….. வியப்புடையத்தன்று.
மான மறக்குல மக்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு உரிமைப் போராட்டத்துக்காக அருஞ்செயலாற்றி, உயிர் நீத்த தியாக வீரர்கள் வரலாற்றையும், அவர்கள் முழங்கிய தாரக மந்திர மொழிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வைர மணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது தெளிவான விளக்கங்களுடன். நீண்ட நாட்களாக எமது நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருந்த பணி ஒருவாறு நிறைவேறியது.
என்றாலும் கூட இன்னும் ஏராளமான வரலாறுகள், பழம் பாடல்கள் கும்மிகள் இருந்தும் பலருக்கும் தெரிந்தும் ஏனோ எடுத்துக்காட்ட முன்வரவில்லை. எனவே தான் உமையான வரலாறுகள், நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு வருகின்றது. விரைவில் புகழ் தேடிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று பெருமைகளை சிதைத்துவிட துணிவு கொண்டுள்ளது துரோகச் செயல்.
மாவீரர்களேல்லாம் நினைவோ, நினைவு மண்டபன்களோ இல்லை. எழுப்பவும் எவரும் முன் வரவும் இல்லை. என்றாலும் கூட காற்றும் மண்ணும் அவர்கள் வாழ்ந்த நிலத்தையே நினைவுச் சின்னமாக நம் மனக்கண் முன்னாள் காட்சியளிக்கின்றன. பேசுகின்றன. இனியாகினும் வீரர்கள் வாழ்வை எண்ணித் தலைவணங்கி அஞ்சலி செய்ய ஆணை செய்வோமாக.  தவறினால் ஈவிரக்கமற்று தண்டித்து விடும் எதிர்காலம்.


 நன்றி: http://thevar.co.in
 
 
 
 
....

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன.தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும்.இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர்.அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான்.அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக்(கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர்.சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர்.அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது.கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி,வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர்.அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

"வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு...

"பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!" (பதிற்றுப்பத்து 2: 1-16)

எனவும்,

"துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை" (பதிற்றுப்பத்து 17: 4-5)

எனவும்

"இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் " (பதிற்றுப்பத்து 20 :2-5)

எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள்(கி.மு.மூன்றாம் நூற்றாண்டு.பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

"சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன"(அகம். 347)

(பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)

எனவும்

"வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து" (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்)எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க,உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள்,மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம்,பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம்.அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது.தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்




....

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8).அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார்.உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம்மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் அரசனாக "மாந்தை" என்னும் ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்.இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர். பட்டத்து அரசியாக விளங்கியவள் வேளாவிக் கோமான் பதுமன்தேவி.இவர்களுக்குக் களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் என்ற மகனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற மகனும் இருந்தனர்.

பிறிதொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் (பெயர் அறியமுடியவில்லை)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மகனாகக் கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழு குட்டுவன் என்னும் மகனும் இருந்தான்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன்மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழுகுட்டுவன் என்பவனைச் செங்குட்டுவனாகச்(கண்ணகிக்குக் கல் எடுத்தவன்) சிலர் கருதுவர்.ஆனால் சிலப்பதிகாரச் செங்குட்டுவனின் தந்தை சேரலாதன் ஆவான்.தாய் ஞாயிற்றுச் சோழன் எனப்படும் சோழன் நல்லுருத்திரனின் மகள் நற்சோணை ஆவாள். செங்குட்டுவனின் தாய் நற்சோணை பட்டத்தரசியாவாள்.

வெல்கெழு குட்டுவன் சேரநாட்டை ஆளும்பொழுது(கி.மு.250- கி.மு.175) பிற பகுதிகளைக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆட்சி செய்துள்ளனர்.ஆனால் சேரன் செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சி செய்தபொழுது(கி.பி.50- கி,பி.125) பிறர் யாரும் சேரநாட்டை ஆண்டதற்கான குறிப்புகள் இல்லை.

எனவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுக்கும் காலத்தால் பிந்தியவன் சேரலாதன் மகன் செங்குட்டுவன்(சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரசன்) என்பதை அறிதல் வேண்டும்.

கடல் பிறக்கோட்டிய வெல்கெழுக்குட்டுவன் காலத்திலும் கடற்கொள்ளையர்கள் தொல்லை தந்துள்ளனர்.

கடற்கொள்ளைத் தொழில் செய்த கடம்பர்களின் மூலத் தாயகம் கொண்கானக்கரை எனப் பிற்கால வரலாற்று நூல்கள் சுட்டுகின்றன.ஆனால் கடம்பர்களின் பண்டையத்தளம் கடற்கரையில் இல்லாது கடலின் உள்ளே தீவில் இருந்திருக்க வேண்டும் என அறிஞர் கா.அப்பாத்துரையார் கருதுகிறார்(தென்னாட்டுப் போர்க்களங்கள்,ப.100).இத் தீவைக் கிரேக்கர்கள் "லெயூகே" அதாவது வெள்ளைத்தீவு என அழைத்தனர்.அது மங்களூரை அடுத்த தூவக்கல் என்ற தீவு என ஆய்வாளர்கள் கருதுவதையும் கா.அப்பாத்துரையார் தம் நூலில் குறிக்கின்றார்.

"லெயூகே" என்ற கிரேக்கச் சொல்லும் "தூவக்கல்" என்னும் பழந்தமிழ்ச் சொல்லும் இரண்டும்
வெள்ளைத் தீவைக் குறிப்பதாகும்.வெள்ளைத்தீவு எது?. தேடிப் பார்ப்போம்.

(ஒன்று மட்டும் விளங்குகிறது.தமிழக வரலாற்றுச் சான்றுகள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கேரள,கருநாடக,ஆந்திரப் பகுதிகளில் மிகுந்து கிடக்கின்றன.அவை கல்வெட்டுகள் ஊர்ப்பெயர்கள்,நம்பிக்கைகள்,இறைவழிபாடு எனப் பெருகிக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மலையாள, கன்னட, துளுத்தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.)


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்




....

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...

அழகர் கோயில் யானை முகப்பு

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள கருவறையில் அடக்கம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உள்ளதே தவிர அழகருக்கு உருவம் இல்லை.

அழகர் பற்றி வாய்மொழியாகப் பல கதைகள் உள்ளன.முறைப்படி தொகுக்கப்படவில்லை. நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்தலாம்.அழகர் கடும் சினம் உடையவர் என்றும் இவர் கோயில் அடர்ந்த காசாங் காட்டுக்கு நடுவே இருந்தது எனவும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.அச்சமூட்டும் காட்டுக்கு நடுவே அழகர் கோயில் இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் யானும் என் தந்தையார்,அம்மா,தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குச் சென்றுள்ளோம்.

எங்கள் இடைக்கட்டு வீட்டிலிருந்து மாளிகைமேடு,கங்கைகொண்டசோழபுரம் வழியே கொல்லைகளின் ஊடாகப் புகுந்து காட்டுவழியில் நடந்து சென்றுவந்த நினைவு உள்ளது. அப்பொழுது அந்தக் கோயில் பற்றி என் அப்பா பல கதைகள் சொல்வார்.

அங்குள்ள கோயிலுக்கு வருபவர்கள் கிடாவெட்டியும் பூசை செய்வது உண்டு.ஆனால் அழகருக்கு அது படைப்பது இல்லை.அழகர் புலால் உணவுக்காரர்.அருகில் உள்ள வீரபத்திரசாமி,கருப்பசாமி உள்ளிட்ட பிற சாமிகளுக்குதான் கிடாவெட்டிப் படைப்பர். அழகருக்கு சைவமுறையிலான படையல்தானாம்.

சமைத்த ஏனங்களை மக்கள் அங்குள்ள திருக்குளத்தில் போட்டு வந்துவிடுவார்கள்.அடுத்த ஆண்டு சென்று அடையாளமாக அதனை எடுத்துச் சமைத்து உண்பார்கள்.அதுவரை அந்த ஏனங்களை யாரும் எடுப்பதில்லை.கோயிலுக்குப் பல ஏக்கர் நிலம் உண்டு.சிலர் மட்டும்
வருவாய் தருகின்றனர்.

அழகர் பற்றிய வேறொரு செய்தி.

சத்திரம் என்ற பகுதி கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடதிசைச் செல்பவர்கள் தங்கிச் செல்ல உணவு,தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைப் பண்டு பெற்றிருந்தது.அதனால் அவ்வூருக்குச் சத்திரம் என்று பெயர்.இப்பகுதியில் பார்ப்பனச்சேரி(அக்கிரகாரம்)இருந்துள்ளது. காட்டில் அழகர் சாமி தவத்தில் இருந்ததாகவும் பார்ப்பனப் பெண்கள் இருவர் அங்கு உள்ள கிணற்றில் நிர் எடுக்க வந்ததாகவும் அப்பெண்கள் முனிவர் அருகில் இருந்த குடத்தை எடுத்து தண்ணீர் மொண்டதாகவும் தவம் கலைந்த முனிவர் அப்பெண்களைக் கிணற்றில் இறக்கும்படி செய்ததாகவும் இறந்த அந்த இரண்டுபெண்களும் தாமரை மலராக கிணற்றில் கிடந்ததாகவும் முனிவர் அக்கிணற்றில் இறந்ததாகவும் அக்கிணறுதான் பின்னாளில் வழிபடும் இடமாக மாறியதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.அதன் நினைவாகவே அழகர் கோயில்
உருவாகியுள்ளது.

அக்கிணற்றின் மேல் ஒரு படுக்கைக் கல்தான் இன்றும் மூலவர் நினைவாக வழிபடப்படுகிறதே அல்லால் முனிவருக்குச் சிலை இல்லை.(30.12.2008 களப்பணியில் பெற்ற தகவல். திரு. சேகர் என்பவர் வழி இத்தகவலை உறுதிசெய்துகொண்டேன்).

கோயிலுக்குப் பொங்கலை ஒட்டியும் தை மாதத்திலும் ஆடிமாதத்திலும் வெள்ளிக் கிழமைகளில் மக்கள் கூட்டமாக வந்து வழிபடுகின்றனர்.பொங்கல் முடிந்த கரிநாளில் நல்ல கூட்டம் இருக்கும் பல சாதியைச் சேர்ந்த மக்களும் வந்து வழிபடுகின்றனர்.செங்குந்தர் இனமக்கள் பலருக்கு இது குல தெய்வமாக உள்ளது. செங்குந்தபுரம், வாரியங்காவல், கொடுக்கூர், குவாகம், இலையூர், ஆண்டிமடம்,சின்னவளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந் தும் புதுவை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் செங்குந்தர் இனமக்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.

காலத்திற்கு ஏற்பப் போக்குவரத்திற்கு இன்று சாலை வசதிகள் உண்டு.மீன்சுருட்டியிலிருந்து மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளதால் மீன்சுருட்டியிலிருந்தும் அழகர் கோயிலை அடையலாம்.

இங்கு உள்ள யானைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றது.இது அழகர் ஏறி ஊர்வலம் செல்லும் பயன்பாட்டிற்கு என அதன் நினைவாக உள்ளது.இதன் காலம் காட்டும் சான்றுகள் அங்கு வைக்கப்படவில்லை.தொல்லியல் துறை இதுபற்றி விளக்கம் குறிப்பிட்டால் பயனாக இருக்கும்.கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த எத்தனையோ வரலாற்றுத் தரவுகள் சிதைந்ததுள்ளன.அச் சிதைவுகள் பலவற்றுள் இதுவும் ஒன்றாகவே உள்ளது.

இச்சிற்பம் தொன்மையானது என்பதால் சிதைந்து காணப்படுகிறது.இச்சிற்பத்தில் இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் காட்டப்படுகின்றனர்.அவர்கள் கையில் சங்கு, மத்தளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் உள்ளன.யானை ஒருவனைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது போல் உள்ளது.யானையின் மேலே மணிகள் உள்ளிட்ட அழகுக்காட்சி நன்கு உருவாக்கப்பட்டுள்ளளது.

யானையின் தென்புறப் பகுதியில் உள்ள மூன்று மாந்தர்களின் உருவம் சிதைந்துள்ளது. யானையின் உருவமும் சிதைந்துள்ளது.யானையின் கால் பகுதியில் வேலைப்பாடு சிறப்பாக உள்ளது.கழுத்தில் உள்ள மணிகள்,அணிகலன்கள் சிறப்பாக உள்ளன.பண்டைக்கால மக்களின் கலை உணர்வு காட்டும் அரிய இதனைப் புதுப்பித்துப் பாதுகாக்கவேண்டும். கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சுற்றுலா செல்பவர்கள் குழுவாகச் சென்றுவரலாம்.

இங்குதான் கங்கைகொண்டசோழபுரத்தின் வட எல்லைக் காளிக்கோயில் உள்ளது.

(பின்பும் விரிவாக எழுதுவேன்.என் படங்கள்,செய்திகளை எடுத்தாளுவோர் முறைப்படி இசைவு பெறுக.பெயர் குறிப்பிடுக)

யானை முகப்பு(வேறொரு தோற்றம்)
யானை முகப்பு
யானையின் பிடிக்குள் அகப்பட்டவன்
யானையின் வடபுறத் தோற்றம்
யானையின் வலப்புறத்தில் இசைக்கலைஞர்கள்
யானையின் முழுத்தோற்றம்(தென்புறம்)
யானையின் தென்புறத் தோற்றம்(சிதைவு)
கழுத்துப் பகுதி வேலைப்பாடு
யானையின் கால் பகுதியில் அழகிய வேலைப்பாடு
யானைக்கழுத்தில் அணிகலன்கள்
அழகர்கோயில் திருக்குளம்

புகழ்பெற்ற காளியின் சிலை(அழகர் கோயில்)





நன்றி :
திரு.சொ.அழகுவேல்,உள்கோட்டை.
 முனைவர் மு.இளங்கோவன்.






..

வீரா ரெட்டித்தெரு காளியம்மன் கோயில்(கங்கைகொண்ட சோழபுரம்)

கூரைக் கொட்டகையில்தான் இந்த அரிய சிற்பங்கள் உள்ளன

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நான்கு கல் தொலைவில் தெற்கே வீரா ரெட்டித்தெரு என்னும் ஊர்(பகுதி) உள்ளது.(வீரராகவ ரெட்டித்தெரு என்பது முழுவடிவம்) அங்கே புகழ்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது.கங்கைகொண்ட சோழபுரத்தின் தென் எல்லைக் காளியாக அது கருதப்படுகிறது.அங்குள்ள புகழ்பெற்ற கல் சிற்பங்கள் இங்கே காட்சிக்கு வைக்கிறேன்.பண்டைக்காலத்தில்(சோழர்கள் காலத்தில்) வட பகுதியிலிருந்து இச்சிற்பங்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என மக்கள் நம்புகின்றனர்.பாதுகாக்கப்பட வேண்டிய அரிய சிற்பங்கள் இதோ:
காளியம்மன் மார்பளவுப் படம்

சிவலிங்கம் உள்பட காளியம்மன்

காளியம்மன்


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்





...